ஒரு பரிட்சை நடக்கிறது.அது நடந்து முடிந்ததும்..தேர்வாளரிடம்..திருத்தி..மதிப்பெண் இடப் போகும் விடைத்தாள்கள்.
ஆனால்...அதற்குமுன்னரே..வேறு ஒருவர் அதைப்படித்து..மதிப்பெண்ணும் போட்டுவிடுகிறார்.திருத்தம் செய்யப்போகிறவர்..தன் இஷ்டத்திற்கு..திருத்த முடியுமா? அல்லது..ஏற்கனவே இந்த மாணவனுக்கு..ஒருவர் மதிப்பீடு போட்டுவிட்டாரே..நாம் குறைத்தோ...அதிகரித்தோ போட்டால்..நம்மீது..நம்பிக்கை குறைந்துவிடுமோ? என்ற எண்ணம் வந்து விட்டால்..
என் பதிவு...என் உரிமை என்று நீங்கள் சொல்லலாம்...அப்படியென்றாலும்...இன்னும் தேர்வு முடியவில்லை..நீங்கள் 30ஆம் தேதிக்குப் பிறகு உங்கள் விமரிசனங்களை வைத்துக் கொண்டிருக்கலாம்.உங்கள் விமரிசனங்களைப் பார்த்துவிட்டு...சிலர்..கலந்துக் கொள்ள வேண்டாம்..அப்படியே..கலந்துக் கொண்டாலும்..பரிசு வெல்லுவது சிரமம்..என எண்ணமாட்டார்களா?
ரவி...உங்கள் மீது..எனக்கு மதிப்பு உண்டு..ஆகவே தான் இப்பதிவு.தவறாக எண்ண வேண்டாம்.
57 comments:
கதை எழுதாம இருக்க எனக்கு ஒரு காரணம் கிடைச்சிருச்சு
இதுல ஒன்னும் தப்பு இல்லீங்க. விமர்சனத்துக்கு உட்பட்டதுதான் எல்லாக் கதைகளுமே. அப்படி இல்லாட்டா போட்டிக்கு எதுக்கு?
//ILA said...
இதுல ஒன்னும் தப்பு இல்லீங்க. விமர்சனத்துக்கு உட்பட்டதுதான் எல்லாக் கதைகளுமே. அப்படி இல்லாட்டா போட்டிக்கு எதுக்கு?//
இளா..விமரிசிப்பது தப்பு என்று நான் சொல்லவில்லை.அது அவர் உரிமை.மேலும் பதிவுகளின் பின்னூட்டமே அதன் விமரிசனம் தானே.என் கதையை விமரிசித்த போது நன்றி சொல்லி நானும் பின்னூட்டம் இட்டுள்ளேன்.ரவி..இதை 30ஆம் தேதிக்கு பிறகு வைத்துக்கொண்டிருக்கலாம் என்பதே என் எண்ணம்.
//குடுகுடுப்பை said...
கதை எழுதாம இருக்க எனக்கு ஒரு காரணம் கிடைச்சிருச்சு//
எனக்கு...டிரீட் உண்டா?
நீங்கள் சொல்லும் படி அவரின் விமர்சனம் , தடையாக இருக்கும் என்றால் சந்தோசம் , அந்த தடையை தாண்டி வருபவர்கள் வரட்டும், வீரம் நிறைந்தவர்களே தமிழுக்குத் தேவை...
ஒரு விமர்சனத்துக்கு பயந்து ஓடி ஒளிபவர்களால் தமிழுக்கு எந்த லாபமும் வரப்போவதில்லை...
மன்னிக்கவும் ! நான் ஒரு எதிர் ஓட்டு போட்டு விட்டேன் தோழா.. இது உங்களுக்கு அல்ல இந்த இடுகைக்கு...
நன்றி, மீண்டும் சந்திப்போம்.
நீங்கள் என் பதிவின் நோக்கத்தை புரிந்துக்கொள்ளவில்லை என எண்ணுகிறேன்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி nilavakan
ரவியின் இரண்டாம் பகுதி விமர்சனப் பதிவிற்கு நான் ஒரு பின்னூட்டம் இட்டிருக்கிறேன் ... படித்துப் பார்க்கவும்
ஏன் சார் ? ரவி எப்பவாவது பின்நவீனத்துவ பதிவு இல்லாம எல்லாரும் புரிஞ்சிக்கற மாதிரி ஒரு பதிவு போடறாரு ! அதுக்கும் இப்படி ஒரு விமர்சனம் எழுதினா,அவரு வழக்கம் போல பதிவு போட ஆரம்பிச்சுடுவாரு !
