Thursday, November 25, 2010

லிவிங் டுகெதர்

லிவிங்க் டுகெதர் பற்றி இப்போது இணயத்தில் நிறைய பதிவர்கள் எழுதி வருகின்றனர் பல மாறுபட்டக் கருத்துகளுடன்.
குஷ்பூ வழக்கில் உச்சநீதி மன்ற நீதிபதிகள் சொன்னதை நான் அன்று ஒரு இடுகையாக இட்டேன்..
அந்த மீள் பதிவு இதோ

ஆண்டவன் கிருஷ்ணனும்..ராதாவும் லிவிங் டுகெதர்

உச்சநீதி மன்றம்..திருமணமாகாத ஆணும்..பெண்ணும் சேர்ந்து வாழ்வது என்பதை குற்றம் என்று சொல்ல முடியாது என தன் கருத்தை சொல்லியுள்ளது.

வயது வந்த இருவர் சேர்ந்து வாழ நினைப்பதில் என்ன தவறு இருக்கமுடியும்?இது குற்றமும் அல்ல..குற்றம் என்று சொல்லவும் முடியாது என்று உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதியும்..மற்றும் இரு நீதிபதிகளும் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடவுளான கிருஷ்ணரும்..ராதாவும் கூட இதிகாசத்தில் ஒன்று சேர்ந்து தான் வாழ்ந்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

நடிகை குஷ்பூ கற்பு பற்றி 2005ல் சில பத்திரிகைகளில்..கல்யாணத்திற்கு முன் உறவு வைப்பதை குறித்து தன் ஆதரவான கருத்தைத் தெரிவித்திருந்தார்.அதனால் கொதித்து (!!!!) எழுந்த மக்களால் 22 வழக்குகள் அவர் மீது போடப்பட்டன. அவற்றை தள்ளுபடி செய்யச் சொல்லி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனு மீதான விசாரணையில்..தங்களது தீர்ப்பை தள்ளி வைத்துள்ள நீதிபதிகள்..மேற் கூறியவாறு தங்களது கருத்தையும் கூறியுள்ளனர்.

மேலும் நீதிபதிகள்..குஷ்பூவிற்கு எதிராக வாதாடும் வக்கீல்களிடம் 'இது எந்தப் பிரிவின் கீழ் குற்றம்' எனக் கேட்டதுடன்..ஆர்ட்டிகள் 21 ன் படி..வாழும் உரிமையையும்..சுதந்திரமும் ஒருவரின் அடிப்படை உரிமை என்பதையும் நினைவூட்டினர்.மேலும் அவர்கள் கூறுகையில் 'குஷ்பூ தன் தனிப்பட்டக் கருத்தைக் கூறியுள்ளார்....இது எந்த விதத்தில் உங்களை பாதித்துள்ளது..அவர் கூறியது அவரது தனிப்பட்டக் கருத்து.அது எந்த பிரிவின் கீழ் குற்றமாகிறது..குஷ்பூ..இப்படிக் கூறிய்தைக் கேட்டு எவ்வளவு பெண்கள் வீட்டை விட்டுச் சென்றனர்..எனக் கூற முடியுமா?' என்றும் கேட்டார்கள்.மேலும் வாதம் செய்பவருக்கு பெண் குழந்தைகள் இருக்கிறதா எனக் கேட்டவர்கள் 'இல்லை' என்றதும் நீங்கள் எந்த வகையில் இதனால் பாதிக்கப் பட்டுள்ளீர்கள்.. என்றும் கேட்டனர்.

உச்ச நீதி மன்றத்தில் இவ்வழக்கிற்காக ஆஜரான குஷ்பூ..வக்கீல்கள் அமரும் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார்.

இச்சமயத்தில் நான் சமீபத்தில் படித்த ஒரு செய்தியையும் உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்..

