Tuesday, October 16, 2018

நாடகப்பணியில் நான் - 88



வெங்கட் எழுதிய "குடும்பம் ஒரு சிலம்பம்" நாடகம் சௌம்யா அடுத்ததாக அரங்கேற்றம் செய்தது.

வெங்கட்டுக்கே உரிய தனிப் பாணியில் உருவான குடும்பக் கதை.அருமையான வசனங்கள்.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தினைச் சொல்ல ஆசைப்படுகின்றேன்.

வெங்கட், விசு, வேதம் புதிதல்ல கண்ணன் இவர்கள் எழுதும் ஸ்கிரிப்டுகளைப் படித்தால்...ஒவ்வொன்றிலும் எவ்வளவு விஷயங்கள் இருக்கும் தெரியுமா? புதிதாக எழுதுபவர்களுக்கு..இவர்கள் எழுத்துகள் தங்கச் சுரங்கம் போல.படிக்கப் படிக்க பல புது கற்பனைகள் உருவாகும்.

"குடும்பம் ஒரு சிலம்பம்" நாடகமும் அப்படியே.

இந்நாடகத்தில், காவேரி முக்கியப் பாத்திரம் ஏற்று நடித்தார்.தவிர்த்து ரமேஷ், ராம்கி, கோவை காமாக்ஷி, நான், மணிபாரதி என நடிகர் பட்டாளம்.இயக்கம் வெங்கட்.பின், நாடகத்தின் வெற்றிக்குக் கேட்கவா வேண்டும்?

ரமேஷ்(இவரும் பி டி ரமேஷ்..சௌம்யாவின் ஆஸ்தான ந்டியக்ர் ரமேஷ் அல்ல) நடிக்க இயலாமல் போயிற்று சில காட்சிகள் முடிந்த நிலையில்.

அப்போது, ஆபத்பாந்தவனாக , வெங்கட் தேர்ந்தெடுத்த நடிகர் சுந்தர் பிரசாத்.. இவரும் ஒரு அருமையான நடிகர்.இவர் ஏன் இன்று நடிப்பதை நிறுத்தி விட்டார் எனத் தெரியவில்லை.
ராம்கியின் சிறந்த நடிப்பும் நாடகத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தது

நாடகம் சிறந்த நாடகமாக மைலாப்பூர் அகடெமி விருதினைப் பெற்றது.தவிர்த்து காவேரி சிறந்த நடிகையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தவிர்த்து, சிவகாசி ஃபைன் ஆர்ட்ஸ், அந்த ஆண்டு (1989) வந்த  நாடகங்களில் சிறந்த நாடகமாக இதைத் தேர்ந்தெடுத்தனர்.

No comments: