Thursday, November 17, 2011

பஸ் கட்டண உயர்வு நியாயமானதா..?




பேருந்து கட்டணத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.வெளியூர் செல்லும் பேருந்துகளை விடுத்து..மக்கள் தினசரி வேலைக்குப் போக உபயோகிக்கும் பஸ் கட்டண உயர்வு நியாயமா..என்று பார்ப்போமாயின்....

நியாயம் என்றே தோன்றுகிறது..

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு..இக்கட்டண உயர்வு வருகிறது.2001ல் முதல் மூன்று கிலோ மீட்டருக்கு 2 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.அதன் பிறகு பல முறை டீசல் விலை உயர்வு, ஊழியர்கள் ஊதியம், போனஸ், உதிரி பாகங்களின் உயர்வு என பல பல மடங்குகள் உயர்ந்து விட்டன.

அன்று ஆட்டோ குறைந்த பட்சம் அதே தூரத்திற்கு இருபது ரூபாய் கேட்டார்கள்..இன்று அதே தொலைவு 40 முதல் ஐம்பது ரூபாய் ஆகிறது.

பணவீக்கத்தை கணக்கில் கொண்டு பார்த்தால் உள்ளூர் கட்டண உயர்வு நியாயமானதாகவேத் தோன்றுகிறது..

ஆனால் என்ன..சாதாரணக் கட்டணப் பேருந்தைக் குறைத்து..எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் என அதே தடத்தில் பேருந்துகளை அதிகம் இயக்கி..மக்களை ஏமாற்றக் கூடாது..

அதை செய்யாவிடில்..இந்த ஏற்றம் ஒப்புக்கொள்ள வேண்டிய ஒன்றே..

பால் விலை ஏற்றம்..கொஞ்சமும் ஏற்க முடியாது..

அனைத்து மக்களுக்கும்..குறிப்பாக ஏழைகளுக்கு வாங்கும் நிலையில் உள்ள ஒரே ஊட்டச்சத்து பால் மட்டுமே..ஏழைக்குழந்தைகளும் ஹார்லிக்ஸ், காம்ப்ளான் என் ஆசைப்படமுடியாமல்..வெறும் பால் மட்டுமே குடிக்கக் கிடத்ததே என்னும் திருப்தியுள்ள நிலையில்..அதன் அநியாய ஏற்றம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

மேலும்..அது அட்டைதாரர்களுக்கு 6 ரூபாய்க்கு மேல் ஏறியுள்ளது.பெரும்பாலோர் மாதம் மொத்த பணத்தைக் கொடுத்து அட்டை வாங்க முடியாதவர்கள்.மேலும் ஆவின் அட்டை வழங்குவதை வேறு நிறுத்திவிட்டது.இந்நிலையில் வெளியில் அட்டை இல்லாதோர் 17 விலையுள்ள பாலை 22 ரூபாய்க்கு வாங்குகிறார்கள்.அவர்கள் இனி 28 முதல் முப்பது வரை கொடுக்க வேண்டியிருக்கும்..இது இன்று எல்லா அத்தியாவசியப் பொருள்களும் ஏறியுள்ள நிலையில் முடியாத காரியம்.மேலும் கொள்முதல் விலையை 2 ரூபாய் ஏற்றிவிட்டு மக்கள் தலையில் 6 ரூபாய் ஏற்றுவது எந்த வகையில் நியாயம்.

ஆகவே அரசு உடனடியாக பால் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்.தேவையானால்..குடிமகன்களிடமிருந்து சற்று அதிகம் பெற்று, அதை ஆவினுக்கு மானியமாக அரசு வழங்கலாம்.

இனி மின் உயர்வு..

இல்லாத ஒன்றிற்கு ஏற்றம்.தவிர்த்து சென்ற வருடம் தான் மின்கட்டணம் உயர்ந்துள்ளது.

மின்வாரியத்தின் வருவாய், ஊழியர் சம்பளம்.,உபகரணங்கள் விலை.ஆகியவற்றை ஆய்வு செய்து..சேமிக்க வேண்டியவற்றை சேமித்து..ஊழலை ஒழித்து, திருட்டு மின்சாரம் எடுப்பதைத் தடுத்து நிறுத்தினாலே ஓரளவு நஷ்டத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம்.

இலவச மிக்சி,கிரைண்டர்,லேப்டாப்,மலைப்பிரதேசங்களில் இண்டக்சன் அடுப்பு..இதையெல்லாம் இலவசமாகக் கொடுத்துவிட்டு..மின் உயர்வையும் கொண்டுவந்தால் என்ன அர்த்தம்.

பெட்ரோல், கேஸ் ஆகியவற்றிற்கு மானியம் வழங்குவது போல மின் தேவைக்கும்..ஒரு குறிப்பிட்ட அளவிற்குள் இருந்தால் (மாதம் 200 யூனிட் என்பது போல) அவர்களுக்கு உயர்வு கூடாது.

மேலும்..இதை நிரந்தரமாகத் தீர்க்க நமது மானிலம் தன்னிறைவு அடைய வேண்டும்.வேறு மாநிலங்களிலிருந்து அதிக விலைக்கு வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.அதற்கான முயற்சியில் அரசு இறங்கட்டும்.

விலையில்லா அரிசியை விலை கொடுத்து வாங்குபவர்களுக்கும் வழங்கி..அவர்கள் அதை வாங்காததால்..அதை கள்ளச் சந்தையில் கடத்தும் சமூக விரோதச் செயல் நிறுத்தப் பட வேண்டும்.உண்மைத் தேவை உள்ள அட்டைதாரர்களுக்கே இலவச அரிசி வழங்க வேண்டும்.

இதுபோன்றவற்றில் அரசு கவனம் செலுத்தினால்..அத்தியாவசியப் பொருள்களின் விலைகளை ஏற்றும் அவசியம் ஏற்படாது.


டிஸ்கி- 42 சதவிகிதம் மின் திருட்டு இந்தியாவில் நடக்கிறது ..இது செய்தி

10 comments:

SURYAJEEVA said...

என்ன சரக்கு பாட்டில் மீது விலை அதிகம் எத்தியிருக்கலாம்.. இல்ல இலவசம் கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டு போயிருக்கலாம்... இலவசம் வேணாம்னு நினைக்கிற என் மாதிரி குடிமகன் இந்த நாட்டில் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடுகிறார்கள்

KOMATHI JOBS said...

In Aavin-Booth Supply Lorry Drivers stolen Daily 80-140 Litres of Milk by trip,
In morning shift 40 Lorries, Evening trip 40 Lorries,
So per day 6,000-12,0000 Litres of milk stolen by Lorry Drivers,

Try to catch them and dismiss!

You Know Aavin Lorry carry 8000 Litre of Milk and it's not calculated by Litres, Its calculated by Weight and Specific Gravity.

So these type of scientifical Stollen by Aavin Milk supply Lorry drivers.

A true Ruler have the Knowledge of administration!

Jayalalitha rules like a HITLER,
No one true, sincere officers didn't come out and say the Solutions, suggestions, how to avoid losses and this type of frauds.

KOMATHI JOBS said...

Like that, EB Bill-meter reading accessor got money from the house owners and putting less average bill for houses, factories and after some time, they advise to make the meter's malfunctioned and complained as the Meters malfunctioning and faulty.

Like this type of illegal activities, every Access-or earned 1000's of rupees..,

In rural, Villages Junior Engineer of TNEB get money(Bribe) from Farmers and accepting extra HP motors, non accepatable activities.

மணிகண்டன் said...

//இல்லாத ஒன்றிற்கு ஏற்றம்.//

:-)))

வவ்வால் said...

//தேவையானால்..குடிமகன்களிடமிருந்து சற்று அதிகம் பெற்று, அதை ஆவினுக்கு மானியமாக அரசு வழங்கலாம்.//

ஏன் சார் இந்த கொலைவெறி! காபி, டீ குடிக்கிறதும் குடிப்பழக்கம் தான் , எனவே பால் விலை ஏறீனா தப்பில்லை. மத்திய அரசு பெட்ரோல் விலை ஏத்துதே அவங்களுக்கு இருக்கிற உரிமை , மாநில அரசுக்கு கிடையாதா , அவங்களும் கொஞ்சம் ஏத்திக்கட்டும் இப்போ என்னக்கெட்டுப்போச்சு,தங்க தாரகை புர்ச்டி தலவி எது வேண்டுமானால் செய்வாங்க, ஏன்னா ஓட்டு வாங்கி செயித்து இருக்காங்க, வாழ்த்துவோம் அவர்களை!

காஞ்சி முரளி said...

