சென்னை பாரிமுனையில் 167 ஆண்டுகளாக நடந்துவரும் பாரம்பரியம் மிக்க பள்ளி புனித மேரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி.
இப்பள்ளியில் அறிவியல் ஆசிரியையாகவும்..ஹிந்தி ஆசிரியையாகவும் இருந்து வந்தவர் உமா மகேஷ்வரி,இவர் இன்று காலை ஒன்பதாம் வகுப்பிற்கு ஹிந்தி பாடம் எடுத்துள்ளார்.அப்போது திடீரென முகமது இர்பான் என்னும் மாணவன் திடீரென கத்தியுடன் அவர் மீது பாய்ந்து அவரது வயிற்றிலும்..கழுத்திலும் அவரைக் குத்திக் கொலை செய்தான்.
பின் அவன் வாக்குமூலத்தில், 'தன்னைப் பற்றி பெற்றோரிடம் குறை கூறியதாலும், பெற்றோரை அழைத்து வரும்படி தொந்தரவு செய்ததாலும், மதிப்பெண் குறைத்து போட்டதாலும் ஆசிரியையை குத்திக் கொன்றதாக' சொல்லியுள்ளான்
ஒரு ஆசிரியைக்கும் நடந்த இந்த நிலை...நம் மாணவர் சமுதாயம் எங்கே போகிறது..? என்ற வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
மாணவர்கள் அனைவருக்கும் நீதி போதனை வகுப்புகள் மீண்டும் இருக்க வேண்டும்.அவர்களை வெற்றி, தோல்வி இரண்டும் அதிகம் பாதிப்பு ஏற்படுத்தா வண்ணம் உருவாக்க வேண்டும்.
நம் நாட்டு கல்வியாளர்கள் இது பற்றி சிந்தித்து ஆவண செய்ய இதுவே சரியான நேரம்.
13 comments:
வேதனை.
மாணவன் இந்த அள்வுக்குப் போவதற்குக் காரணமான அந்த வாத்திச்சியின் செயலையும் பதிவு செய்யுங்களேன்.
என்ன கொடுமை!
எழுத்தறிவித்தவன்
இறைவன் என்ற காலம் எங்கே..?
இறைவா!
புலவர் சா இராமாநுசம்
என்ன கொடுமை!
எழுத்தறிவித்தவன்
இறைவன் என்ற காலம் எங்கே..?
இறைவா!
புலவர் சா இராமாநுசம்
என்ன அநியாயம்.என்னதான் இருந்தாலும் கொலை செய்கிற அளவுக்கு கோடூரம் !
அதிர்ச்சிதரும் தகவல்
சம நிலை அடைய வெகு நேரமானது
என்ன செய்யப்போகிறோம் ?
வருந்துகிறோம்.....
"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"
வருகைக்கு நன்றி Rathnavel Natarajan
நன்றி அமர பாரதி
வருகைக்கு நன்றி புலவர் சா இராமாநுசம்
வருகைக்கு நன்றி ஹேமா
வருகைக்கு நன்றி Ramani
வருகைக்கு நன்றி Kannan
Post a Comment