அவரோட பதிவ இந்த போட்டியோட ஜட்ஜ் படிச்சா வேணும்னா influence ஆகுவாரான்னு சொல்லலாம். அத தவிர, அவரோட விமர்சனம் நல்லா தான இருக்கு. ரொம்ப நெகடிவ் விமர்சனம் கூட இல்ல.
என்னைய மாதிரி கதை சகிக்கல, நீங்க எல்லாம் ஏன் எழுத வந்தீங்க அப்படின்னு விமர்சனம் எழுதி இருந்தா நீங்க சொல்ல வரும் காரணம் சரியா இருக்கும்.
//இதுல ஒன்னும் தப்பு இல்லீங்க. விமர்சனத்துக்கு உட்பட்டதுதான் எல்லாக் கதைகளுமே. //
I guess Mr. Radhakrishnan is talking about being sensitive and maintaining decorum. Who knows? Senthazal might inadvertantly influence the selection process.
மார்க் பத்தி எல்லாம் கவலைப்பட வேண்டியது இல்லை பாஸ். இந்த மாதிரி குறைவா மதிப்பெண் வாங்கிய கதைகள் எல்லாம் ரெண்டு மூணு வருஷம் கழித்தும் ஈமெயிலில் சுற்றிக் கொண்டிருக்கின்றன.
இது நடுவர்கள் தீர்ப்பை எதுவும் பாதிக்கவும் செய்யாது. எப்படியும் குறைந்தது மூன்று நடுவர்களாவது இருப்பார்கள் என்பது என் எண்ணம்.
புதிதாக முயற்சி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இதற்கெல்லாம் பயப்பட தேவையில்லை :)
//என்னைய மாதிரி கதை சகிக்கல, நீங்க எல்லாம் ஏன் எழுத வந்தீங்க அப்படின்னு விமர்சனம் எழுதி இருந்தா நீங்க சொல்ல வரும் காரணம் சரியா இருக்கும்.//
:-))
//ஒரு பரிட்சை நடக்கிறது.அது நடந்து முடிந்ததும்..தேர்வாளரிடம்..திருத்தி..மதிப்பெண் இடப் போகும் விடைத்தாள்கள்.//
பரீட்சை எழுதி வெளிவந்தவுடன் சக மாணவர்களிடம் ‘எனக்கு 80 வரும்டா .. நீ அந்தக் கணக்கு தப்பா? அப்ப 5 மார்க் போச்சு” எனப் பேசும் மாணவர்கள் தவறு என்றால்..
மக்களுக்காக தயாரிக்கப்பட்ட படம் - அதற்கு விமர்சனம் என்ற பெயரில் மார்க் போடுவது, மக்களின் evaluation ஐ பாதிக்கும் என்றால்..
வோட்டுச் சாவடியில் போடும் வோட்டு மட்டும்தான் செல்லும், என்றாலும் தெருவோரத்தில் எல்லா மீடியாக்காரர்களும் எண்ட்ரி போல், டிஸ் எண்ட்ரி (ஓ அது எக்ஸிட்டா?) போல் வைப்பதும் தவறு என்றால்......
செந்தழல் ரவி செய்வதும் தவறுதான்.
i think you are right.
என்னுடைய எண்ணம் எல்லாம், நல்ல க்வாலிட்டியான இன்னும் பல கதைகள் வெளிவரவேண்டும் என்பதுதானே தவிர, பதிவர்களை பூச்சாண்டி காட்டி கதை எழுதுவதை தடுக்க அல்ல...
இருபது கதைகளின் விமர்சனத்தை படித்தபின் பதிவர் பைத்தியக்காரன் பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்தியதால் தான் தொடர்ந்து எழுதவேண்டும் என்ற மோட்டிவேஷன் கிடைத்தது...
மேலும் அந்த விமர்சங்களும் கூட அதிகபட்ச பொறுப்புணர்ச்சியோடு, யாரையும் காயப்படுத்திவிடக்கூடாது என்ற நோக்கத்தோடுதான் எழுதினேன்...(கதை நம்பர் 19 ஒரு விதிவிலக்கு).
இதன் மூலமாக இன்னும் ஊக்கமாக கதைகள் போட்டி முடிவதற்குள் வரவேண்டும் என்பது தான் என்னுடைய நோக்கம்..நீங்கள் விரும்பினால் மற்ற விமர்சனங்களை வெளியிடுவதை நிறுத்திவிடுகிறேன்..
எழுத்துப்பிழைகளை தவிர்க்கச்சொல்லி விமர்சங்களில் தொடர்ந்து சொல்வதை பார்த்திருப்பீர்களே ?