////நியாயம் என்றே தோன்றுகிறது..///

நண்பரே...!
Computerல் அமர்ந்துகொண்டு உலகத்தை காண முயலாதீர்...!
தினம்தினம் தன் ஒருநாள் தேவைக்காக (தேவை என்றதும் கார், பங்களா, ஆடம்பர வாழ்க்கை என எண்ணிவிடாதீர்) தன் பிழைப்புக்காக பேருந்தில் பயணம் செய்துகொண்டிருக்கும் ஏழையை... நலிந்த நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன் (தான் ஒருநாள் உழைத்து கூலி பெறமுடியாவிட்டால்... தானும்... தன் பிள்ளைகளும் பட்டினியோடு வாடும்.. அந்த ஏழையைச் சொல்கிறேன்) இந்த பேருந்து கட்டண உயர்வு பாதிக்காது எனச் சொல்கிறீர்கள்...!

தப்பு...! (தவறு எனச் சொல்லவில்லை.. காரணம் "தவறு" என்பது தெரியாமல் செய்வதால் விளையும் விளைவு.. ஆனால்... நீங்கள் தெரிந்தே இதை சொல்கிறீர்கள்)

எப்போதும்... நம் கண்ணோட்டத்திலேயே எதையும் பார்ப்பது தப்பு... நீங்கள் காரிலோ அல்லது மோட்டார்சைக்கிளிலோ செல்வபவராய் இருக்கலாம்...

தினம்தினம் தன் கால் வயிற்று கஞ்சிக்காக... பேருந்தில் பயணம் செய்யும் கூலியை பற்றி நினைத்துப்பார்த்து எழுதியிருந்தால் சரி...!

அந்த கூலிக்காரனுக்கு தன் கால்வீக்கம் மட்டுமே அறிவான்.... நீங்கள் சொன்ன "பணவீக்கம்" அறியமாட்டான்...

அவன் அதனை அறிந்துகொள்ளும் அவசியமும் இல்லை... அவன்... தினமும் எழுந்தால்.. தன் பொழைப்பு நல்லபடியாய் மாலைக்குள் முடித்து வீடு வந்து சேர்ந்து... கொண்டுவந்த கூலியில் உணவு உண்டு.. உறங்கினால் போதும் என நினைப்பவன்...

அவனுக்கு இந்த பணவீக்கம்... போனஸ்.. போன்றவைகள் தேவையில்லாத வார்த்தைகள்...!

அவன் காலையில் எழுந்து பிழைப்புத்தேட எழும்பூரிலிருந்து சைதாப்பேட்டைக்கு நேற்று வரை இரண்டு ரூபாய் டிக்கெட் எடுத்து வந்தால்... கூலி வேலை கிடைத்தால் உண்டு,

இல்லையென்றால்...
அதாவது கூலி வேலை கிடைக்கா விட்டால் மீண்டும் இரண்டு ரூபாய் கொடுத்து தான் வசிக்கும் குடிசைக்கு வந்து... வயிற்றில் ஈரதுணி கட்டிக்கொண்டு படுத்துவிடுவான்...

ஆனால்..
தாங்கள் இப்பதிவில் எழுதியுள்ள ////நியாயம் என்றே தோன்றுகிறது../// என்ற கட்டண உயர்வின் காரணமாய் இன்றோ... எழும்பூரிலிருந்து சைதாப்பேட்டைக்கு "எட்டு ரூபாய்" கொடுக்கவேண்டும்..

வேலை கிடைத்தால் பரவாயில்லை.. கிடைக்கவில்லை என்றால் அவன் எட்டும் எட்டும் பதினாறு ரூபாய்க்கு எங்கே போவான்...!

அந்த கூலி தொழிலாளிக்கு... பணவீக்கம்... பெட்ரோல்விலை... தங்கம் விலை.... ஷேர் மார்க்கெட் இதெல்லாம் அறியான்... அறியவும் முயற்சி செய்யமாட்டான்..

காரணம்...
அவனின் ஒரு நாள் பாடே பெரும்பாடு.. இதில் அவன் எங்கே பணவீக்கம்... ஷேர் இதெல்லாம் நினைப்பது...!

நீங்கள் இவர்களுக்காக... இவர்களைப்போல பல லட்சம் கூலி குடும்பங்களுக்காக கவலைப்படுங்கள்...!

நான் ஏன் இவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்றால்...! இப்போதுதான்... பஸ்ஸில் பயணம் செய்துவிட்டு வந்தவன்... நான் வாங்குன பல்பு தெரியுமா...!!!! நண்பரே...!

நேற்றுவரை என் அலுவலகம் வர மட்டும் பேருந்து கட்டணம் Rs.5.50 ஆனால் இன்றோ Rs.11 கட்டணம்... நான் பரவாயில்லை மாத ஊதியம் பெறுபவன்...

ஆனால்..
நான் மேலே சொன்ன கூலித்தொழிலாளியின் கதி...????????????

