.
தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 10 மக்களவைத் தொகுதியில் வெற்றி பெறுவோம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
மதுரையில் இன்று, பாமகவின் சார்பில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், கடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே திமுகவும், விஜயகாந்தின் தேமுதிகவும் கூட்டணி சேர்ந்து போட்டியிட முயற்சித்தன. ஆனால் அது அப்போது முடியாமல் போய்விட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் தற்போது விஜயகாந்தும், ஸ்டாலினும் சந்தித்துள்ளனர். அடுத்த கூட்டணிக்கு அடித்தளம் போடுகின்றனர். ஆனால் அவர்களால் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு மக்களவைத் தொகுதியில் கூட ஜெயிக்க முடியாது.
ஆனால், பாமக, நாடாளுமன்றத் தேர்தலில் தேசியக் கட்சிகளுடனோ, திராவிடக் கட்சிகளுடனோ கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிடும். தனித்துப் போட்டியிட்டு 10 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
பாமக நிறுவனரின் இந்த நகைச்சுவைப் பேச்சு..சினிமா நகைச்சுவை நடிகர்களிடையே பீதியை கிளப்பி உள்ளது.தங்களது மார்க்கேட்..இவரின் இது போன்ற பேச்சுகளால் சரிந்து விடுமோ என பயப்படுகிறார்களாம்.
2 comments:
சொல்றது தான் சொல்றாரு.. நாங்க நாற்பது தொகுதியிலும் வெல்வோம்னு சொல்லக்கூடாதா? சவடால் அடிக்கறதுன்னு முடிவெடுத்துட்டா பெரிசா அடிச்சுவிடவேண்டியது தானே..
ஹா ஹா ....கனவு காணுங்கள் .....
"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"
Post a Comment