1970ல் சிவாஜி நடித்து வெளிவந்த படங்கள்
எங்க மாமா
தர்த்தி (சிவந்தமண்-ஹிந்தி பதிப்பு)
விளையாட்டுப் பிள்ளை
வியட்நாம் வீடு
எதிரொலி
ராமன் எத்தனை ராமனடி
எங்கிருந்தோ வந்தாள்
சொர்க்கம்
பாதுகாப்பு
இவற்றுள் வியட்நாம் வீடு,ராமன் எத்தனை ராமனடி,எங்கிருந்தோ வந்தாள்,சொர்க்கம் ஆகிய படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஒடியவை.
கருப்பு..வெள்ளை படம் ஒன்று 107 அரங்கு நிறைந்த காட்சிகளாக தொடர்ந்து நடைபெற்றது வியட்நாம் வீடு படத்திற்குத் தான்.இதுவும் ஒரு சாதனை ஆகும்.மலேஷியாவில் முதன் முதலாக 100 நாட்கள் ஓடிய படம் இது.சிவாஜி நாடக மன்றத்தினரால்..சிவாஜி,ஜி.சகுந்தலா நடிக்க நாடகமாக நடிக்கப் பெற்றது இது.சாதாரண சுந்தரம்..இப்படத்திற்கு கதை, வசனம் எழுத..வியட்நாம் வீடு சுந்தரமானார்.படத்தில்..ஜி.சகுந்தலா ஏற்ற வேடத்தை பத்மினி ஏற்றார்.
இவ்வருட தீபாவளீக்கு வந்தவை..எங்கிருந்தோ வந்தாள் (பாலாஜி..தயாரிப்பாளர்) மற்றும் சொர்க்கம் (டி.ஆர்.ராமண்ணா).இரண்டு படங்களும் வெற்றி.அத்துடன் இல்லாது..வெற்றி விழாவை..இரு தயாரிப்பாளர்களும் சேர்ந்து ஒரே மேடையில் நடத்தினர்.இதுவும் சாதனை.
ராமன் எத்தனை ராமன்..பி.மாதவன் இயக்கத்தில் வந்த படம்..சிவாஜி இதில் ஒரு நடிகனாக வருவார்.
தர்த்தி..சிவந்தமண் ஹிந்தி பதிப்பு.தமிழில் முத்துராமன் ஏற்ற வேடத்தை ஹிந்தியில் சிவாஜி ஏற்றார்.
கே.பாலசந்தரும் ,சிவாஜியும் முதலும்..கடைசியுமாய் இணைந்த படம் எதிரொலி...படம் எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை.
அடுத்த பதிவில் 1971 படங்களைப் பார்க்கலாம்.
12 comments:
me the firstayyy
appadiye en blog pakkam oru visit adingalen:-)
அந்த காலத்தில் குமுதத்தில் ஒரு அறுவை ஜோக் வந்தது.
பெண்ணின் தந்தை: போயும் போயும் இந்த மாட்டுக்கார வேலனுக்கா என் பெண்ணை கொடுப்பேன்?
அவர் நண்பர்: சரி, அப்போ எங்க மாமாவுக்கு கொடுங்க!
அன்புடன்,
டோண்டு ராகவன்
வருகைக்கு நன்றி
இயற்கை
டோண்டு சார்
சிவாஜியின் படங்கள் அருமையாக இருக்கும்
நல்ல தொகுப்பு
என்னோட பக்கத்துக்கும் வாங்க
க்விஸ்- என் கொஸ்டின் பாங்க்கில் ஒரு கேள்வி.
பாலச்சந்தர் டைரக்ஷனில் சிவாஜி நடித்த இரண்டு படங்கள் எவை?
நீங்கள் சொல்லுங்கள்
சகாதேவன்
வருகைக்கு நன்றி Starjan
// சகாதேவன் said...
க்விஸ்- என் கொஸ்டின் பாங்க்கில் ஒரு கேள்வி.
பாலச்சந்தர் டைரக்ஷனில் சிவாஜி நடித்த இரண்டு படங்கள் எவை?
நீங்கள் சொல்லுங்கள்
சகாதேவன்//
அந்தநாள் (எஸ்.பாலசந்தர்)
எதிரொலி(கே.பாலசந்தர்)
சரியா சகா...
சரியான பதில்.
சகாதேவன்
நன்றி சகா
எங்க மாமாவில் பெருசு -வின் தோற்றம் அட்டகாசமாக இருக்கும் .குறிப்பாக 'எல்லோரும் நலம் வாழ் நான் பாடுவேன் ..நான் வாழ யார் பாடுவார்" என்ற பாடலில்.
வருகைக்கு நன்றி ஜோ
Post a Comment