Wednesday, November 24, 2010

மரண அடி வாங்கிய காங்கிரஸ்

கழுதைத் தேய்ந்து கட்டெறும்பு ஆனது என ஒரு சொலவடை உண்டு..

காங்கிரஸ் கட்சி விஷயத்தில் அது நடந்திருக்கிறது.

ஏதோ உத்தர பிரதேசத்தில் தனித்து நின்று சில தொகுதிகள் வென்றதும்..இனி நாம் தான் என்ற இறுமாப்பும்..பேச்சில் ஆணவமும் கொண்டு திகழ்ந்தது காங்கிரஸ்.

அவர்களுக்கு சரியான பாடம் கற்பித்துவிட்டது பீகார்..

பீகார் மக்களே..காங்கிரஸிற்கு சரியான பாடம் புகட்டிய உங்கள் அனைவருக்கும் நன்றி.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் அதன் ஆட்டம் அதிகமாய் இருந்தது.திராவிடக் கட்சிகளும் அதன் துணையிருந்தால் தான் ஆட்சி அமைக்க முடியும் என்னும் எண்ணத்தில் உள்ளன.அந்த எண்ணம் எவ்வளவு தவறானது என பீகார் முடிவுகள் தெரிவிக்கின்றன.

அங்கும் மூன்று அணிகள்..

நிதிஷ்குமார்..பி.ஜே.பி., அணி ஒரு புறம்

லாலு, பாஸ்வான் அணி ஒரு புறம்

காங்கிரஸ்

சாதாரணமாக இந்நிலையில் எந்த ஒரு அணிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றே அனைவருக்கும் தோன்றும்..ஆனால் நிதிஷ்குமாருக்கு மாபெரும் வெற்றியைக் கொடுத்துள்ளனர் மக்கள்.

பீகாரில்..முடிவிற்குப் பிறகு தமிழகத்தில் பேரத்தை ஆரம்பிக்கலாம் என்ற காங்கிரஸின் எண்ணம் தவிடு பொடியாய்விட்டது.

திராவிடக் கட்சிகளே..மீண்டும் சொல்கிறேன் காங்கிரசை கழட்டிவிடுங்கள்..தவிர்த்து உங்களை நம்பி வரும் மற்ற கட்சிகளுடன் கூட்டு வையுங்கள்.கண்டிப்பாக மக்கள் ஆதரவு உங்களுக்குக் கிட்டும்.

காங்கிரஸ்தான் உங்கள் கூட்டணியில் வேண்டும் என்றால்..உங்களை காப்பாற்ற முடியாது.

கடைசி நேர பேரம் பலனளிக்காது.

14 comments:

பவள சங்கரி said...

எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தானே.....

பிரபாகர் said...

பீகார் மக்கள்தாம் இந்தியாவிலேயே புத்திசாலிகள் என மாற்றிக்கொண்டேன், இருந்த எண்ணத்தை அழித்து!...

பிரபாகர்...

ILA (a) இளா said...

how cong decimated in bihar? 1985-196 seats, 1990-171 seats, 1995-29 seats, 2000-23 seats,2005-10, now 4seats.

கண்டிப்பா கலைஞர் இதுக்கப்புறமா நல்லா முடிவா எடுப்பாருன்னு நினைக்கிறேன். அம்மாவும் கழட்டி விட்டுட்டா அப்புறம், அவுங்க பாமக மாதிரி ஆகிடுவாங்க. கேப்டன் அம்மா கூட்டணி அநேகமா முடிவானமாதிரி தெரியுது. அதனால பாமக், காங்கிரஸ் கூட்டணி அமைக்க இப்பவே தயாராகிடலாம்.

ராஜ நடராஜன் said...

பதிவுக்கு போறதுக்கு முன்னாடி இன்றைக்கு ஒரு ஆந்திராக்கார பையன் தான் ரோசய்யா ராஜினாமா மற்றும் காங்கிரஸ்க்கு 4 சீட்டு மட்டும் பீகாரில்ன்னு செய்தி சொன்னார்.

தமிழகத்தில் தி.மு.க அல்லது அ.தி.மு.க என்ற குதிரைப்பயணம் என்பதுதான் எழுதி வைத்த விதி.

பார்க்கலாம் 2011ல் தமிழக களத்தை.

ராஜ நடராஜன் said...

//பீகார் மக்களே..காங்கிரஸிற்கு சரியான பாடம் புகட்டிய உங்கள் அனைவருக்கும் நன்றி.//

பீகார் மக்களுக்கு வாழ்த்துக்கள்.

KANA VARO said...

எல்லாம் அரசியல்

ILA (a) இளா said...

பீகாரில் காங்கிரஸ் தோத்திருச்சுன்னு சந்தோசப் படற மக்களே, அங்கே BJP கூட்டணிங்கிறது மறந்துட்டாங்களோ?

vasu balaji said...

//காங்கிரஸ்தான் உங்கள் கூட்டணியில் வேண்டும் என்றால்..உங்களை காப்பாற்ற முடியாது.//

காங்கிரஸ் கூட்டணியில் வேண்டாமென்றால்னு போட்டு காங்கிரஸ் மிரட்டுமே சார்:))

Chitra said...

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தானே.....


...... அவ்வ்வ்வ்...... !

Unknown said...

இந்த இளங்கோவன் எங்க ஆளையே காணோம், காங்கிரஸ் கட்சி ஒழிஞ்சாத்தான் நாடு உருப்படும்...

sathishsangkavi.blogspot.com said...

..
காங்கிரஸ்தான் உங்கள் கூட்டணியில் வேண்டும் என்றால்..உங்களை காப்பாற்ற முடியாது...

உண்மை தான்...

seeprabagaran said...

காங்கிரஸ் கட்சியிடமிருந்தும் நேரு குடும்பத்திடமிருந்தும் நாட்டை மீட்க வேண்டியது நாட்டுமக்களின் கடமை. அதுபோல் தி.மு.க.விடமிருந்தும் தமிழகத்தை மீட்கவேண்டியது தமிழனின் கடமை. காங்கிரஸ் கட்சிக்காக தமிழினத்திற்கு கருணாநிதி-தி.மு.க. செய்த துரோகம் என்பது நீண்ட நெடிய வரலாற்றுப் பதிவு. இவர்கள் கங்கிரசிடமிருந்து விலகிவிட்டதாலேயே இவர்கள் உத்தமர்களாக மாறிவிட்டார்கள் என்று நம்பி ஏமாந்துவிடக்கூடாது.

அருள் said...

பத்திரிகைகளின் பித்தலாட்டம்: பீகாரில் சாதி தோற்றதா?

http://arulgreen.blogspot.com/2010/11/blog-post_25.html

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்தோர்,கருத்து தெரிவித்தோர் அனைவருக்கும் நன்றி