Tuesday, October 9, 2018

நாடகப்பணியில் நான் - 81

இப்பதிவு முதல்..நான் நாடகப்பணியாற்றிட என்னுடன் பணியாற்றிய முக்கியக் கலைஞர்கள் பற்றிய சிறு குறிப்புகளைக் கொடுக்க இருக்கின்றேன்.

சௌம்யா குழுவில் இது வரை 100க்கும் மேற்பட்டவர்கள் நடித்துள்ளனர்

இவர்கள் எல்லாம் இல்லையெனில் சௌம்யா குழு இவ்வளவு ஆண்டுகள் தொடர்ந்து நடந்துக் கொண்டு இருக்குமா? என்பதே சந்தேகம்.இவர்களில் முக்கியக் கலைஞர்கள்
 பற்றிய சிறு குறிப்புகளைத் தர இருக்கின்றேன்.

எங்களது முதல் நாடகமான "யாரைத்தா கொல்லுவதோ" என்ற கே கே ராமன்- சாரதி ஸ்கிரிப்டில் நடித்தவர்கள்

ஒருவிரல் கிருஷ்ணா ராவ் - திரைப்பட நகைச்சுவை நடிகரான இவர் ஒரு விரல் என்ற படத்தின் மூலம் புகழ் பெற்றார்.அதுமுதல் இவர் ஒரு விரல் கிருஷ்ணா ராவ் என அழைக்கப்பட்டார்.

இந்நாடகத்தில் ஒரு வேலைக்காரன் பாத்திரத்தில் நடித்தார்

கமலா காமேஷ் - என் நண்பரும், இசையமைப்பாளருமான காமேஷின் மனைவி.இதற்கு முன் சில குழுக்களில் நடித்து வந்தவர் இந்நாடகத்திலும் நடித்தார்.அவர் நடிக்க இயலா சில காட்சிகளில், பூர்ணிமா என்ற நடிகை நடித்தார்.

விஜய ஷங்கர்- என்னுடன் ஸ்டேட் வங்கியில் வேலை செய்தவர்.இந்நாடகத்தில் கதாநாயகனாக நடித்தார்

பி எஸ் நாராயணன் - ரிசர்வ் வங்கியில் வேலை பார்த்து வந்தவர்.இந்நாடகத்திலும் நடித்தார்.

ராம்கி- ராமகிருஷ்ணன் என்னும் இவர், உயர்நீதி மன்றத்தில் வேலை பார்த்தவர்.இந்நாடகம் மூலமே நாடகத் துறையில் ராம்கி என அழைக்கப்பட்டார்

ஏ எஸ் ராதாகிருஷ்ணன் - செகரடேரியட் ஊழியர். நகைச்சுவை வேடம் ஒன்று ஏற்றூ நடித்தார்.

டி வி வி ராமானுஜம், மணிமோகன் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்தனர்

இவர்களுடன் நான் ஒரு முக்கிய ஜோசியக்காரன் வேடத்தில் நடித்தேன்

அடுத்த நாடகத்தில் நடித்தவர்கள் அடுத்த பதிவில்.

No comments: