Wednesday, November 9, 2011

சாதியும் - பே பால் நிறுவனமும்




 சென்னை யில் உள்ள அமெரிக்க நிறுவனமான பே பால் தனது நிறுவன ஊழியர்களுக்காக டும் டும் டும் என்ற ஆண்டு விழா நிகழ்ச்சியை அறிவித்தது.இந் நிகழ்ச்சியின் கரு 'இந்திய பாரம்பரிய திருமணம்'

இதற்காக இந் நிறுவன ஊழியர்கள் ஆறு அணிகளாக பிரித்தனர்.

அவற்ரில் மூன்றின் பெயர் தமிழ் நாட்டின் ஐயர்கள்,குஜராத் பட்டேல்கள், வங்காள பானர்ஜிகள்.

அதாவது அந்தந்த மாநில உயர் சாதியின் பெயரால் இந்தக் கொண்டாட்டங்களை நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

ஏற்கெனவே சாதி வெறி தலைவிரித்தாடும் தமிழகத்தில், இந்த பன்னாட்டு நிறுவனத்தின் இந்த செய்கையை, சேவ் தமிழ்ஸ் என்ற அமைப்பு வன்மையாகக் கண்டித்ததோடு, உடனடியாக இந்தப் பெயர்களை நீக்க வேண்டும், பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்று கோரியது. மேலும், சம்பந்தப் பட்ட நிறுவன வாயிலில் தங்கள் எதிர்ப்பைக் காட்டும் வகையில்  இந்த அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

இதைத் தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து பேச்சு நடத்தினர். இதைத் தொடர்ந்து தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, பகிரங்க மன்னிப்பு கோரியது பேபால் நிறுவனம்.

அலுவலக விழாவில் சாதிப் பெயரை பயன்படுத்தப் போவதில்லை என்றும், இதற்காக ஊழியர்களிடமும் பொது மக்களிடமும் மன்னிப்பு கோருவதாக அதிகாரபூர்வமாக கடிதம் ஒன்றை காவல் துறையினர் முன்னிலையில் சேவ் தமிழ் இயக்கத்தினரிடம் ஒப்படைத்தனர்.

இதைத் தொடர்ந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த சாதிப் பெயர் தாங்கிய விளம்பர தட்டிகளையும் அகற்றிவிட்டனர்.


 

5 comments:

goma said...

ஒரு அயல்நாட்டு நிறுவனம் இங்கே கால் பதித்து வளர்வதோடு நின்றுகொள்ளவேண்டும்.

அந்நியர் அறியும் வகையில் சாதி வெறியை நாமும் அவர்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டும் அளவு நடந்து கொள்ளுக் முட்டாள்தனத்தையும்
சொல்ல வேண்டும்

goma said...

ஒரு அயல்நாட்டு நிறுவனம் இங்கே கால் பதித்து வளர்வதோடு நின்றுகொள்ளவேண்டும்.

SURYAJEEVA said...

இதானா விஷயம்,

துரைடேனியல் said...

Ithu Pay pal illa Pei pal-a? Saathi veri ozhiyanum. Manitham malaranum. En kanavum athu than sago. Nandri!

சேக்காளி said...

அடிதடி,வெட்டுக்குத்து இல்லாம ஒரு சாதி பிரச்னை தீர்ந்துடுச்சா.