Sunday, September 11, 2011

என்னை மறந்து சிரித்தேன்..




திரு அ.முத்துலிங்கம் அவர்கள் குமுதம் ..குழுமத்தில் இருந்து வரும் தீராநதி பத்திரிகையில் இம்மாதம் 'இன்றைக்கு அனுப்புகிறேன்' என்று ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.அழகிய நடை,.. அக்கட்டுரையை படித்தேன்.
அதில் ஓரிடத்தில் என்னையும் மீறி சிரித்தேன்...
நானே சிரித்துக்கொள்வதைக் கண்ட என் மனைவி ஒரு மாதிரி என்னைப் பார்த்தாள்.
அந்த ..நான் சிரித்த பகுதியை..உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..

சாலையில் நான் பாட்டுக்கு காரை ஓட்டிக் கொண்டு போனேன்.நான் எப்போது வெளியே வருவேன் என்று காத்துக் கொண்டிருந்ததுபோல ஆகாயம் சின்ன பனித்தூறலை அனுப்பியது.ஒவ்வொரு சிவப்பு விளக்காக நின்று நான் ஆமை வேகத்தில் ஊர்ந்து கொண்டிருந்தேன்.ரோட்டிலே ஆட்களே இல்லை.கார்கள் இல்லை.நானும் பனித்தூறலும் மட்டுமே.ரேடியோவில்..'தென்றல் வந்து என்னைத் தொடும்..அ..ஆ' என்ற பாடலை ஒரு பெண் பாடிக்கொண்டிருந்தார்.இலங்கையில் உற்பத்தியாகி, கனடாவில் பிறந்த பின்னர் அவர் தமிழையும் இசையையும் கற்றுக்கொண்டவர் என்பது உடனேயே தெரிந்தது.எப்படியென்றால்..'தென்ளல்,தென்ளல்..'என்று விடாமல் உச்சரித்துக் கொண்டிருந்தார்.
பிறகு அதே பாட்டில்'தெரிந்த பிற குதிரைகள்' என்று பாடிக்கொண்டிருந்தார்.இந்தப் பாடலில் குதிரைகள் வராதே என்று என் மனம் உறுத்தியது.வீட்டுக்கு வந்து நிதானம் அடைந்த பின்னர் ரேடியோப் பெண் 'தெரிந்த பிறகு திரைகள்' எதற்கு'  என்ற வரியைத்தான் 'தெரிந்த பிற குதிரைகள்' என்று பாடியிருக்கிறார் என்பது புலனானது.

(நன்றி- தீராநதி)

டிஸ்கி- நகைச்சுவையை மட்டும் ரசிக்கவும்..


6 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

நல்ல நகைச்சுவை.

முனைவர் இரா.குணசீலன் said...

நல்ல நகைச்சுவை.

முனைவர் இரா.குணசீலன் said...

அது ஒருபக்க வாதம்!
அதுஒரு பக்கவாதம்!

என்பது போல பிழையும் சிலநேரம் சுவையையும், சிலநேரம் சிரிப்பையும் ஏற்படுத்திவிடுகிறது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி முனைவர்.இரா.குணசீலன்

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா சிரிச்சி முடி அலை [[முடியலை]] ஹே ஹே ஹே ஹே ஹே நாங்களும் சொல்வோம்ல....

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Mano