Thursday, December 1, 2011

கிசு கிசு எழுதுபவர்களும்.. மன்மோகன் சிங்கும்




சாதாரணமாக பத்திரிகைகளில் வரும் கிசு கிசு பகுதிகள் உறுதி செய்யப்படாதவையாக இருக்கும்..ஆகவே..அதை எழுதுபவர்கள் கூடியவரை சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க..செய்திகளை ஊர்ஜிதப்படுத்தாமல்..அப்படி சொல்லப்படுகிறது...நம்பப்படுகிறது என்ற வாசகங்களை அச் செய்திகளுடன் சேர்ப்பதுண்டு.

கிட்டத்தட்ட அதே வழியைத் தான் இன்றைய 'இன்வெஸ்டிகேடிவ் ஜர்னல்ஸ்' எனப்படுபவையும் பின்பற்றி வருகின்றன.

நமது பிரதமரும் கிட்டத்தட்ட அப்படியே அதை பின் பற்ற ஆரம்பித்து விட்டதாக இன்று வந்துள்ள செய்தி மூலம் தெரிகிறது.

அச் செய்தி....

முல்லைப்பெரியாறு அணை பிரச்னையில்..கேரள அரசு கண் மூடித்தனமாய் நடக்கவேண்டாம் என அறிவுறுத்தச் சொல்லி ஜெ பிரதமருக்கு எழுதிய கடிதத்திற்கு பிரதமர் பதில் எழுதியுள்ளார்..

அதில்..

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவின் ஆய்வில் உள்ளது.மக்களிடையே பீதி ஏற்படும் வகையில் எந்த செயலும் உருவாகாது என நம்புகிறேன்.(???!!!!)

இரு தரப்பிலும் சுமூகமான,இணக்கமான ஒத்துழைப்பு இருக்கும் என்றும் பேச்சு வார்த்தை மற்றும் தொடர்பு மூலம் நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்.(???!!!!)

பேச்சுவார்த்தைக்காக இரு மாநில அரசுகளின் கூட்டத்தை விரைவில் கூட்டி நியாயமான முறையில் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று நீர்வள அமைச்சகத்துக்கு அறிவுறுத்தி உள்ளேன்.இந்த விஷயத்தில் உங்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் என எதிர் பார்க்கிறேன்.(???!!!!)



No comments: