பல எழுத்தாளர்கள் படைக்கும் பாத்திரங்களை வர்ணிப்பதற்கேற்ப ஓவியங்களை வரைந்து, அவர்களின் படைப்புகளுக்கு அழ்கினை சேர்ப்பவர்கள் ஓவியர்கள்.
ஆனால், எழுத்தாளர்களை அறியும் நம்மால் அதேபோல ஓவியர்களை அறிகிறோமா? என்பதற்கு, 'இல்லை" என்று வருத்த்ஸ்த்துடனேயே பதிலைத் தரவேண்டியுள்ளது.
அப்படி நாம் மறந்த ஒரு ஓவியர்..கல்கியில் ஓவியங்களை வரைந்து வந்த "கல்பனா" ஆவார்.
வினு வின் கலகட்டத்திலேயே இவரும் ஓவியங்களை வரிந்துள்ளார்.
ஜெகசிற்பியனின் "கிளிஞ்சல் கோபுரம்" "ஜீவ கீதம்"
உமாசந்திரனின்"முள்ளும் மலரும் " (பின்னர் இக்கதை திரைப்படமானபோது..காளி, வள்ளி பாத்திரத்தில் நடித்தவர்கள்..அப்படியே கல்பனாவின் ஓவியத்தில் இருந்தவர்களைப் போலவே இருந்தனர்)
கு அழகிரிசாமியின் "தீராத விளையாட்டு"
கல்கி ராஜேந்திரனின் "ஸைக்கோ சாரநாதன்"
ஆகிய தொடர்களுக்கு கல்பனா ஓவியம் வரைந்துள்ளார்.
அவரைப் பற்றிய அதிக விவரங்கள் தெரியவில்லை.ஏதேனும் புதிதாகத் தெரிந்தவர்கள்பின்னூட்டம் இட்டால்..அவற்றை பதில் சேர்த்துவிடுகின்றேன்.
No comments:
Post a Comment