1.மனிதனுக்குத் தேவை மாற்றமில்லை.விழிப்புணர்வு.செடியின் கிளைகளிலோ..இலைகளிலோ..தண்ணீர் ஊற்றினால் அது வீணாகிவிடும்.ஆனால்..அதே தண்ணீரை வேருக்கு ஊற்றினால்தான்..அதன் பலன் இலைகளுக்கும்..கிளைகளுக்கும் கிடைக்கும்.
2.நம்ம குழந்தைகள் பொறியாளர்கள் ஆக வேண்டும்..மருத்துவர்கள் ஆக வேண்டும்..என்று ஆசைப்படும் பெற்றோர்கள்..அவர்கள் நல்ல மனிதர்களாக வேண்டும்..என்ற நினைப்பை குறைத்துக் கொண்டு வருகிறார்களே ஏன்?
3.பகலில் ஒரு அறைக்குள் கதவை நன்றாக மூடிக்கொண்டு..உட்கார்ந்துக் கொண்டிருப்பவர்..'எனக்கு மட்டும் சூரியன் ஒளி தருவதில்லை" என புலம்புவதில் பலன் இல்லை.சூரிய ஒளி எங்கும் நிறைந்திருக்கிறது.அது கிடைக்க வேண்டுமானால்..அறையின் கதவுகளை நன்றாகத் திறந்து வைத்திருந்தால் போதும்.
4.அடக்கம் இல்லையெனில்..அகங்காரம் என்னும் பாம்பு நம்மிடம் படம் எடுத்து ஆட ஆரம்பிக்கும்.
5.நமக்கு வெற்றி கிடைக்க வேண்டுமா...பிரம்மாண்டமாய் சிந்திப்போம்..வித்தியாசமாக சிந்திப்போம்..வேகமாக சிந்திப்போம்..சிந்தனையின் உறுதியை செயலிலும் காட்டுவோம்..வெற்றி நமதே..
6.ஒரு ஜோக்
கதாநாயகன்- உங்க அடுத்த படத்தில எனக்கு மூன்று வேஷங்களா?
தயாரிப்பாளர்-இல்லை..முதல்ல ரௌடியா வர்றீங்க..அப்புறம் அரசியல்வாதி ஆகறீங்க..பிறகு ஒரு கோடீஸ்வனா ஆகி விடறீங்க..
4 comments:
எனக்கு தத்துவம் கேக்குற வயசு
/
அடக்கம் இல்லையெனில்..அகங்காரம் என்னும் பாம்பு நம்மிடம் படம் எடுத்து ஆட ஆரம்பிக்கும்.
/
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும்.
சூப்பர்!
வருகைக்கு நன்றி குடுகுடுப்பை
வருகைக்கும்...கருத்துக்கும் நன்றி
சிவா
Post a Comment