காதலர்தினம்..மகளிர் தினம்..அன்னையர் தினம்...தந்தையர் தினம்..என ஒவ்வொரு தினத்தை ஒவ்வொருவருக்கு ஒதுக்கி வைத்துள்ள முறை..இன்று நம் நாட்டிலும் பிரபலமாகி விட்டது.
அதன்படி..இம் மாதம் 21ஆம் நாள்..தந்தையர் தினம்.
தாய்க்கும்...தந்தைக்கும்..என ஒவ்வொரு தினத்தை ஒதுக்கி வைப்பதை...எதிர்ப்பவன் நான்.ஒவ்வொரு நாளும்..ஒவ்வொரு மனிதனும்...தன் தாய்-தந்தையை ஒரு முறையேனும் நினைக்காமல் இருக்க முடியாது.பிறகு அவர்களுக்கு என தனி தினம் தேவையில்லை.மேற்கிந்திய கலாசாரத்தில் நாம் மாறிவருவதால்...இப்பழக்கமும் ஏற்பட்டுவிட்டது என எண்ணுகிறேன்.
இப்போது தலைப்புக்கு வருகிறேன்..
கலைஞர் அமைச்சராய் இருப்பதால் தான்..கனிமொழி எம்.பி., ஆக முடிந்தது.,அழகிரி மத்ய அமைச்சர் ஆக முடிந்தது.ஸ்டாலினை இந்த லிஸ்டில் சேர்க்கவில்லை.ஏனென்றால்..அவர் அரசியலில் பல ஆண்டுகாலம்..பல இன்னல்கலை அனுபவித்து விட்ட பின்னரே அமைச்சர் ஆனார்.
ஜி.கே., மூப்பனார்..தான் எந்த பதவியும் வகிக்கவில்லை எனினும்..அவரது மகன் என்பதாலேயே..எந்த முன் அனுபவமும் இன்றி அவரால் மைய அமைச்ச ஆக முடிந்தது.
அன்புமணி..ராமதாஸின் மகனாய் இருந்ததால் தான்...கூட்டணி பேச்சு வார்த்தையின் போது..ராமதாஸால்..ஒரு ராஜ்ய சபா இடம் வேண்டும் என கேட்கப்பட்டு..அவரை மைய அமைச்சராக ஆக்க முடிந்தது.
முரசொலி மாறனின் மகனாய் இருந்ததால் தான்..தயாநிதிக்கு..அரசியல் அனுபவம் இல்லாத போதும் அமைச்சராக முடிந்தது.
இதுபோலவே..மத்தியில்..நேருவின் குடும்பமும்.
நம் அப்பாக்கள்..அரசியலில் இல்லாததால்..அவர்களால் முடிந்த கல்வியை நமக்குக் கொடுத்து நம்மை சமுதாயத்தில்..ஒரு ஒழுக்கமான குடிமகனாக ஆக்க முடிந்தது.
நம் தந்தையை...நினைக்க என்று நமக்கு தனி நாள் தேவையில்லை என மீண்டும் கூறுகிறேன்.
16 comments:
அப்பாக்கள் தினம் தினம்.
ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரி தெரியுதே
வருகைக்கு நன்றி
குடுகுடுப்பை
அக்னி
:)))
சித்தப்பாக்கள் தினம் என்று எதுவும் இல்லையா ?
வாழ்த்துகள் !
present sir
உங்கள் கருத்து மிகவும் சரி, நமது நாட்டில் அன்னையார் தினம், தந்தையர் தினம் தனியாக தேவை இல்லை தான். பெருகிவரும் கலாசார சீரழிவுகளில் இதுவும் ஒன்று. தினம் தினம் ஏதாவது பெயர் வைத்து விழா கொண்டாடும் மன நிலை பெருகி வருகிறது.
நம் உள்ளத்தில் எப்பொழுதும் நிறைந்து இருக்கும் பெற்றோர்களுக்கு தனியாக ஒரு தினம் வைத்து அந்நிய படுத்துவது முற்றிலும் தேவை இல்லை.
அரசியலை தவிர முதலீடு இல்லாமல் கோடிகளில் வருமானம் பார்க்க முடியாது என்பது நாடறிந்த உண்மை. என்ன செய்ய நம் பெற்றோர் அரசியலில் இல்லையே !
//கோவி.கண்ணன் said...
:)))
சித்தப்பாக்கள் தினம் என்று எதுவும் இல்லையா ?
வாழ்த்துகள் //
வருகைக்கும்..வாழ்த்துக்கும் நன்றி கோவி
//நையாண்டி நைனா said...
present sir//
noted
// ஜானி வாக்கர் said//நம் உள்ளத்தில் எப்பொழுதும் நிறைந்து இருக்கும் பெற்றோர்களுக்கு தனியாக ஒரு தினம் வைத்து அந்நிய படுத்துவது முற்றிலும்
தேவை இல்லை.//
தேவை இல்லை
வருகைக்கு நன்றி ஜானி
அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்!
வருகைக்கு நன்றி சிவா
ஐயா உள்குத்து ஏதும் இருக்கா ?
//நசரேயன் said...
ஐயா உள்குத்து ஏதும் இருக்கா ?//
:-)))
அப்படி போடு அரிவாளை.அப்பாக்கள் தயவால் ரெண்டே ரெண்டு விஷயங்கள்தான் மகனுக்கு உரிமை கிடைக்கிறது ஒன்று அரசியலில் மற்றது,பிசினஸில்.[வழக்கம்போல் 10-15 விழுக்காடுகள் சுயமாக வந்திருக்கலாம்]
சினிமாவும் அதில் சேர்த்தி.உள்ளே நுழைந்தபின் திறமையை வளர்த்துக் கொண்ட மகன்களையும் பார்க்கிறோம்.
//goma said...
அப்படி போடு அரிவாளை.அப்பாக்கள் தயவால் ரெண்டே ரெண்டு விஷயங்கள்தான் மகனுக்கு உரிமை கிடைக்கிறது ஒன்று அரசியலில் மற்றது,பிசினஸில்.[வழக்கம்போல் 10-15 விழுக்காடுகள் சுயமாக வந்திருக்கலாம்]/
// goma said...
சினிமாவும் அதில் சேர்த்தி.உள்ளே நுழைந்தபின் திறமையை வளர்த்துக் கொண்ட மகன்களையும் பார்க்கிறோம்.//
உண்மை..கோமா..உழைப்பால் உயர்ந்தாலும்..கோடிஸ்வரனாவது என்பது..சாதாரண குடும்பத்தில் வந்தவனுக்கு...தலைமுறையில் கடினம்.
Post a Comment