Saturday, November 27, 2010

சென்னை நகரில் காணாமல் போன திரையரங்குகள் - 2

சென்ற இடுகையில் அண்ணாசாலையில் காணாமல் போன திரையரங்குகள் பற்றி பார்த்தோம்..

இந்த இடுகை சென்னையில் மற்ற இடங்களில் காணாமல் போன அரங்குகள்..

மயிலாப்பூர் பகுதியில் இருந்த திரையரங்கு இரண்டு.ஒன்று காமதேனு..மற்றது கபாலி.இவ்விரு திரையரங்கிலும் புது படங்கள் வெளிவராவிடினும்..ஃபர்ஸ்ட் சேஞ்ச்

என்று சொல்லப்பட்ட..திரையரங்கில் வெளியாகி எடுக்கப்பட்ட திரைப்படங்கள் அடுத்து இவற்றில் வரும்..இன்று கபாலி இருந்த இடம் அடுக்ககமாகவும்..காமதேனு இருந்த இடம் கல்யாண மண்டபமாகவும் வந்துவிட்டன.

அடுத்து அடையார் பகுதியில் இருந்த ஈராஸ் திரையரங்கு..இது மறைந்து இன்று கார்களுக்கான ஷோரூம் ஆகிவிட்டது.

அயனாவரம் பகுதியில் இருந்த திரையரங்கு சயானி..இதில் சிவாஜி,எம்.ஜி.ஆர்., படங்கள் வருவதுண்டு.கெல்லீஸ் பகுதியில் இருந்த உமா தியேட்டரும் இன்று மறைந்து பல நிறுவனங்களுக்கான வர்த்தகக் கட்டிடங்கள் வந்துவிட்டன.இத்திரையரங்கில் தான் காதலிக்க நேரமில்லை வெள்ளி விழா கொண்டாடியது. பதினாறு வயதினிலே படம் இங்கு வெளியானது .

அடுத்து புரசைவாக்கம் பகுதியில் இருந்த ராக்ஸி..மிகப் பழமையான திரையரங்கு..இங்கு பாவமன்னிப்பு வெள்ளிவிழா கண்டது.

இதே பகுதியில் இருந்த புவனேஸ்வரி..சிவாஜி படங்கள் கண்டிப்பாக இத் திரையரங்கில் வரும் என்பது எழுதப்படாத விதியாய் இருந்தது.

அடுத்து, தங்கசாலை பகுதியில் இருந்த ஸ்ரீகிருஷ்ணா..இப்பகுதியில்..வசதி மிக்க திரையரங்காய் திகழ்ந்தது.

தியாகராயநகர் பகுதியில் இருந்த நடிகர் நாகெஷிற்கு சொந்தமான நாகேஷ் திரையரங்கின் ஆயுள் மிகவும் குறைவு..வந்த சில ஆண்டுகளிலேயே பல சர்ச்சைகளை சந்தித்த இத் திரையரங்கு..இன்று கல்யாண மண்டபமாக ஆகிவிட்டது.

மாநகர வரி கட்டாததால் அண்ணாசாலையில் ஜெயப்ரதா(முன்னாள் மிட்லண்ட்) பூட்டிக் கிடக்கிறது.

இப்படி பல திரையரங்குகள் ..மறைந்தாலும்..அவற்றை ஈடு கட்ட பல மல்டிப்லக்ஸ் வந்தாலும்..சாமான்யன்..குறைந்த செலவில் இத்திரையரங்கில் பார்க்க முடிந்த படங்களை..அதிகக் கட்டணத்தில் தானே பார்க்க முடிகிறது.

உதாரணமாக தனித் திரையரங்கான மெலடியில் கட்டணம் 50 ரூபாய்..ஆனால் சத்யம் போன்ற திரையரங்கில் 120 ரூபாய் ஆகிறதே.

16 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல பகிர்வு டிவிஆர் சார்.

சென்னை பித்தன் said...

விவேகானந்தா கல்லூரியில் படிக்கும்போது காமதேனுவில் எத்தனை படம் பார்த்திருக்கிறேன்.!
‘அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே’

goma said...

அருமையான ஆய்வைத் தொகுத்து அளித்திருக்கிறீர்கள்

Unknown said...

வருத்தப்பட ஒன்றுமில்லை, புதிதாக நிறைய மல்டிப்ளெக்ஸ் திரை அரங்குகள் வரபோகிறது ....

சிநேகிதன் அக்பர் said...

நீங்க சொன்ன மாதிரி டிக்கட் விலை எல்லாம் கன்னா பின்னான்னு ஏறிக்கிடக்கு சார். பின்ன ஏன் டிவிடில பார்க்க மாட்டாங்க.

நல்ல அலசல்.

பொன் மாலை பொழுது said...

சன் தியேட்டர் சன் ப்லாசாவாக மாறி பல ஆண்டுகள் ஆகிறதே!

KANA VARO said...

பகிர்வுக்கு நன்றி

Philosophy Prabhakaran said...

ஜெயப்ரதா திரையரங்கம் மூடியிருப்பதன் காரணம் இது தானா...

பிரைட்டன் டாக்கீஸ் கேள்விப்பட்டிருக்கிறீர்களா...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கக்கு - மாணிக்கம் said...
சன் தியேட்டர் சன் ப்லாசாவாக மாறி பல ஆண்டுகள் ஆகிறதே!//




ஆம்..கிட்டத்தட்ட சென்னையின் மையப் பகுதியில்..ஜெமினி மேம்பாலம் அருகே அமைந்திருந்த சன் திரையரங்கு..இன்று பல நிறுவனங்களும்,கடைகளும் உள்ள இடமாக மாறிவிட்டது

T.V.ராதாகிருஷ்ணன் said...

//philosophy prabhakaran said...
ஜெயப்ரதா திரையரங்கம் மூடியிருப்பதன் காரணம் இது தானா...

பிரைட்டன் டாக்கீஸ் கேள்விப்பட்டிருக்கிறீர்களா..//.



பிரைட்டன் தியேட்டர் தெரியாமல் இருக்குமா? சென்னையில் முக்கியத் திரையரங்கில் பார்க்கத் தவறிய ஆங்கிலப் படங்களை ..ராயபுரம் தேடி இழுத்த திரையரங்கு ஆயிற்றே..

T.V.ராதாகிருஷ்ணன் said...

//சிநேகிதன் அக்பர் said...
நீங்க சொன்ன மாதிரி டிக்கட் விலை எல்லாம் கன்னா பின்னான்னு ஏறிக்கிடக்கு சார். பின்ன ஏன் டிவிடில பார்க்க மாட்டாங்க.

நல்ல அலசல்.//

நன்றி அக்பர்...விடுமுறை கழிந்து..வேலைக்கு வந்தாயிற்றா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்தோர், கருத்து தெரிவித்தோர் ஆகிய அனைவருக்கும் நன்றி

vasu balaji said...

மேகலா, வீனஸ்,நாதமுனி, சரஸ்வதி, லக்ஷ்மி,மினர்வா,பத்மநாபா..:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
மேகலா, வீனஸ்,நாதமுனி, சரஸ்வதி,
லக்ஷ்மி,மினர்வா,பத்மநாபா..:)//

வருகைக்கு நன்றி பாலா
அவை பற்றி அடுத்த பதிவில்

Unknown said...

waiting for venus theatre
pls mention about that karpagavalli nin song and ads too

T.V.ராதாகிருஷ்ணன் said...

அனைவருக்கும் நன்றி anna
Pl.see my next pathivu