உத்தரபிரதேசத்தில் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவின் வாகன பேரணியை தடுத்து நிறுத்திய தேர்தல் அதிகாரி,
கோவா மாநிலத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அமேதி பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராபர்ட் வதேரா பிரச்சாரம் செய்தார்.
அப்போது அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக எண்ணிக்கையில் மோட்டார் சைக்கிள்கள் பேரணியில் கலந்துகொண்டதால்
தேர்தல் பார்வையாளர் பவன் சென், ராபர்ட் வதேரா ஊர்வலத்தை தடுத்து நிறுத்தினார்.
இதையடுத்து ஐ.ஏ.எஸ் அதிகாரியான பவன் சென், கோவா மாநிலத்திற்கு தேர்தல் அதிகாரியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பிரியங்காவின் கணவரை தடுத்து நிறுத்தியதால்தான் ஐஏஎஸ் அதிகாரி பவன்சென் மாற்றப்பட்டுள்ளால் என்ற சர்ச்சை எழுந்த நிலையில்,
அந்த புகாரை தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி மறுத்துள்ளார்.
பவன் சென்னை பணியிடமாற்றம் செய்ய காலையில் முடிவெடுத்துவிட்டதாகவும் அவர், மாலையில்தான் ராபர்ட் வதேராவை
தடுத்து நிறுத்தியதாகவும் குரேஷி விளக்கமளித்துள்ளார்.
நம்புவோம் காதில் பூச்சரத்துடன்.
No comments:
Post a Comment