Monday, November 28, 2011

கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது..




 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகியுள்ள திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமார் ரெட்டி உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இதையடுத்து திமுக தரப்பு பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

 இன்று இந்த மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது கனிமொழி, சரத்குமார், ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால், கரீம் மொரானி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இவர்கள் யாரும் நாட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்றும் நீதிபதி நிபந்தனை விதித்தார்.

 டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவு, டெல்லி பாட்டியாலா சிபிஐ விசாரணை நீதிமன்றத்துக்கு அனுப்பப்படும். அங்கு பார்மலிட்டீஸ் எல்லாம் முடிந்த பின்னர், திகார் சிறைக்கு உத்தரவு அனுப்பப்படும்.

இதன் பின்னரே கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்படுவர். இவை எல்லாம் இன்றே நடந்து முடிய வாய்ப்பில்லை என்பதால், நாளை தான் இவர்கள் சிறையிலிருந்து வெளியே வருவர் என்று தெரிகிறது.

இந்த 2ஜி வழக்கில் இவர்களையும் சேர்த்து மொத்தம் 10 பேர் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3 comments:

'பசி'பரமசிவம் said...

நான் இன்று நாளிதழ் எதுவும் பார்க்கவில்லை. தங்கள் பதிவின் மூலம்தான் கனிமொழிக்கு’ஜாமீன்’ கிடைத்ததை அறிந்தேன்.

செய்தியை‘முந்தி’த் தந்ததற்கு நன்றி!

Unknown said...

THEN RAJAAAAAAAAAA?

rajamelaiyur said...

வழக்கு அவ்வளவுதான் ...
அன்புடன் :
ராஜா
.. இன்று

பதிவர்களையும், அஜித் ரசிகர்களையும் கேவலப்படுத்திய "வினவு" தளம்