Monday, November 14, 2011

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது...




யாகூ இணைய தளம் சர்வ தேச அளவில் பள்ளிப் படிப்பும் முடிக்காமல் வெளியேறிய 14 சாதனையாளர்களை பட்டியலிட்டிருக்கிறது.அவர்களில் சச்சின் மற்றும் ரிலையன்ஸ் அதிபர் திருபாய் அம்பானியும் உண்டு.

இது அதி முக்கியமான செய்தியாய் இல்லாவிட்டாலும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை சிந்திக்க வைக்கும் செய்தியாக இதை நினைக்கலாம்.

இந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரும் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை இடையில் கைவிட்டவர்கள்.பள்ளிகளும், கல்லூரிகளும் வெற்றிக்கு என நிர்ணயித்துள்ள மதிப்பெண்களைப் பெற முடியாமல் போனதால் இவர்கள் வாழ்வு என்ன ஸ்தம்பித்துவிட்டதா..?இவர்கள் உத்வேகத்துடன் அவரவர் விரும்பிய துறையில் ஈடுபட்டு வெற்றி கண்டு சாதனையாளர்கள் ஆகவில்லையா?

சச்சின் கல்லூரியில் கால் வைத்ததில்லை.ஆப்பிள் கம்ப்யூட்டர் ஸ்டீவ் ஜாப்ஸ் கல்லூரியில் சேர்ந்து பின் அதற்கு முழுக்குப் போட்டுவிட்டு வெளியேறியவர்.தனது பெரிய குடும்பத்தின் பொருளாதார நிலையை முன்னிட்டு 16 வயதிலேயே கிளார்க் வேலைக்கு சென்றுவிட்டவர் ரெலையன்ஸ் நிறுவனத்தின் மறைந்த அதிபர் திருபாய் அம்பானி.ஒரு டிகிரி கூட இல்லாமல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை ஆரம்பித்தவர் பில் கேட்ஸ்.கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முழுக்குப் போட்டுவிட்டு வந்தவர் ஆரக்கிள் நிறுவன இணைய நிறுவனர் லோரி எல்லிசன்.திரைப்படக்கல்லூரியில் படிக்க தகுதி இல்லை என நிராகரிக்கப்பட்டவர் ஜூராசிக் பார்க் படத்தை இயக்கி உலகப் புகழ் பெற்ற ஸ்டீபன் ஸ்பீல்பர்க்..

பள்ளிப்படிப்புக்கும் சாதனைக்கும் பெரிதாக எந்தத் தொடர்பும் தேவையில்லை.

பள்ளிகள், கல்லூரிகளில் வழங்கப்படும் மதிப்பெண்கள் அங்கே கற்ற கல்வியின் அளவுகோலே தவிர பெற்றுக்கொண்ட மாணவனின் தன்னபிக்கையின் உரைகல் அல்ல.தேர்வில் தோற்ற மாணவர்கள் லாயக்கற்றவர்கள் என்ற ஏளன மனப்போக்கு மாறவேண்டும்

தோல்வி அடைந்தால் மனமுடைந்து தற்கொலை அளவிற்கு மாணவர்கள் ஏன் போக வேண்டும்..ஏட்டுப் படிப்பில்லையேல் வேறு எனக்கான துறையில் என்னால் பிரகாசிக்க முடியும் என்ற எண்ணத்தை ஒவ்வொரு குழந்தைகளின் உள்ளத்திலும் விதைக்க வைக்க வேண்டியது பெற்றோர் கடமை.அதை விடுத்து மாணவர்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டு அவர்கள் தன்னம்பிக்கையை கிள்ளி எறியக் கூடாது.

இது சம்பந்தமாக ஆசிரியர்களுக்கும் பங்கு உண்டு.ஆசிரியர்கள் விருப்பு, வெறுப்பு இன்றி அனைத்து மாணவர்களிடமும் பழக வேண்டும்.அவர்கள் உள்ளத்தில் உறுதியை வளர்க்க வேண்டும்.தோல்வியே வெற்றியின் படிக்கற்கள் என உணர்த்த வேண்டும்.

அதைவிடுத்து..ஆசிரியர்களே..பெற்றோரே...குழந்தைகளின் மீது உங்கள் கோபத்தைச் செலுத்தி..அவர்களை கோழைகளாக ஆக்கிவிடாதீர்கள்.அவர்களிடம் என்ன திறமை உள்ளது என அறிந்து அவர்களை அதில் ஈடுபடுத்துங்கள்.    

11 comments:

ராமலக்ஷ்மி said...

//எனக்கான துறையில் என்னால் பிரகாசிக்க முடியும் என்ற எண்ணத்தை ஒவ்வொரு குழந்தைகளின் உள்ளத்திலும் விதைக்க வைக்க வேண்டியது பெற்றோர் கடமை.அதை விடுத்து மாணவர்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டு அவர்கள் தன்னம்பிக்கையை கிள்ளி எறியக் கூடாது.

இது சம்பந்தமாக ஆசிரியர்களுக்கும் பங்கு உண்டு.ஆசிரியர்கள் விருப்பு, வெறுப்பு இன்றி அனைத்து மாணவர்களிடமும் பழக வேண்டும்//

வழி மொழிகிறேன். நல்ல பதிவு.

ஹேமா said...

வேண்டியவர்கள் படித்து உணர்ந்துகொள்ளவேண்டிய நல்ல அறிவுரைகள் கொண்ட பதிவு !

goma said...
This comment has been removed by the author.
goma said...

நல்ல பதிவு

goma said...

மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் தேவையான ,வாசிக்க வேண்டிய நல்ல பதிவு

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ராமலஷ்மி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி goma

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா

விழித்துக்கொள் said...

naanum vazhimozhigirayen nandri
surendran
surendranath1973@gmail.com

விழித்துக்கொள் said...

naanum vazhimozhigirayen nandri
surendran
surendranath1973@gmail.com

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி விழித்துக்கொள்