காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த மூன்றாண்டுகளில் ரூபாய் 7.47 லட்சம் அளவுக்கு மின்சாரத்தை அதிகாரப்பூர்வமாய் 10,ஜன்பத் இல்லத்தில் செலவிட்டுள்ளார்.
2)முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் அவர்கள் எழுதிய டெஷிஷன் பாயிண்ட்ஸ் (decision Points) என்ற புத்தகத்தை ராண்டம் ஹவுஸ் வெளியிட்டுள்ளது.வெளியான முதல் நாளே 2,20,000 பிரதிகள் விற்றுவிட்டதாம்.ஈ மெயிலில் மட்டுமே 50000 பிரதிகள் விற்றதாம்
3)மின்னணு பொருள் தயாரிப்பில் உள்ள சீன நிறுவனம் D C L கார்ப்பரேஷன் இந்தியாவில் 135 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.இந்தியாவில் உற்பத்தி ஆலையை அமைத்து விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாம்
4)சென்ற வாரம் வாஷிங்டன் அருகே ஒரு ஆப்பிள் பண்ணைக்குச் சென்றேன்.ஆப்பிள் பிக்கிங் என்று பெரும் கூட்டம் வார இறுதி நாட்களில் வருகின்றது.மரங்களில் ஆப்பிள்கள் காய்த்து தொங்குகிறது.ஆயிரக்கணக்கில் கீழேயும் உதிர்ந்துள்ளன.மரத்திலிருந்து நமக்குத் தேவையான ஆப்பிள்களைப் பறித்துக் கொண்டு வரும் போது அதற்கான விலையை (விலை குறைவு) செலுத்திவிட்டு வர வேண்டும்.குழந்தைகள் மகிழ்ச்சியுடன் பறிக்கும் போது..அந்த ஆப்பிள்களை விட குழந்தைகளின் கன்னங்கள் கவர்கின்றன.இந்தியாவிலும் ஒருமுறை நகிரியில் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு மாந்தோப்பிற்கு சென்றுள்ளேன்.அங்கு தோப்பினுள் எவ்வளவு மாம்பழம் வேணுமானாலும் இலவசமாய் சாப்பிடலாம்.உடனே விலாசம் கேட்டு பின்னூட்டம் வேண்டாம்.இப்போது இருக்கிறதா எனத் தெரியவில்லை.
5)நாம் உயர்வாக நினைத்தவர்களெல்லாம்..சிறு சர்ச்சை,மாறுபட்டக் கருத்து என வரும்போது பேசும் பேச்சும்,வார்த்தைகளும் 'சே..இவர்களை உயர்வாய் நினைத்தோமே' என ஒரு சலிப்பை நமக்கு ஏற்படுத்தி விடுகிறார்களே..ஏன் ..அவர்கள் நட்பு வேண்டாம் என நினைத்தால் உடன் 'காற்றில் மாசு கலந்து விட்டது என்பதற்காக காற்றே வேண்டாம்..'என சொல்ல முடியுமா என்றும் தோன்றுகிறது
6)நியாயம் வெற்றி பெறும்என நாம் ஒவ்வொருவரும் நினைக்கிறோம்.அது தவறு..அநியாயங்களை எதிர்த்து நாம் போரிட்டால் தான் நியாயங்களால் வெல்ல முடியும்.
பெறும்
6 comments:
/காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த மூன்றாண்டுகளில் ரூபாய் 7.47 லட்சம் அளவுக்கு மின்சாரத்தை அதிகாரப்பூர்வமாய் 10,ஜன்பத் இல்லத்தில் செலவிட்டுள்ளார்./
அதில் சுமார் ரூ 9 ஆயிரம் வரை சொந்தப் பணத்தைக் கட்டியதை சொல்லாமல் விட்டதை வன்மையாகக் கண்ணடிக்கிறேன்:))
வாஷிங்டன் சுண்டலா சார்:)
இந்தியாவிலும் ஒருமுறை நகிரியில் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு மாந்தோப்பிற்கு சென்றுள்ளேன்.அங்கு தோப்பினுள் எவ்வளவு மாம்பழம் வேணுமானாலும் இலவசமாய் சாப்பிடலாம்.////
இப்பவும் எங்க ஊர்பக்கம் இருக்கு சார்
வருகைக்கு நன்றி Bala
வருகைக்கு நன்றி மங்குனி அமைச்சர்
கடைசி ரெண்டு பாயிண்டுகள் சுண்டலை இன்னும் காரசாரமாக்குகின்றன. :-)
வருகைக்கு நன்றி ரோஸ்விக்
Post a Comment