இப்போதெல்லாம்..திருமணமாகி..விவாகரத்து பெறும் தம்பதிகள்..தங்கள் நண்பர்களுக்கு ஒரு பார்ட்டி கொடுத்து..மன மகிழ்வோடு நட்போடு பிரிகின்றனர்..'இனி நாம் கணவன் மனைவி இல்லை..நண்பர்கள்' என்று.

கணவனும் ..மனைவியும் நண்பர்கள் இனி என பிரியும் போது..நண்பர்கள்..கணவன்..மனைவியாக திருமணமாகாமல் லிவிங்க் டுகெதரும் தவறு இல்லை போலும்!!

16 comments:

Unknown said...

இந்தியா அமெரிக்காவை நோக்கி பறக்குது...

Unknown said...

தவறு என்று சொல்லலாம். குற்றம் என்று சொல்ல முடியுமா? குற்றம் என்று சொன்னால் எந்த பிரிவின் கீழ் என்ற கேள்விதான் வரும்.

"உழவன்" "Uzhavan" said...

எப்படியோ.. நல்லா சந்தோசமா வாழ்ந்தா சரிதான் :-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி செந்தில்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ananth

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி uzhavan

வருண் said...

நான் உள்ளே வரலாமா? :)

Jayadev Das said...

அது சரிங்க, இந்த லாட்ஜ்களில் சுகத்துக்காக ஒதுங்கும் ஜோடிகளை எதுக்காக போலிஸ் காரர்கள் ரெயிட் விட்டு கைது செய்கிறார்கள்? இருவரும் சம்மதித்துத்தானே அவர்கள் என்ஜாய் பண்ணுகிறார்கள்? அது மட்டும் எப்படி குற்றமாகும்?

T.V.ராதாகிருஷ்ணன் said...

தாராளமா வாங்க..வருண்..
நீங்க நம்ம வலைப்பூ பக்கம் வந்து நாளாச்சு.
எப்படி இருக்கீங்க?

T.V.ராதாகிருஷ்ணன் said...

// Jayadeva said...

சரிங்க, இந்த லாட்ஜ்களில் சுகத்துக்காக ஒதுங்கும் ஜோடிகளை எதுக்காக போலிஸ் காரர்கள் ரெயிட் விட்டு கைது செய்கிறார்கள்? இருவரும் சம்மதித்துத்தானே அவர்கள் என்ஜாய் பண்ணுகிறார்கள்? அது மட்டும் எப்படி குற்றமாகும்?//

நல்ல கேள்வி ஜெயதேவா..
சமூக ஆர்வலர்களே..யாரேனும் நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள்.

வருண் said...

***கே.ஆர்.பி.செந்தில் said...

இந்தியா அமெரிக்காவை நோக்கி பறக்குது...

November 25, 2010 5:21:00 AM PST***

நம்ம சட்ட திட்டங்களும் அதேபோல் ஆனால் பரவாயில்லையே! நம்ம முன்னேற்றம் பாலன்ஸ்டா இல்லை என்பதே பிரச்சினை! :)

வருண் said...

அமெரிக்காவில் லிவிங் டுகெதெர் டொமஸ்டிக் பார்ட்னெர்னு இருக்கும்போது, பெனிஃபிட்ஸ், ஹெல்த் இண்சூரன்ஸ் போன்றவை 'துணைவி" அல்லது "துணைவருக்கு" எல்லா மாநிலங்களிலும் கிடைப்பதில்லைனு நான் நம்புறேன்.

///Arizona Governor Takes Away State Domestic Partner Benefits
Says 'God Has Placed Me in This Powerful Position'

Arizona Governor Jan Brewer has eliminated state domestic partner benefits a year after they were implemented, the Arizona Daily Star reports///

இப்போ லிவ் இன் டுகெதெர்ல உள்ளவங்க திருமணம் செய்து இருந்தால் இவங்களுக்கு பிரச்சினை இல்லை. கல்யாணம் செய்வதால் நெறைய அட்வாண்டேஜ் உண்டு. உலகமே கல்யாணம் என்பதைத்தான் சரியான வழி என்று வலியுறுத்துது.

வருண் said...

