Sunday, October 7, 2018

நாடகப்பணியில் நான் - 79



"இறைவன் கொடுத்த வரம்' நாடகம், ஃபாத்திமா பாபுவிற்கும், பி டி ரமேஷிற்கும் சிறந்த நடிகர்களுக்கான விருதினை கோடை நாடக விழாவில் பெற்று தந்தது.

தவிர்த்து.. மைலாப்பூர் அகடெமி 2016ஆம் ஆண்டு மேடையேறிய நாடகங்களில் இந்நாடகத்தை சிறந்த கருத்துள்ள நாடகத்திற்கான விருதினை அளித்தது.ஃபாத்திமா பாபுவிற்கு சிறந்த நடிகைக்கான விருதினையும், ரமேஷிற்கு சிறந்த நடிகனுக்கான விருதினையும் அளித்தி கௌரவித்தது.

இனி இந்நாடகத்தில் வந்த முக்கியமான வசனங்கள் சில...

1) வாழ்க்கையில நாம சந்திக்கற ஒரு சிலரை நாம கண்ணால மட்டும் பார்க்கறதில்ல.இதயத்தாலும் உணரச் செய்கிறோம்

2)நம்ம புள்ளைங்களுக்கு றெக்கை முளைக்கிறது அவங்க பறக்கத்தான்.அந்த றெக்கையின் நிழல்ல பெத்தவங்க சுகம் காணலாம்னு நினைக்கறது தப்பு

3)ஒரு தாய் மனைவியாக முடியாது.ஆனா ஒரு மனைவி நிச்சயமாக தாயாக முடியும்னு சொல்லுவாங்க. அப்படிப்பட்ட உயர்ந்த உறவு மனைவி ஒருவனுக்கு.அதனால தன் மனைவி சொல்றதைக் கேட்கறது தப்பில்லை.ஆனா மனைவி எதைச் சொன்னாலும் கேட்காதீங்கன்னு தானே சொல்றோம்.

4)மனைவி அமைவது,கணவன் அமைவது இதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு சொல்லுவாங்க.ஆனா , உண்மையிலேயே ஒருவனுக்கு நல்ல பெற்றோர் அமைவதுதான் வரம்.எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல்,தன் வாழ்வில் நேரம், பணம்,unconditional அன்பு என அவங்க செய்யற தியாகத்தை ஏன் புரிஞ்சுக்க மாட்டேன்னு சொல்றீங்க?


5)பிள்ளைங்க பெத்தவங்களை வயசான காலத்தில பார்த்துக்கணும்னு நினைக்கிறது கட்டாயம் இலலை.நம்ம மூலமா அவங்க வந்திருந்தாலும்..அவங்க...அவங்க..அவங்க அவங்க வாழ்க்கையை வாழ பிறந்தவங்க! அவ்வளவுதான்.அவங்க நம்மை கவனிக்க பிறந்த பிறப்பல்ல.நம்ம வாழ்க்கை நம்ம இரண்டு பேரோடத்தான்.என் வாழ்க்கையில நீ எனக்கு நிழலா இருந்திருக்க.இளமையில் தன் துணையோட அவசியத்தைவிட முதுமையில் அதிகம் தேவை புரிஞ்சுக்கிட்டேன்

No comments: