Monday, January 23, 2012

அரசியலுக்கு நான் ஏன் வரவில்லை - பாரதிராஜா





 பெருந்தலைவர் காமராஜரை இந்த மக்கள் தேர்தலில் தோற்கடித்ததைப் பார்த்த பிறகு, அரசியலுக்கு வரும் ஆசையே
எனக்கு போய்விட்டது, என்றார் பாரதிராஜா.

மதுரையில் நடந்த காங்கிரஸ் பிரமுகர் கே.எஸ்.கோவிந்தராஜன் நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற
இயக்குநர் பாரதிராஜா, விழாவில் பேசுகையில், "எனது தாத்தா, எங்கப்பா எல்லாருமே பாரம்பரியமாகவே காங்கிரஸ்காரர்கள்.
காங்கிரஸ் குடும்பந்தான் எங்களோடதும்.

எனக்கு அந்தக் கட்சியுடன் முரண்பாடு ஏற்பட்டிருக்கலாம். அப்பா அம்மா, சகோதரர்களுக்கிடையேய முரண்பாடு வருவதில்லையா...
 அப்படித்தான் இதுவும். கருத்து மாறுபாட்டால் முரண்பட்டு மோதல் வருவது சகஜம்.

நான் தீவிர காங்கிரஸ் கட்சிகாரனாக கடந்த 1957-ம் ஆண்டு முதல் 1962 வரை இருந்தேன். காங்கிரஸ் வேட்பாளருக்காக மேடையில்
ஏறி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டேன். எனது தாயின் நகைகளை விற்று காங்கிரஸ் கட்சிக்காக உழைத்தவர் எனது தந்தை.

பெருந்தலைவர் காமராஜர் தேர்தலில் தோற்றபோது எனது வீட்டில் 3 நாட்கள் எங்க வீட்ல சமைக்கலை. காமராஜர் தோல்விக்காக
எனது தந்தை அந்த அளவு வருத்தப்பட்டார். நானும் அரசியல்வாதியாகியிருப்பேன். காமராஜர் தோல்வியே
என்னை அரசியலுக்கு வரக்கூடாது என முடிவு எடுக்க வைத்தது. அவரையே தோற்கடித்து விட்டார்களே என்ற ஆதங்கம்
இன்னிக்கு வரைக்கும் என் மனசுல இருக்கு.

தாய் வீடு, மொழி, இனம் காணாமல்போக அனுமதிக்கக் கூடாது. அவை காணாமல்போவது தாயைத் தொலைப்பது போன்றதாகும்.
ஆகவே மக்கள் மொழிக்கு எதாவது ஆபத்து எனில் காங்கிரஸ் தலைவர்களாகிய நீங்கள் முதலில் குரல் கொடுத்து காப்பாற்ற வேண்டும்.
அது உங்க கடமை.

தமிழன் எல்லாவற்றையும் இழக்கக் கூடாது. எதிர்ப்பு சக்தியை காட்டாவிட்டால் எதிலும் வெற்றி பெறவும் முடியாது.
அந்த எதிர்ப்பு சக்தியை காட்டியே காங்கிரஸ் தலைவர்கள் மக்களுக்கு பணியாற்ற வேண்டும்," என்றார் பாரதிராஜா.


 

7 comments:

ஹேமா said...

அரசியலைச் சரியாப் புரிஞ்சு வச்சிருக்கார் !

Yaathoramani.blogspot.com said...

அது ஒரு திராவிட அசுர மாயையில் நேர்ந்துவிட்ட அவலம்
ஒரு சரித்திரத் தவறு
தமிழனும் தமிழ் நாடும் தடம் மாறிய தருணம்
அருமையாகச் சொல்லி இருக்கிறார்
பதிவாகத் தந்தமைக்கு நன்றி

Yaathoramani.blogspot.com said...

Tha.ma 3

aotspr said...

நன்கு உலகத்தை தெரிந்து வைத்திருக்கிறீர்கள் ....




"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Ramani

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி kannan