நான்
உடல் வலிமையுள்ளவன் என்கிறாயே
உன் அன்னைக்கு நன்றி சொல்
உதிரத்தை பாலாய் கொடுத்தவள்
அவர்
நான்
பண்புள்ளவன் என்கிறாயே
உன் தந்தையை வணங்கு
உன்னை ஆக்கியவர்
அவர்
நான்
அறிவாளி என்பவனே
உன் ஆசிரியரை நினை
உன் அறிவை வளர்த்தவர்
அவர்
நான்
நல்ல கணவன் என்கிறாயே
உன் மனைவியைக் கேள்
உனக்கு அப்பெயர் வரக் காரணம்
அவள்
நான்
நல்ல தந்தை என்பவனே
உன் வாரிசுகளைக் கேள்
உன் கடமையைசெய்ததை உரைப்பவர்
அவர்
நான்
நல்லவன் என பெருமையுறுபவனே
உன் உடல் சுமக்கப்படும் போது
உன் சுற்றமும்..நட்பும் சொல்லட்டும்
அதை
17 comments:
அருமை சார்.
நான்
நல்லவன் என பெருமையுறுபவனே
உன் உடல் சுமக்கப்படும் போது
உன் சுற்றமும்..நட்பும் சொல்லட்டும்
அதை
.....
"நான் நல்லவன்" என்ற ஆணவமும் எதற்கு? மிகச் சரியாக சொல்லி இருக்கீங்க....
நல்லாயிருக்கு சார்..
பிரமாதம் சார்:)
சூப்பர் சார்!
நன்றி
butterfly Surya
chitra
அஹமது இர்ஷாத்
Bala
எஸ்.கே
அர்த்தம் பொதிந்தது. அருமை.
அருமை்ான அழு்்்மான வரிகள்
அருமை பாஸ்!
நன்றி
ஹுஸைனம்மா
Goma
சிவா
நான்யார் என்பதை யோசித்தாலே வாழ்வில் வளம்.அற்புதம்!
நன்றி ஹேமா
last point super
நன்றி Gopi Ramamoorthy
எல்லா நிலைகளையும் இன்னொருவர் சொல்லி இன்னொருவர் மூலம் தன்னிலை அறிதல் சொல்லியிருக்கிறீர்கள். அது சரியா? என்பது என் யோசனை. எதிர்ப்பார்ப்புகள் பூர்த்தியானால் மட்டுமே நீங்கள் கூறும் உறவுகள் ஒருவனைப் போற்றும். உண்மையில் ஒரு மனிதனின் கடமைகள் வேறென நினைக்கிறேன். வந்துப் போங்கள்... ( ithayasaaral.blogspot.com )
நன்றி தமிழ்க் காதலன்.
அருமை
Post a Comment