Sunday, November 28, 2010

சென்னை நகரில் காணாமல்போன திரையரங்குகள்-3

சென்ற இரு இடுகைகளில் பல திரையரங்குகள் மூடப்பட்டதைப் பார்த்தோம்..இந்த இடுகையில் மேலும் சில..

ஆற்காட் சாலையில் ராம் திரையரங்கு பிரபலமாயிருந்த ஒன்று..அது இன்று மூடப்பட்டு பத்மாராம் கல்யாண மாளிகையாய் திகழ்கிறது.
பரணி ஸ்டூடியோவை ஒட்டி பரணி என்ற பெயரிலேயே ஒரு திரையரங்கு சில ஆண்டுகள் இருந்தது.இப்போது மொத்த இடமுமே பரணி ஹாஸ்பிடல் ஆகிவிட்டது.
நெல்சன் மாணிக்கம் சாலையில் பழனியப்பா திரையரங்கு இன்று வர்த்தக கட்டிடமாகி விட்டது.அதூ போலவே ஜி.என்.செட்டி சாலையில் சன் தியேட்டர் சன் பிளாசா வாகிவிட்டது.
பாண்டி பஜாரில் நடிகை டி.ஆர்.ராஜகுமாரிக்கு சொந்தமான தியேட்டர் ஒன்று இருந்தது..அது குத்தகைக்கு விடப்பட்டு சாஹ்னிஸ் என்ற பெயரில் பல ஆண்டுகள் நடந்து பின் ராஜகுமாரி என்ற பெயரில் சில ஆண்டுகள் நடந்தது.பெரும்பாலும் ஆங்கிலப் படங்களே திரையிடப் படும்.இன்றோ ..பெரிய வியாபாரத் தளம் ஆகிவிட்டது.
பெரம்பூர் வாசிகளால் மறக்க முடியா திரையரங்கு வீனஸ்..அதுவும் இப்போது மூடப்பட்டு விட்டது.
வால்டாக்ஸ் தெருவில் ஒற்றவாடை என்னும் தியேட்டர் இருந்தது.பல பிரபல நாடகங்கள் அங்குதான் நடைபெறும்.அந்த அரங்கு பத்மனாபா என்று திரையரங்காய் மாற்றப்பட்டது.அதுவும் இப்போது மூடப்பட்டு விட்டது


ராயபுரத்தில் பிரைட்டன் திரையரங்கு..பழைய ஆங்கிலப்படங்கள் வெளியாகும்.
பாரிமுனை பகுதியில் வேலை புரிபவர்களால் மறக்க முடியா திரையரங்கு மினர்வா..ஆங்கிலப் படங்கள் இதில் வரும் நான்கு மணிக் காட்சியின் நிரந்தர பார்வையாளன் நான்
திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் தங்கம் தியேட்டர்..,வில்லிவாக்கம் நாதமுனி,ஓட்டேரியில் சரஸ்வதி,அமைந்தகரை லட்சுமி,மேகலா(நிறைய எம்.ஜி.ஆர்., படங்கள் இங்கு பார்த்திருக்கிறேன்) ஆகியவையும் இப்போது செயல்படவில்லை என தெரிகிறது.
தவிர்த்து கீழ்கண்ட திரையரங்குகள் இப்போது உள்ளனவா..விவரம் புரிந்தவர் தெரிவிக்கவும்..
வசந்தி,
சரவணா
அசோக்
நடராஜ்
செலக்ட்
முருகன்
கிரௌன்

9 comments:

Philosophy Prabhakaran said...

// ராயபுரத்தில் பிரைட்டன் திரையரங்கு..பழைய ஆங்கிலப்படங்கள் வெளியாகும். //
இப்போது புதுப்பிக்கப்பட்டு ஐட்ரீம் சினிமாஸ் என்ற பெயரில் அருமையாக இயங்கி வருகிறது...

// திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் தங்கம் தியேட்டர்.. //
இப்போது திருமண மாளிகையாக இருக்கிறது...

சிவராம்குமார் said...

வேதனை தரும் உண்மை!

மங்குனி அமைச்சர் said...

சார் , எல்லா ஊர்லயும் இந்த கதை தான்

சிநேகிதன் அக்பர் said...

பகிர்வுக்கு நன்றி சார்.

எஸ்.கே said...

மிச்சமிருக்கும் திரையரங்குகள் எப்போது காணாமல் போகப் போகிறதோ!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
philosophy prabhakaran
சிவராம்குமார்
மங்குனி அமைச்சர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
சிநேகிதன் அக்பர்
எஸ்.கே

சகாதேவன் said...

//மறக்க முடியா திரையரங்கு மினர்வா..ஆங்கிலப் படங்கள் இதில் வரும்//
நான் பி.எஸ்ஸி முடித்து கிண்டியில் பி.ஈ சேர்ந்த வருஷம். நாங்கள் சைக்கோ படம் பார்க்க மினர்வா சென்றோம். "நீ சின்னப்பையன். இது அடல்ட் ஒன்லி படம். உனக்கு டிக்கெட் தரமாட்டேன்" என்று கவுன்டரில் சொல்லி விட்டார். அவ்வளவு ஸ்ட்ரிக்ட். அப்படி இருந்த நான் இப்போ எப்படியோ ஆயிட்டேன்.

சகாதேவன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

///சகாதேவன் said...
//மறக்க முடியா திரையரங்கு மினர்வா..ஆங்கிலப் படங்கள் இதில் வரும்//
நான் பி.எஸ்ஸி முடித்து கிண்டியில் பி.ஈ சேர்ந்த வருஷம். நாங்கள் சைக்கோ படம் பார்க்க மினர்வா சென்றோம். "நீ சின்னப்பையன். இது அடல்ட் ஒன்லி படம். உனக்கு டிக்கெட் தரமாட்டேன்" என்று கவுன்டரில் சொல்லி விட்டார். அவ்வளவு ஸ்ட்ரிக்ட். அப்படி இருந்த நான் இப்போ எப்படியோ ஆயிட்டேன்.

சகாதேவன்//

:))))