அதனால்... நண்பரே...!
"பணவீக்கம்" பற்றி நாம் சிந்திக்கும் நிலையில் இருக்கிறோம்...!

ஓர் நல்ல அரசு என்பது குடிமக்களை வரி... உயர்வு.... போன்றவற்றால் நசுக்கக் கூடாது... அப்படி அந்த அரசினால் "வரிகள் போடாமல்... கட்டண உயர்வு" உயர்த்தாமல் நிர்வாகம் செய்யமுடியவில்லை என்றால் "நிர்வாகத் திறன் " இல்லாத அரசுதான்.... இருப்பதை வைத்துதான் அரசாங்கத்தை... ஏழை, நடுத்தர மக்களை துன்புறுத்தாமல் ஆட்சி நடத்த வேண்டும்...! That is a good Administration...!

நம்மைவிட கீழுள்ளவரையும் பாருங்கள்...
எல்லோரையும் நம்மைப்போலவே வசதியானவர்கள் இல்லை என்பதை உணர்ந்து பதிவிடுங்கள்...!

உடன்பிறப்பு said...

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு..இக்கட்டண உயர்வு வருகிறது
/\*/\

ஐந்தாண்டுகளுக்கு பின் தான் ஏற்றுகிறோம் என்று தி.மு.க. அரசு சொல்லி இருந்தால் இதே மாதிரி ஏற்றுக் கொண்டு இருப்பீர்களா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

உடன்பிறப்பு..என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா?
கண்டிப்பாக ஏற்றுக் கொண்டிருப்பேன்

ennamoetho said...

தனியார் பஸ் முதலாளிகள் பழைய கட்டணத்திலேயே லாபம் சம்பாதிக்கும்போது ஏன் அரசால் முடியவில்லை. ஏற்கனவே ஆறு மாதத்திற்க்கு ஒரு பஸ் வாங்குவார்கள்.இப்போது நிச்சயம் இரண்டு பஸ் வாங்குவார்கள். நிர்வாக சீர்கேட்டினை களையாமல் விலை ஏற்றுவது மிக மிக தவறு

Saha, Chennai said...

//நியாயம் என்றே தோன்றுகிறது.//
ஆமா, சும்மாவா ஒசத்தி இருக்கார், எம்புட்டு படிப்பு, நிருவாக தெறம அவருக்கு இருக்குனு தெரியுமா? இந்தியாவின் இரும்பு பெண்மணி அவுங்கோ. நல்லா அலசி ஆராஞ்சு சசிகலாக்கா போன்ற அறிஞ்சர்களின் கருத்தையும் கேட்டு, மக்கள்ட வாங்குரசக்தி இருக்கான்னு பாத்து (ங்கொய்யால, 21000 ரூவா குடுத்து நகை வாங்க முடியுது, 50 ரூவா கூட குடுத்து பஸ் டிக்கெட்டு எடுக்க முடியாதோ?), எவ்வளவு கொறைவா வெல ஏத்த முடியுமோ அவ்வளவு கொறச்சலா தான் ஏத்தி இருக்காங்கோ. உதாரணமா, சென்னைல இருந்து திருச்சிக்கு பஸ்ல போக 300 ரூவா வாங்குரமா, ஆனா, பிளைட்டுல போயி கேட்டு பாருங்க, ஒங்களுக்கு மயக்கமே வந்துரும். நாங்களும் திருச்சிக்கிதான கூட்டிகிட்டு போறோம், நாங்க என்ன அவ்வளவா கேக்குறோம்?

எம்சியாரு என்ன சொல்லிருக்காரு? இருக்குரவன்ட்ட இருந்து புடிங்கி புடிங்கி புடிங்கி இல்லாதவண்ட குடுன்னார்ல்ல? கவர்மெண்ட்டுல பணம் இல்ல, மாக்கள் வச்சுருக்காங்க, புடுங்குரதுல என்ன தப்பு? இன்னக்கி வேலக்கி போயி, இன்னைக்கி ஒழச்சு, இன்னக்கி 150 ரூவா சம்பளம் வாங்கி, அதுல 10 ரூவாய எடுத்து நாளக்கி மிச்சம்புடிச்சு வக்கிறது என்ன நாயம்? கவெர்மெண்டே பத்தாக்கொற பட்ஜெட் போடுது, நீ மட்டும் 10 சேத்து வக்கிறியோ? அதயும் இன்னக்கே செலவு பண்ணு, பத்தலையா, கடன் வாங்கு, முடியலையா நாண்டுகிட்டு சாவு.