Friday, June 19, 2009

அப்பா........(சிறுகதை)

'செல்வம்...நீ அலுவலகத்திற்கு கிளம்பறதுக்கு முன்னால ஐநூறு ரூபாய் கொடுத்துட்டுப்போ...மருத்துவர் கிட்டே போகணும்..இராத்திரி ஆரம்பித்த நெஞ்சுவலி இன்னமும் இருக்கு' என்றார் சுந்தரேசன் மகனிடம்.
அப்பா....
'மாதக்கடைசி..பணத்துக்கு நான் எங்கப்பா போவேன்?'சட்டைபையைத் தடவிப்பார்த்துக் கொண்டே சொன்னான் செல்வம்.

நாளைக்கு அவனது திருமணநாள்..திருமணமாகி பத்து ஆண்டுகள் முடிந்திருந்தன.

'புடவை ஒன்று வாங்கிக்கொடுத்து மனைவியை நாளைக்கு இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கவேண்டும்'என்று எண்ணி ஆயிரம் ரூபாயை சட்டைப்பையில் பத்திரமாய் வைத்திருந்தான்.

'என்னடா..செல்வம் இப்படிச்சொல்றே..இனிமே நெஞ்சுவலின்னா..தாமதிக்காம உடனே எங்கிட்டே வரணும்னு..மருத்துவர் போன முறையே சொல்லியிருக்காரே..மறந்துட்டியா?'

'மருத்துவருக்கு என்னப்பா..அப்படித்தான் சொல்வார்.இப்ப எல்லாம் தலைவலின்னு போனால் கூட ..எக்ஸ்ரே எடுன்னு நம்பகிட்டே இருக்கிற பணத்தையெல்லாம் கறந்துடுவார்..கொஞ்சம்
பெருங்காயத்தூளை வாயில் போட்டு..கொஞ்சம் மோர் குடிங்க சரியாகிவிடும்...'என்று கூறியபடியே அலுவலகம் கிளம்பினான் செல்வம்.

மாலை மணி மூணு இருக்கும்.

அலுவலகத்திற்கு செல்வத்தின் மனைவி தொலைபேசினாள்'அப்பா..மூச்சு பேச்சு இல்லாம கிடக்கிறார்..உடனே வாங்க..'

அவன் வீடு போய் சேர்வதற்குள்..சுந்தரேசன் கதை முடிந்து விட்டது.

இறுதிக் காரியங்கள் எல்லாம் முடிந்ததும்..அப்பாவுடையது என்று சொல்லிக்கொள்ள இருந்த மரப்பெட்டி ஒன்றைத்திறந்தான்.

அதில் சில தேவையில்லாத பழுப்பேறிய காகிதங்கள்..அம்மா போட்டிருந்த சில கண்ணாடி வளையல்கள்..அப்புறம்..அவன் குழந்தையாய் இருந்தபோது போட்டிருந்த சில சட்டைகள்..பிறகு..அது என்ன நீல நிறத்தில் .. சிறு புத்தகம் போல்...

எடுத்தவன் அதிர்ந்தான் ...வீட்டின் அருகாமையில் இருந்த ஒரு வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தகம்.

சுந்தரேசன்..சிறிது சிறிதாக நாற்பதாயிரம் ரூபாய் வரை..தன் மகனை வாரிசுதாரராகப் போட்டு பணம் சேர்த்திருந்ததை அது காட்டியது.

13 comments:

goma said...

செல்வத்துக்கு அந்த 40,000 ரூபாயைத் தொட அருகதை இருக்குமா?
வாழ்நாள் முழுவதும் இந்த குற்ற உணர்ச்சி நெஞ்சுவலியைத் தந்தவண்ணம்தான் இருக்கும்

இய‌ற்கை said...

:-((

நர்சிம் said...

தந்தையர் தின சிறப்புக் கதை ஸார்..

முரளிகண்ணன் said...

துக்கப்பட வைக்கிறீங்க சார்

T.V.Radhakrishnan said...

//goma said...
செல்வத்துக்கு அந்த 40,000 ரூபாயைத் தொட அருகதை இருக்குமா?
வாழ்நாள் முழுவதும் இந்த குற்ற உணர்ச்சி நெஞ்சுவலியைத் தந்தவண்ணம்தான் இருக்கும்//
வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி கோமா

T.V.Radhakrishnan said...

// இய‌ற்கை said...
:-((//

இயற்கை..பார்த்தீர்களா..எப்பவும் ஒரே மாதிரி போடும் உங்கள் பின்னூட்டத்தை எதிர்மாதிரியாக போட வைத்துவிட்டேன்

T.V.Radhakrishnan said...

//நர்சிம் said...
தந்தையர் தின சிறப்புக் கதை ஸார்..//

செல்வம் போன்றோர் தந்தையர்தினம் கொண்டாடி என்ன பயன்? நர்சிம்

T.V.Radhakrishnan said...

//முரளிகண்ணன் said...
துக்கப்பட வைக்கிறீங்க சார்//

:-(((

மங்களூர் சிவா said...

அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்.

கதை நல்லா இல்லை அதாவது எனக்கு பிடிக்கலை
:(((

T.V.Radhakrishnan said...

எனக்கும் பிடிக்கவில்லை சிவா..ஆனால்..இப்படியும் நடக்கிறதே

T.V.Radhakrishnan said...

எனக்கும் பிடிக்கவில்லை சிவா..ஆனால்..இப்படியும் நடக்கிறதே

மங்களூர் சிவா said...

இல்லை இந்த கதையை இன்னொரு நாள் போட்டிருந்திருக்கலாம். சந்தோஷமா தந்தையர் தினம் கொண்டாடுமாறு ஒரு கதை இன்னைக்கு போட்டிருந்திருக்கலாம்.

:)))

T.V.Radhakrishnan said...

சிவா..உங்கள் கூற்று சரியெனப்படுகிறது.ஆகவே தற்காலிகமாக இப்பதிவை நீக்கிவிட்டேன். நன்றி