பாட்டாளி மக்கள் கட்சியின் தமிழக மாணவர் சங்கம் சார்பில் மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் அன்புமணி பேசுகையில்,
மாணவர்கள் அரசியல் வேண்டாம் என்று சொல்ல முடியாது. நீங்கள் அவசியம் அரசியலுக்கு வந்தாக வேண்டும். ஏனென்றால் எதிர்காலத்தை உருவாக்கும் இளைஞர்கள் நீங்கள்தான். உலக நாடுகளில் புரட்சிகள் நடைபெற்று வருவதற்கு இளைஞர்கள்தான் காரணம். அதேபோன்ற புரட்சி தமிழகத்தில் ஏற்பட வேண்டும்.
சினிமா ஒரு பொழுதுபோக்கு. அதை பார்த்து விட்டு அப்போதே மறந்துவிட வேண்டும். ஆனால் நமது மக்கள் அதை உண்மை என்று நம்பி ஏமாந்து போகின்றனர். இனி தமிழ்நாட்டை படித்தவர்கள்தான் ஆள வேண்டும்.
கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அமைதிப் புரட்சி ஏற்பட்டது. இளைஞர்கள் அந்த புரட்சியை ஏற்படுத்தினர். அதிமுகவுக்கு அவர்கள் ஒட்டுப் போடவில்லை. திமுகவுக்கு எதிராக ஓட்டு போட்டார்கள் என்பதுதான் உண்மை.
பாமக ஒரு வித்தியாசமான கட்சி. எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைத்த தவறை நாங்கள் மீண்டும் செய்ய மாட்டோம். பாமக தலைமையில் தனி அணி அமைப்போம்.
கேரளத்தில் நாயர், மேனன் தவிர வேறு யாரும் ஆள முடியவில்லை. ஆந்திரத்தில் ரெட்டி, நாயுடு தவிர வேறு யாரும் ஆளவில்லை.
திராவிட கட்சிகளின் தலைவர்களான கருணாநிதி, எம்ஜிஆர். ஜானகி, ஜெயலலிதா, வைகோ யாருமே தமிழர் கிடையாது. திராவிடர்கள் தான். தமிழன் யார் என்றால் பாமக நிறுவனர் ராமதாஸ் ஒருவர்தான் என்றார் அன்புமணி.
5 comments:
அன்புமணி பெரிய ஆராய்ச்சியாளரா இருப்பாரு போல....முன்பு ஒரு தடவை போதிதர்மர் வன்னியர்ன்னு சொன்னாரு....இப்போ கலைஞர் தமிழர் இல்லேன்னு சொல்றாரு....இன்னும் கொஞ்ச நாள்ல நான் யாருன்னே தெரியலியேன்னு சொன்னாலும் சொல்வார்போல....பாவம்
அவருக்கு எப்டியாச்சும் ஆட்சிய புடிக்கணும்.....
நிறைய பிட் போடுறாரு....ஒண்ணும் நடக்கல.....
"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"
வணக்கம் TVR அய்யா,
இந்த பதிவின் மூலம் நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியல
ஆனால் தலைப்பையும், பின்னூட்டங்களை வைத்து பார்க்கும் பொழுது அன்புமணி கலைஞரை தமிழர் இல்லை என்று தவறாக சொல்லி விட்டார் என்றே தாங்களும் கருதுவதாக எண்ணி இந்த பின்னோட்டம்
'நெசமாலுமே உங்களுக்கு தெரியாதா, சார்???
மருத்துவர் ஐயா அவர்கள் எப்போது என்ன பேசுவார்
என்றே அனுமானிக்க முடியவில்லையே
சாப்பிடவே கூப்பிடாத போது இலைப் பீத்தல் எனச் சொன்னது மாதிரி
இரண்டு திராவிடக் கட்சிகளும் ஒதுக்கித் தள்ளிய பிறகு
திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லையென்கிறார்
கலைஞரை தமிழர்களின் உன்னத உலகத் தலைவர் என்றார்
இப்போது தமிழரே இல்லை என்கிறார்
நாளை என்ன சொல்கிறார் பார்ப்போம்
எப்படியாவது தன் மகனுக்கு ஒரு எம்.பி பதவி பிடிக்க
முயலும் பாசமிக்க தந்தையாகத்தான் எனக்கு அவர் படுகிறார்
வேறு குறிப்பிட்டுச் சொல்ல எதுவும் இல்லை
ippozhudhavadhu unmaiyai oththukkondare kalaizhar thamizhar illaiendru
Post a Comment