Sunday, April 17, 2011

பதிவுலகம் 'டல்' அடிப்பதேன்....



கடந்த சில மாதங்களாக பதிவுலகம் டல் அடித்து வருகிறது.

அதற்கான காரணங்கள் என்னவாய் இருக்கும் என யோசித்ததில் எனக்குத் தோன்றிய காரணங்களில் முதல் இடம்..

தமிழ்மணம் அறிவித்த முன்னணி வார வலைப்பதிவுகள்..

இதில் இருபதற்குள் வர வேண்டும் என பலருக்கு விருப்பம் ஏற்பட்டதால்..ஒருநாளைக்கு இரண்டு மூன்று என பதிவுகள் இட ஆரம்பித்தனர்.இதனால் பதிவிட சரியான விஷயங்கள் இல்லாததால்..சாரமில்லா பதிவுகள்,நடிகைகள் படங்கள்,பதிவர்களை கலாய்த்தல் போன்ற பதிவுகள் அதிகம் வர ஆரம்பித்து..அவற்றை படிப்பவர்கள் இடையே சலிப்பே ஏற்பட்டது.கமெண்டுகள் அதிகரிக்க..1,2,3,4, என கமெண்டுகள் எண்ணிகையில் போடப்படுகின்றன.

அடுத்த காரணம்..

பதிவர்களின்..ஈகோ..ஒரு காரணம்..

சில பதிவர்கள் வேலையினூடே பதிவிடுபவர்கள்..ஆகவே இவர்களால் அதிகம் பதிவிடமுடியாது..அதனால் முன்னணி பதிவில் இடம் பிடிக்க முடியாது.அது அவர்களின் வலைப்பூவின் தன்மையை குறைத்துவிடுமோ என்ற எண்ணம்.

தவிர்த்து..சென்ற வருடம்..

குறிப்பிட்ட சில பதிவர்கள் பற்றி தரக்குறைவான பதிவுகள் வர..நல்ல எண்ணத்துடன்..பதிவரிடையே ஒற்றுமையை ஏற்படுத்த நினைத்த சில முக்கிய பதிவர்களை..அவர்களின் எண்ணத்தை கொச்சப்படுத்தியதால்..அந்த பதிவர்கள் பதிவுலகை விட்டே விலகினர்.

இதனால்..இலக்கியத் தரம் மிக்க பதிவினை இட்ட இவர்களை இணையம் இழந்தது.

மீண்டும் பதிவுலகம் எழுச்சி அடைய வேண்டுமாயின்..

பதிவர்களிடையே..ஒற்றுமை அதிகரிக்க வேண்டும்..

வலைப்பதிவர்கள் குழுமம்.கூடி..சிறந்த பதிவர்கள் குழுவை ஏற்படுத்த வேண்டும்..

எந்த சமூக பிரச்னையானாலும்..அதை தனிப்பட்ட மனிதர்கள் கையாள்வதை விட இந்த குழுமம் மூலமாக செயல் படுத்தப் பட வேண்டும்.

வருடம் ஒரு முறையோ..அல்லது இரு வருடத்திற்கு ஒரு முறையோ..இந்தக் குழு மாற்றப்பட வேண்டும்.

பதிவர்களிடையே பிரச்னை என்றால்..இக்குழு மூலம் தீர்க்கப்பட வேண்டும்..

இதியெல்லாம் ஓரளவு வரைமுறைப் படுத்தினால் மீண்டும் பதிவுலகம் புத்துணர்ச்சி பெறலாம்.

எல்லாவற்றையும் விட

இறுதியாக...

தனிமனிதத் துதி ஒழித்திட வேண்டும்..

செய்வோமா?

40 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முதல் மழை

சி.பி.செந்தில்குமார் said...

>>>அதனால் முன்னணி பதிவில் இடம் பிடிக்க முடியாது.அது அவர்களின் வலைப்பூவின் தன்மையை குறைத்துவிடுமோ என்ற எண்ணம்.

தமிழ்மண ரேங்கிற்கும் ,வலைப்பூ தரத்துக்கும் சம்பந்தம் இல்லை.டாப் 20யில் வரும் பதிவர்களை விட வராத குவாலிட்டி பதிவர்களின் பதிவுகள் சுவராஸ்யமே..

Unknown said...

அப்படியா!

ஒசை said...

சற்றே டல் அடிக்கிறது. எந்த பதிவருக்குமே எழுத துவங்கும் போது இருக்கின்ற வேகம் பிறகு இருப்பதில்லை. விருதுகளை விடுங்கள். பதிவர்கள் சிறந்த பதிவை பார்த்தால் பின்னூட்டமிட வேண்டும். பின்னூட்டம் என்பது படைப்பை குறித்த கருத்துக்கான இடம். அங்கே படைப்பு குறித்த கருத்தை தவிர எல்லாமே பகிரப் படுகிறது என்பது கசப்பான உண்மை.

Paleo God said...

புரட்ச்சி ஓங்குக! :))

சமுத்ரா said...

WELL SAID

NO said...

100 % Correct நீங்கள் சொல்லுவது!

Killing the creativity என்பார்கள். அதாவது ஒரு அஜெண்டாவுடன் செயல்படும் கூட்டங்கள் முதலில் டார்கெட் செய்வது free speech, liberal thoughts மற்றும் அதன்
ஊற்றான creativityஐத்தான். இது நடக்க ஆரம்பித்தவுடன் முதலில் காணாமல் போவது நடு நிலை எடுக்கும் சாமானியர்கள்தான்! அதுதான் இங்கேயும் நடந்து விட்டது!

தமிழ்மணம், மற்றும் சில திரட்டிகளில் இருக்கும் வாசகர்களைவிட அதில் இல்லாத பல பதிவர்களின் வாசிப்பு மிக அதிகமாக இருப்பதாக எனக்கு படுகிறது! நான் பார்த்த வரையில் முக்கிய திரட்டிகளில் வாசகர்களின் response மிக மிக குறைந்து விட்டது!

இப்பொழுது தமிழ்மணத்தில் வீராப்பாக எழுதுபவர்கள் யாரென்று பார்த்தால், வினவு கும்பல்கள் மற்றும் அவர்களது அல்லக்கைகள், சில இஸ்லாமிய தீவிரவாத மதவாத பதிவர்கள், இந்திய தேசத்திற்கு எதிராக எழுதும் புரட்சிகள், பகுத்தறிவு டுபாகூர்கள் மற்றும் இந்துமதத்தை திட்டுபவர்கள் போன்ற சிலரே. இவர்களை தவிர இங்கே, இப்பொழுது யாரும் இருப்பதாக தெரியவில்லை. இவர்களுக்கும் வேறு பிழைப்பு வரும்வரை இதை தொடருவார்கள். In fact அவர்களில் சிலருக்கே இது போரடித்ததால் ஒதுங்கிக்கொண்டு விட்டார்கள் என்பதும் புரிகிறது!

முக்கியமான விடயம், வரப்போகும் ஆட்சி! இதன் implication பல பேருக்கு புரியாமல் இருக்கிறது! இன்னும் நான்கு மாதத்தில் காட்சியை பார்த்தால் முக்கால் வாசி "புரட்சிகள்" மற்றும் டுபாகூர் பகுத்தறிவுகள் நமக்கு ஏனப்பா வம்பு என்று நிறுத்திவிடுவார்கள்! வெளி நாடுகளில் இருந்துகொண்டு இந்தியாவை கண்டபடி திட்டும் கும்பல்கள் சில காலங்கள் எழுதலாம். ஆனால் அதவும் கரைந்து போய்விடும்.

2012 ஏப்ரல் மாதத்தில் நீங்கள் தமிழ் வலை உலகத்தை பார்த்தால் அநேகமாக வேறு மாதிரி இருக்கும்!

எண்ணங்கள் 13189034291840215795 said...

எனக்கு அப்படியேதும் தெரியவில்லை..

நான் குறிப்பிட்ட சில நல்ல சமூக அக்கறையுடையவர்கலின் எழுத்துகளை தொடர்ந்து வாசிக்கிறேன்,.. நல்ல இடைவெளி விட்டு நன்றாகவே எழுதுகின்றனர்... நல்ல தரமும் இருக்கின்றது..


தரமற்ற எழுத்துகள், ( நடிகை, ஆபாசம், அரசியல் மற்றும் தனிமனித தாக்குதல் ) கண்டுகொள்ளவேண்டியதில்லை.. சிலவற்றை அம்பலப்படுத்துவதை தவிர..

நிஜமா சொல்லப்போனால் , வினவு போன்ற சமூக தள பதிவுகலையும் அதில் வரும் பின்னூட்டங்களையும் கூட படிக்க நேரமில்லையே என்ற கவலையுண்டு..

பிரபாகர் said...

சரியாய் சொல்லியிருக்கிறீர்கள் அய்யா!...

பிரபாகர்...

ராஜ நடராஜன் said...

கடை மாறி வந்திட்டேனா:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி செந்தில்குமார்..
நீங்கள் சொல்வது உண்மை..ஆனலும் சம்பந்தப்பட்ட பதிவர்கள் மனதை சற்று பாதிக்கிறது இந்த முன்னணி பதிவு பகுதி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
விக்கி உலகம்

TBR. JOSPEH said...

முதலில் கூட்டு சேர்ந்துக்கொண்டு தரமில்லாத பதிவுகளை பரிந்துரைக்கும் பழக்கத்தை பதிவர்கள் விட்டொழிக்க வேண்டும்.

Unknown said...

நிறைய கசப்பான உண்மைகளை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்..

Unknown said...

//சற்றே டல் அடிக்கிறது. எந்த பதிவருக்குமே எழுத துவங்கும் போது இருக்கின்ற வேகம் பிறகு இருப்பதில்லை. //


தொடர்ச்சியாக எழுதுவதற்கு நிறைய நடைமுறை சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கிறதே..

Unknown said...

//2012 ஏப்ரல் மாதத்தில் நீங்கள் தமிழ் வலை உலகத்தை பார்த்தால் அநேகமாக வேறு மாதிரி இருக்கும்!//


நம்புவோம்..

MANO நாஞ்சில் மனோ said...

வித்தியாசமான அலசலா இருக்கே...சிந்திக்க செய்கிறது....

vasu balaji said...

:). True

ஹேமா said...

ம்..உண்மைதான் !

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
ஒசை

நசரேயன் said...

ஐயா நான் எழுதலைன்னு இப்படி ஒரு இடுகை போட்டதுக்கு நன்றி

அன்புடன் அருணா said...

நிறையவே டல்' அடிக்கிறது!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஷங்கர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
சமுத்ரா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி No

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி எண்ணங்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பிரபாகர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// ராஜ நடராஜன் said...
கடை மாறி வந்திட்டேனா:)//

:)))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
டி.பி.ஆர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
Bala

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
பாரத்... பாரதி...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Mano

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
ஹேமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நசரேயன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அன்புடன் அருணா

வருண் said...

***தவிர்த்து..சென்ற வருடம்..

குறிப்பிட்ட சில பதிவர்கள் பற்றி தரக்குறைவான பதிவுகள் வர..நல்ல எண்ணத்துடன்..பதிவரிடையே ஒற்றுமையை ஏற்படுத்த நினைத்த சில முக்கிய பதிவர்களை..அவர்களின் எண்ணத்தை கொச்சப்படுத்தியதால்..அந்த பதிவர்கள் பதிவுலகை விட்டே விலகினர்.***

என்ன சார் என்னென்னவோ சொல்றீங்க!!!? இதெல்லாம்
நடந்ததா??!!

வருண் said...

***தமிழ்மணம் அறிவித்த முன்னணி வார வலைப்பதிவுகள்..

இதில் இருபதற்குள் வர வேண்டும் என பலருக்கு விருப்பம் ஏற்பட்டதால்..ஒருநாளைக்கு இரண்டு மூன்று என பதிவுகள் இட ஆரம்பித்தனர்.இதனால் பதிவிட சரியான விஷயங்கள் இல்லாததால்..சாரமில்லா பதிவுகள்,நடிகைகள் படங்கள்,பதிவர்களை கலாய்த்தல் போன்ற பதிவுகள் அதிகம் வர ஆரம்பித்து..அவற்றை படிப்பவர்கள் இடையே சலிப்பே ஏற்பட்டது.கமெண்டுகள் அதிகரிக்க..1,2,3,4, என கமெண்டுகள் எண்ணிகையில் போடப்படுகின்றன.**

என் பார்வையில் இது பலரை "மோட்டிவேட்" பண்ணுகிறது. சிலரை நிச்சயம் பாதிக்கலாம். கூட்டிக் கழிச்சுப்பார்த்தால் இலாப நஷ்டங்கள் சமம்தான்!

பதிவுலகம் பலவிதமாக மாறிக்கொண்டு போகிறது என்பதென்னவோ உண்மைதான். கூட்டிக் கழிச்சுப் பார்த்தால் தற்போது நல்ல பாதையில்தான் போகிறது என்பது என் கணிப்பு! :)

நா. கணேசன் said...

நல்ல ஆய்வு!

நன்றி,
நா. கணேசன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வருண்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
நா. கணேசன்