***Jayadeva said...

அது சரிங்க, இந்த லாட்ஜ்களில் சுகத்துக்காக ஒதுங்கும் ஜோடிகளை எதுக்காக போலிஸ் காரர்கள் ரெயிட் விட்டு கைது செய்கிறார்கள்? ***

ஜோடியில் ஒருவர் விலைமகள்/ன் ஆக இருந்தால்தான் அரெஸ்ட் செய்வார்கள். விபச்சாரம் இல்லீகல் இல்லையா?

இப்போ கணவன் மனைவினா சட்டப்படி அதை நிரூபிக்கலாம்.

செக்ஸ் வைத்துக்கொள்ளுகிற லிவ் பார்ட்னெர்னா, அதை எப்படி நிரூபிப்பாங்கனு தெரிய்லை.

வருண் said...

***இருவரும் சம்மதித்துத்தானே அவர்கள் என்ஜாய் பண்ணுகிறார்கள்? அது மட்டும் எப்படி குற்றமாகும்?

November 27, 2010 1:25:00 AM PST**

ஒரு விலைமகளும்/னும் இன்னொருவரும் உறவு வைத்துக்கொண்டால், அது குற்றம்னு நெனைக்கிறேன்.

விபச்சாரம் சட்டவிரோதமானது தானே?

வயதுக்கு வந்த கேர்ல்-ஃப்ரெண்ட் பாய் ஃப்ரெண்டு னா அவர்களை சட்டப்படி அரெஸ்ட் செய்ய முடியாது.

ஆனால் நம்ம சட்டம் நடைமுறைக்கு வர எவ்வளவு தூரத்துல இருக்குனு தெரியலை!

-------------

ஒரு பெண் ஒருவனோட இன்னைக்கு லாட்ஜுக்கு போறா. அவனோட உறவு முறிந்துவிடுகிறது. இன்னொரு 3 மாதத்தில் இன்னொரு பாய்ஃப்ரெண்டு அல்லது லிவ் இன் பார்ட்னெருடன் அதே லாட்ஜுக்குப் போனால், நம்ம ஆளு அந்தப் பெண்ணின் நிலையைப் புரிஞ்சுக்குவார்களா? எனக்கு ரொம்ப சந்தேகம்தான் :)

வருண் said...

ஒருசில வாய்ப்பேச்சில் வீரர்கள். யாரையும் கூமுட்டைனு நினைப்பவர்கள் என்ன சொல்றாங்கனா, ரெண்டு பேர் ஆசைப்பட்டால் அது அவர்கள் தனிப்பட்ட பிரச்சினை என்கிறார்கள்.

* இப்போ அந்த ரெண்டு பேரும் 17 வயதில் இருந்தால்?

* அல்லது ஒருவர் 17 வயதில் இன்னொருவர் 50 வயதில் இருந்தால்?

இதில் ரெண்டாவது கேஸ் சட்டவிரோதம்னு நெனைக்கிறேன்.

இது இருவரோட தனிப்பட்ட பிரச்சினைனு சொல்லமுடியாது.

எல்லோரையும் கூமுட்டைனு சொல்லும் இவர்கள், கொஞ்சம் நிதானித்து யோசிக்கனும்.

No matter what happens someone is going to be UNHAPPY. Nobody is going to earn the full freedom to live the way they want.

பதிவர் காமராஜ் சொல்லி இருக்கார், காதல் திருமணம் செய்த தம்பதிகள் தன் குழந்தைகளுடைய காதலை அங்கீகரிக்க மறுக்கிறார்கள் என்று. இதுபோல் நானும் பார்த்து இருக்கேன். காதல் திருமணம் ச்செய்தவர்கள் தன் குழந்தைகளுக்கு அரேஞிட் மேரேஜ் செய்வதையும். இன்னைக்கு இவங்க பேசுறதும் 20 வருடம் சென்று இவங்க குழந்தைனு வரும்போது இவங்க செய்றதும் வேற வேற மாதிரி இருக்கும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி varun