//Nundhaa said...
ரவியின் இரண்டாம் பகுதி விமர்சனப் பதிவிற்கு நான் ஒரு பின்னூட்டம் இட்டிருக்கிறேன் ... படித்துப் பார்க்கவும்//
வருகைக்கு நன்றி Nundhaa
//மணிகண்டன் said...
அவரோட பதிவ இந்த போட்டியோட ஜட்ஜ் படிச்சா வேணும்னா influence ஆகுவாரான்னு சொல்லலாம்.//
:-))))
//Indian said...
//இதுல ஒன்னும் தப்பு இல்லீங்க. விமர்சனத்துக்கு உட்பட்டதுதான் எல்லாக் கதைகளுமே. //
I guess Mr. Radhakrishnan is talking about being sensitive and maintaining decorum. Who knows? Senthazal might inadvertantly influence the selection process.//
நன்றி Indian
//வெட்டிப்பயல் said...
மார்க் பத்தி எல்லாம் கவலைப்பட வேண்டியது இல்லை பாஸ். இந்த மாதிரி குறைவா மதிப்பெண் வாங்கிய கதைகள் எல்லாம் ரெண்டு மூணு வருஷம் கழித்தும் ஈமெயிலில் சுற்றிக் கொண்டிருக்கின்றன.
இது நடுவர்கள் தீர்ப்பை எதுவும் பாதிக்கவும் செய்யாது. எப்படியும் குறைந்தது மூன்று நடுவர்களாவது இருப்பார்கள் என்பது என் எண்ணம்.
புதிதாக முயற்சி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இதற்கெல்லாம் பயப்பட தேவையில்லை :)//
வெட்டிப்பயல் said...
//என்னைய மாதிரி கதை சகிக்கல, நீங்க எல்லாம் ஏன் எழுத வந்தீங்க அப்படின்னு விமர்சனம் எழுதி இருந்தா நீங்க சொல்ல வரும் காரணம் சரியா இருக்கும்.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
//பினாத்தல் சுரேஷ் said...
//ஒரு பரிட்சை நடக்கிறது.அது நடந்து முடிந்ததும்..தேர்வாளரிடம்..திருத்தி..மதிப்பெண் இடப் போகும் விடைத்தாள்கள்.//
பரீட்சை எழுதி வெளிவந்தவுடன் சக மாணவர்களிடம் ‘எனக்கு 80 வரும்டா .. நீ அந்தக் கணக்கு தப்பா? அப்ப 5 மார்க் போச்சு” எனப் பேசும் மாணவர்கள் தவறு என்றால்..//
அந்த மாணவன் தான் எழுதியதை தானே மதிப்பிடுகிறான்.
//மக்களுக்காக தயாரிக்கப்பட்ட படம் - அதற்கு விமர்சனம் என்ற பெயரில் மார்க் போடுவது, மக்களின் evaluation ஐ பாதிக்கும் என்றால்..//
படத்தின் தலைவிதியை தீர்மானிக்கப்போவது மக்கள்.ஒன்றிரெண்டு நீதிபதிகள் இல்லை
//வோட்டுச் சாவடியில் போடும் வோட்டு மட்டும்தான் செல்லும், என்றாலும் தெருவோரத்தில் எல்லா மீடியாக்காரர்களும் எண்ட்ரி போல், டிஸ் எண்ட்ரி (ஓ அது எக்ஸிட்டா?) போல் வைப்பதும் தவறு என்றால்......//
பல கோடி மக்கள் தீர்ப்பை..ஒரு சில ஆயிரம் பேர் மூலம் சொல்வதே எக்ஸிட் போல்
//செந்தழல் ரவி செய்வதும் தவறுதான்.//
அவற்றை இவர் பதிவுடன் ஒப்பிடுவது தவறென்று நினைக்கிறேன்.
//Technology said...
i think you are right.//
நன்றி Technology
// செந்தழல் ரவி said...
என்னுடைய எண்ணம் எல்லாம், நல்ல க்வாலிட்டியான இன்னும் பல கதைகள் வெளிவரவேண்டும் என்பதுதானே தவிர, பதிவர்களை பூச்சாண்டி காட்டி கதை எழுதுவதை தடுக்க அல்ல...
இருபது கதைகளின் விமர்சனத்தை படித்தபின் பதிவர் பைத்தியக்காரன் பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்தியதால் தான் தொடர்ந்து எழுதவேண்டும் என்ற மோட்டிவேஷன் கிடைத்தது...
