Thursday, January 26, 2012

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (27-1-12)




1) இந்தியா நேற்று தனது 63வது குடியரசு தினத்தைக் கொண்டாடியது.இந்திய அரசியல் அமைப்பை தயாரிக்க ஆன செலவு 63,96,724 ரூபாயாகும்.செலவான நேரம் 2 வருடம் 11மாதம் 18 நாள்.பங்குக் கொண்ட அங்கத்தினர்கள் எண்ணிக்கை 368 ஆகும்

2)1000க்கும் மேற்பட்ட உப நதிகளைக் கொண்டுள்ள உலகின் ஒரே நதி அமேசான் நதியாகும்.

3)தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டாம் என்பது பழமொழி.இப்போது..தினமும் ஒரு மாதுளம் பழம் சாப்பிட்டால்..அனைத்து நோய்களும் நம்மை அண்டாது என்கிறார்கள்.

4)நடிகர் 'வினய்' கதாநாயகனாக நடிக்கும் படத்தில் கதாநாயகியாய் நடிக்க அஞ்சலியைக் கேட்டார்களாம்.ஆனால் அவர் மருத்துவிட்டாராம்.'டேம் 999 படத்தில் கதாநாயகனாக வினய் நடித்துள்ளார்.அதனால் தான் மறுப்பாம்.தமிழ் மக்கள் என்னிடம் அன்பாக உள்ளனர்..அதைக் கெடுத்துக் கொள்ளமாட்டேன் என்றுள்ளார்.
(கலைக்கு மொழியில்லை என்றெல்லாம் சப்பைக் கட்டு கட்டும் கலைஞர்களிடையே அஞ்சலி வித்தியாசமானவர்தான்)

5)நமது தேசிய கீதத்திற்கு வயது 100.ரவீந்திர நாத் தாகூர் எழுதிய இப்பாடல் 1911 ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் மஹாநாட்டில் பாடப்பட்டது.1950ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் நாள் இந்திய அரசு முறைப்படி இப்பாடலை தேசிய கீதமாக அங்கீகரித்தது.

6)உலகில் பெருகிவரும் வெப்பச் சூழல் காரணமாக பனி மலைகள்,இயற்கை மலைகள் ஆகியவற்றிற்கான அபாயம் பெருகி உள்ளதாம்.

7)இண்டெர்நெட் துவக்கப்பட்ட ஆண்டு 1969 ஆகும்

8)வால்ட்டீஸ்னி 26 முறை ஆஸ்கார் விருது வென்று உலக சாதனை படைத்தவர் ஆவார்

9)இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் இருபத்தினான்கு வயதில் இருபத்தைந்து படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

10)ஒரு பொன்மொழி..
  உங்களைச் சுற்றியுள்ள உயிர்களுக்கு என்ன நிகழ்கிறது என்ற அக்கறை இல்லாமல் நீங்கள் இருப்பீர்களானால் நீங்கள் ஒரு குற்றவாளி - ஜக்கி வாசுதேவ்

11)ஒரு ஜோக்..

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சையைத் தீர்க்க என்கிட்ட ஒரு வழியிருக்கு
என்ன வழி
தைத்திங்கள் முதல் நாள் முதல்..சித்திரைத் திங்கள் முதல்நாள் வரை தமிழ்ப்புத்தாண்டு நாட்கள் என அறிவித்து விடலாம்.



இன்னுமொரு ஜோக்

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவோடான நாலாவது டெஸ்ட்ல சக்கைப் போடு போடுது பார்த்தியா?
அப்படியா சொல்ற
ஆமாம்..டெஸ்ட் மேட்ச்சை ஐந்தாவது நாளுக்கும் இழுத்துக்கிட்டு வந்துட்டாங்களே! இது சாதனைதானே

8 comments:

ராமலக்ஷ்மி said...

நல்ல தொகுப்பு.

இண்டர்நெட் ஆரம்பித்த வருடம் வியக்க வைக்கிறது. நடைமுறையில் அனைவராலும் பயன்படுத்தப்பட பல ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.

//நமது தேசிய கீதத்திற்கு வயது 100.ரவீந்திர நாத் தாகூர் எழுதிய இப்பாடல் 1911 ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் மஹாநாட்டில் பாடப்பட்டது.1950ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் நால் இந்திய அரசு முறைப்படி இப்பாடலை தேசிய கீதமாக அங்கீகரித்தது.//

இந்தத் தகவலை எனது பதிவில் உபயோகித்துக் கொள்ளலாம்தானே:)? அட்வான்ஸ் நன்றி.

கும்மாச்சி said...

உண்மையாகவே ஐந்தாவது நாளுக்கு டெஸ்ட் போட்டியை இழுத்த சாதனை, இமாலய சாதனைதான்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமையான தகவல்.
அறிந்துகொண்டேன்.
தகவலுக்கு நன்றி.

ஹேமா said...

இணையம் அப்பவே வந்திடிச்சா !

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கும்மாச்சி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நண்டு @நொரண்டு

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா