எதிர்க் கட்சித் தலைவர் ஒருவர் சட்டசபையிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டது இதுவே முதல் தடவை எனத் தெரிகிறது..
இதில் யார் செய்தது சரி..யார் செய்தது தவறு என்று அலசப்போவதில்லை இப் பதிவு..
எதிர்க் கட்சிகள் என்றால்...ஆளும் கட்சியினர் பற்ரி காட்டமாக விமரிசிப்பதும்..அந்த விமரிசனத்திற்கு ஆளும் கட்சி தரப்பிலிருந்து பதில் கூச்சலிடுவதும்..நாட்டி..ஏன்..உலகளவில் எல்லா நாடாளு மன்றங்கள்..சட்டசபைகளில் இன்று நடந்து வருவது நாம் அறிவோம்..
ஆனால்..எதிர்க் கட்சி பொறுப்பில் உள்ள தலைவர்..பொறுமையாக நடந்துக் கொள்வதோடு...தம் கட்சியினரையும் சற்று அடக்கி..அவர்கள் உணர்ச்சிவசப் படாமல் பேச வைக்க வேண்டும்.அந்த பொறுப்புணர்ச்சியும்..பொறுமையும் அரசியல் தலைவர்களுக்கு மிகவும் அவசியம்.அப்போதுதான் மக்கள் பிரச்னைகள் சபையில் பேச முடியும்.அதை விடுத்து தனிப்பட்ட நபர் தாக்குதல் நடத்துவதும்..அதைக் கட்சித் தலைவர் அடக்காமல் தானும் கலந்துக் கொள்வதும் சற்றும் சரியல்ல.
எதிர்க் கட்சித் தலைவரே எழுந்து முஷ்டியை மடக்குவதும்..நாக்கை துருத்திக் கொண்டு..கை விரலைக் காட்டி எச்சரிப்பதும்...சற்ரும் சரியல்ல..சட்டசபை ரமணா படபிடிப்பல்ல.
அதே சமயம் ஜெ வும்..எதிர்க் கட்சித் தலைவரைப் பார்த்து..'திராணி' இருந்தால் என்றெல்லாம் பேசியிருக்கக் கூடாது.அதுவும் இருமுறை ஏற்கனவே முதல்வராகவும்..இரு முறை எதிர்க் கட்சித் தலைவராகவும் இருந்தவர் இப்படி நடந்திருக்கக் கூடாது.
இப்படி கட்சிகள் நடந்துக் கொண்டதற்கு..இவர்களுக்கு வாக்களித்த மக்கள் வெட்கப்படுகிறார்கள்
2)
சென்னையில் வசிக்கும் நீங்கள் உங்கள் நண்பரை சந்திக்க 11 மணிக்கு செல்ல வேண்டுமா? வீட்டிலிருந்து 10 மணிக்கு (தூரம் 7 முதல் பத்து கிலோமீட்டர்) கிளம்பினால் போதும் என்றால் நண்பரை 12 மணிக்குத்தான் பார்க்க முடியும்.ஒரு மணியில் 7 கிலோமீட்டரை கடப்பதெல்லாம் அந்தக் காலம்.இப்போது அதே தூரத்திற்கு இரண்டு மணி நேரம் ஆகும்.அதுவும் பூந்தமல்லி ஹை ரோடு, சைதாபெட் பாலம். அடையார் பாலம், ஆர்காட் சாலை,அண்ணா சாலை குறுக்கிடுமேயாயின் இரண்டு மணி நேரம் கூட போதாது.அவ்வளவு போக்குவரத்து நெருக்கடி. தவிர்த்து மெட்ரோ ரயிலுக்கான சாலை ஆக்கரமிப்பு வேறு. நம்மை விடுங்கள்..மாறி மாறி அந்த பாதையில் பேருந்தை ஓட்டும் பேருந்து ஓட்டுநர்கள் மிகவும் பாவம்.
3) கோச்சுடையான் என்ற பெயர் சிவனைக் குறிக்கும் சொல்
4)உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்க்ஸில் அதிக ஒட்டங்கள் எடுத்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் சௌரவ் கங்குலி ஆவார்.அவர் எடுத்த ஓட்டங்கள் 183.1999ல் ஸ்ரீலங்காவிற்கு எதிரான போட்டியில்.
5)சூரியனின் விட்டம் 13,92,500 கிலோ மீட்டர்.இது பூமியின் விட்டத்தை விட 109 மடங்கு பெரிதாகும்.
6) ஒரு ஜோக்..
உன் நண்பர் உன்னைப் பார்த்தால் ஏன் வெட்கப் படுகிறார்?
அவர் தேர்தலில் எங்களுடன் கூட்டணி வைத்திருந்த கட்சியில் இருக்கிறார்
5 comments:
பூமியைவிட இவ்வளவு பெரிய சூரியன் எம் கண்களுக்கு சின்னதாகவும் சூடாகவும் இருக்கிறாரே.
கோச்சுடையான் புத்தகங்களில் படித்திருக்கிறேன்.நன்றி !
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்க்ஸில் அதிக ஒட்டங்கள் எடுத்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் சௌரவ் கங்குலி ஆவார்.அவர் எடுத்த ஓட்டங்கள் 183.1999ல் ஸ்ரீலங்காவிற்கு எதிரான போட்டியில்.////இந்த தகவலை சரி பார்க்கவும் ... கபில்தேவ் ஜிம்பாவேக்கு எதிராக எடுத்த 175 ரன்கள்(1975/1979) தான் முதல் இந்தியரின் அதிக பட்சம் ....
//Ganguly was part of the Indian team that competed in the 1999 Cricket World Cup in England. During the match against Sri Lanka at Taunton, India chose to bat. After Sadagoppan Ramesh was bowled, Ganguly scored 183 from 158 balls, and hit 17 fours and seven sixes. It became the second highest score in World Cup history and the highest by an Indian in the tournament.//
source0 wikiepedia
TVR...//...highest by an Indian in the tournament...// here is the issue which shabi is talking, wikiepedia informs about the tournament which is 1999 cricket world cup and not the world cup in general.
தகவலுக்கு நன்றி shabi,rs
Post a Comment