மேலும் அந்த விமர்சங்களும் கூட அதிகபட்ச பொறுப்புணர்ச்சியோடு, யாரையும் காயப்படுத்திவிடக்கூடாது என்ற நோக்கத்தோடுதான் எழுதினேன்...(கதை நம்பர் 19 ஒரு விதிவிலக்கு).
இதன் மூலமாக இன்னும் ஊக்கமாக கதைகள் போட்டி முடிவதற்குள் வரவேண்டும் என்பது தான் என்னுடைய நோக்கம்..நீங்கள் விரும்பினால் மற்ற விமர்சனங்களை வெளியிடுவதை நிறுத்திவிடுகிறேன்..
செந்தழல் ரவி said...
எழுத்துப்பிழைகளை தவிர்க்கச்சொல்லி விமர்சங்களில் தொடர்ந்து சொல்வதை பார்த்திருப்பீர்களே ?//
ரவி...மீண்டும் சொல்கிறேன்...விமரிசிப்பது உங்கள் உரிமை.அதை சம்பந்தப்பட்ட பதிவுகளில் பின்னூட்டமாய் இட்டிருந்தால் நான் கேட்கப்போவதில்லை. 30ம் தேதிக்குப் பின் விமரிசித்திருந்தால்...நன்றாய் இருந்திருக்கும்.நீங்கள் மதிப்பெண் போடுவதால்..அவை ஒரு வேளை சில கதைகளை பாதிக்கலாம்.பரிசை பிடியுங்கள் என சொல்வதால்..நீங்கள் நீதிபதி ஆகிவிடுகிறீர்கள்.
என் பதிவு..உங்களை காயப்படுத்த அல்ல.உண்மையை புரியவைக்கத்தான்.நன்றி.
***
செந்தழல் ரவி said...
எழுத்துப்பிழைகளை தவிர்க்கச்சொல்லி விமர்சங்களில் தொடர்ந்து சொல்வதை பார்த்திருப்பீர்களே
***
விமர்சனங்களில்
அது என்னவோ பிழைச் சுட்டிக்காட்டுபவர்களிடம் தான் பிழை காணக் தோன்றுகிறது. இது ஒரு கேவலமான attitude. இதிலிரிந்து வெளிவருவது எப்படி என்று டாக்டர் ஷாலினி / டாக்டர் ருத்ரன் வாயிலாக கிழக்குப் பதிப்பகத்தில் கூட்டம் நடத்தி ஆடியோ வெளியிட்டால் தன்யன் ஆவேன். (என்னை போன்றவர்களுக்காக எளிதான பிழை ஒன்றையும் சேர்த்துள்ளேன்.)
// மணிகண்டன் said...
***
செந்தழல் ரவி said...
எழுத்துப்பிழைகளை தவிர்க்கச்சொல்லி விமர்சங்களில் தொடர்ந்து சொல்வதை பார்த்திருப்பீர்களே
***
விமர்சனங்களில்
அது என்னவோ பிழைச் சுட்டிக்காட்டுபவர்களிடம் தான் பிழை காணக் தோன்றுகிறது. இது ஒரு கேவலமான attitude. இதிலிரிந்து வெளிவருவது எப்படி என்று டாக்டர் ஷாலினி / டாக்டர் ருத்ரன் வாயிலாக கிழக்குப் பதிப்பகத்தில் கூட்டம் நடத்தி ஆடியோ வெளியிட்டால் தன்யன் ஆவேன். (என்னை போன்றவர்களுக்காக எளிதான பிழை ஒன்றையும் சேர்த்துள்ளேன்.)//
உடனடியாக தேர்ந்தெடுக்கமுடியா சொல்லிற்கு ஆங்கிலத்தில் எழுதுவது உங்கள் தனித்திறமைதான்.
டிவிஆர் சார்,
எனக்கென்னவோ ரவி செய்றது தப்புன்னு தோணலை...கதையை படிச்சிட்டு பின்னூட்டம் போட்றவங்க எப்படியோ அதையே தான ரவியும் செய்றார்?? முயற்சி எடுத்து இத்தனை கதைகளையும் படித்து விமர்சனம் செய்வதற்காகவே செந்தழலை பாராட்டலாம்னு எனக்கு தோணுது...
தவிர அவரோட விமர்சனமும் ரொம்ப ஆக்கபூர்வமா தான் இருக்கு..இதுவரை ஹார்ஷா எதையும் அவர் விமர்சிக்கலை..(ஒண்ணே ஒண்ணு தவிர)..
ஓ! அப்ப இன்னும் கூட கதையெழுதி போட்டிக்கு அனுப்பலாமா? டைம் இருக்கா?
நான் செந்தழல் ரவி விமர்சங்கள் எழுதியதும் எண்ட்ரி முடிஞ்சி போச்சுன்னே நினைச்சேன்!
