Friday, November 11, 2011

கூடங்குளம் மின்சாரம் இலங்கைக்கா..




சென்னையில் நேற்று நூல் வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டு பேசிய வைகோ

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த கலாமை மறைமுகமாக விமரிசித்தார்.

கூடங்குளம் பற்றி பக்கம் பக்கமாய் அறிக்கை வெளியிடும் சில பெரியவர்கள் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரளாவையும்,தமிழக மீனவர்களைத் தாக்கும் இலங்கையையும் எதிர்த்து குரல் கொடுப்பதில்லை என்றுள்ளார்.

இதற்காக கரிகாலன் கட்டிய கல்லணை பாதுகாப்பாகத்தானே இருக்கிறது என்றெல்லாம் பேசி வருகிறார்கள். இப்படி அணு மின் நிலையத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் பெரிய மனிதர்கள், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளத்தை கண்டிப்பதில்லை. தமிழகத்துக்காக குரல் கொடுப்பதில்லை. இலங்கை கடற்படையினரால் இதுவரை 600-க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்தும் அந்த பெரியவர்கள் கருத்து தெரிவிப்பதில்லை

தமிழகத்தை அனைத்து நிலைகளிலும் மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்து மின்சாரம் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது. இந்தத் தகவலை நாடாளுமன்றத்திலேயே மத்திய அரசு அறிவித்துள்ளது என்றார் வைகோ.

10 comments:

SURYAJEEVA said...

தமிழகத்தை உலுக்க இந்த வாதம் சரி வருமா என்று தெரியவில்லையே

இரா.கதிர்வேல் said...

அடப் பாவிகளா மின்சாரமும் இலங்கைக்கா!!!
இன்னும் என்னனத்தைக் கொடுக்கப் போறாய்ங்களோ.

MANO நாஞ்சில் மனோ said...

அப்துல்கலாம் சுப்பிரமணியன் சுவாமி ரேஞ்சுக்கு காமெடி பீசாகிப்போனாரே, வருத்தமாதான் இருக்கு...!!!

சூனிய விகடன் said...

கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் 2000 மெகாவாட்டில் 1200 மெகாவாட் மின்சாரம் இலங்கைக்கு செல்கிறது. மீதி 800 மெகாவாட்டில் 400 மெகாவாட் ஆப்கானிஸ்தானுக்கும், 150 மெகாவாட் திபெத்துக்கும், 100 மெகாவாட் பூட்டான் நாட்டிற்கும் போனது போக மீதி உள்ள 150 மெகாவாட்டில் 125 மெகாவாட் அந்தமான் தீவுக்கும், 20 மெகாவாட் கோவாவுக்கும் 4 மெகாவாட் கோவா வுக்கும் போக மீதி உள்ளதில் ஒரு 65 யூனிட் கரண்டு மட்டுமே தமிழ்நாட்டுக்கு வந்து கிடைக்கப்போகிறது ( ஆதாரம்: அகண்ட பாரத அணு முகமை கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்ட அணு உலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விளக்க கையேடு ...பக்கம் 483 ) .... வாழ்க கூடன்குள எதிர்ப்பு....

Unknown said...

This man is not a politician like Vai. Ko. He is a scientist and interest in national development

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி suryajeeva

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி mano

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி இரா.கதிர்வேல்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சூனிய விகடன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி sekar