அவன் பெயர் பிரபஞ்சன்..
அவனை நம்பினவர்கள் கெடுவதில்லை என்பார்கள்
வேண்டியவர், வேண்டாதவர் என்று பாராது அனைவருக்கும் பிரபஞ்சன் நன்மையே செய்து வந்தான்.
அவனால் நன்மை அடைந்தவர்களில்..அதுவும் அதிக நன்மை அடைந்தவர்களில் அவனும் ஒருவன்.ஆனால் அதை அவன் ஒப்புக் கொள்ள மாட்டான்.பிரபஞ்சனா ..அப்படி யாரும் இல்லை..என்பான்.
அப்படிச் சொல்லியபடியே பிரபஞ்சனால் முடிந்த நன்மைகளைப் பெற்றான்.
ஒருநாள்..இருவருக்கும் பொதுவான நண்பன் பிரபஞ்சனைப் பார்த்து..'அவன் நீ இல்லை என்கிறான்..ஆனால் நீ அவன் மீது அதீத நம்பிக்கை வைத்திருப்பதாகச் சொல்கிறானே?' என்றான்.
உடன் பிரபஞ்சன் அந்த பொதுவான நண்பனைப் பார்த்து 'அவன் சொல்வதில் உள்ள முரண் உனக்குத் தெரியவில்லையா?நான் இல்லை என்னும் அவன் மீது நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்கிறான் என்றால் என்ன பொருள் நான் இருப்பது அவனுக்குத் தெரியும்..அதைச் சொல்ல வெட்கப்படுகிறான் என்றுதானே பொருள்.தேவையில்லா ஒரு வெட்கம்..இவ்வளவு நடந்தபின் யார் என்ன சொல்லப் போகிறார்கள்..என்ற தைரியத்தை மட்டுமே என்னால் அவனுக்குக் கொடுக்க முடியவில்லை' என்றான் .
டிஸ்கி-இந்தக் கதைக்குள் எந்த உள்குத்தும் இல்லை..அப்படியிருப்பதாக நீங்களே நினைத்தால் கம்பெனி பொறுப்பல்ல
5 comments:
நானும் உங்களே மாதிரி அரை பக்க கதை எழுதலாமுன்னு இருக்கேன்
//நீங்களே நினைத்தால் கம்பெனி
பொறுப்பல்ல//
ஐயா வேலை ஏதும் காலி இருக்கா ?
வேலை ஏதும் காலியாய் இருப்பதாய் நான் நம்பவில்லை..ஆனால் அந்த நம்பிக்கை என்ன நம்புகிறது.
வருகைக்கு நன்றி நசர்
சார் எவ்வளவு நம்பிக்கையா நசர் ம்ம்ம் தாண்டி ரெண்டு பின்னூட்டி கேட்டிருக்காரு. பாராட்டுங்க சார். :))
வருகைக்கு நன்றி Bala
Post a Comment