***
உடனடியாக தேர்ந்தெடுக்கமுடியா சொல்லிற்கு ஆங்கிலத்தில் எழுதுவது உங்கள் தனித்திறமைதான்
***
இது தமிழ் பேசும் நல்லுலகத்தில் இருக்கும் பலரின் திறமை/தலையெழுத்து என்பதால் தனித்திறமை என்று தாங்கள் கூறியதை ஒத்துக்கொள்ள முடியாமல் இருக்கிறேன்.
போட்டிப் படைப்புகள் பற்றி ஒரு தனி நபரின் பார்வைகள், அதிகாரபூர்வ நடுவர்களின் பார்வையை பாதிக்கும் எனில், அவர்கள் நடுவர் பதவிக்கே தகுதியானவர்கள் அல்லர். உரையாடல் போட்டிக்கான நடுவர்கள் அத்தகையராக இருக்க மாட்டார்கள் என்று நம்புவோம்.
ரவி செய்வது தவறல்ல.
நான் என் விமர்சனங்களை ஜூன் 30க்குப் பிறகே பொதுவில் வைக்க நினைத்திருக்கிறேன்.
//இரா. வசந்த குமார். said...

//
Kalakal... Eagerly waiting for it :)
You can do it now also :)
// அது சரி said...
டிவிஆர் சார்,
எனக்கென்னவோ ரவி செய்றது தப்புன்னு தோணலை...கதையை படிச்சிட்டு பின்னூட்டம் போட்றவங்க எப்படியோ அதையே தான ரவியும் செய்றார்?? முயற்சி எடுத்து இத்தனை கதைகளையும் படித்து விமர்சனம் செய்வதற்காகவே செந்தழலை பாராட்டலாம்னு எனக்கு தோணுது...
தவிர அவரோட விமர்சனமும் ரொம்ப ஆக்கபூர்வமா தான் இருக்கு..இதுவரை ஹார்ஷா எதையும் அவர் விமர்சிக்கலை..(ஒண்ணே ஒண்ணு தவிர)..//
அவர் ஹார்ஷா விமரிசிப்பதாய் நானும் சொல்லவில்லை.அவர் 30ஆம் தேதிக்குப் பிறகு இதை வைத்துக் கொண்டிருக்கலாம்.மேலும்...குறைந்தது எந்த அடிப்படையில் மதிப்பெண் போடுகிறார் என்று தெரிவித்திருக்கலாம்.58 மதிப்பெண்ணும்..61 மதிப்பெண்ணும் எப்படி போடுகிறார்?
//நாமக்கல் சிபி said...
ஓ! அப்ப இன்னும் கூட கதையெழுதி போட்டிக்கு அனுப்பலாமா? டைம் இருக்கா?
நான் செந்தழல் ரவி விமர்சங்கள் எழுதியதும் எண்ட்ரி முடிஞ்சி போச்சுன்னே நினைச்சேன்!//
:-)))
//மணிகண்டன் said...
***
உடனடியாக தேர்ந்தெடுக்கமுடியா சொல்லிற்கு ஆங்கிலத்தில் எழுதுவது உங்கள் தனித்திறமைதான்
***
இது தமிழ் பேசும் நல்லுலகத்தில் இருக்கும் பலரின் திறமை/தலையெழுத்து என்பதால் தனித்திறமை என்று தாங்கள் கூறியதை ஒத்துக்கொள்ள முடியாமல் இருக்கிறேன்.//
kudaththilitta vilakku
:-)))
//இரா. வசந்த குமார். said...
போட்டிப் படைப்புகள் பற்றி ஒரு தனி நபரின் பார்வைகள், அதிகாரபூர்வ நடுவர்களின் பார்வையை பாதிக்கும் எனில், அவர்கள் நடுவர் பதவிக்கே தகுதியானவர்கள் அல்லர். உரையாடல் போட்டிக்கான நடுவர்கள் அத்தகையராக இருக்க மாட்டார்கள் என்று நம்புவோம்.//
நம்புவோம்
//ரவி செய்வது தவறல்ல.
நான் என் விமர்சனங்களை ஜூன் 30க்குப் பிறகே பொதுவில் வைக்க நினைத்திருக்கிறேன்.//
அவரும் அதை செய்திருக்கலாம்
//வெட்டிப்பயல் said... You can do it now also :)//
You can do it
//செந்தழல் ரவி said...
நீங்கள் விரும்பினால் மற்ற விமர்சனங்களை வெளியிடுவதை நிறுத்திவிடுகிறேன்//
அது உங்கள் விருப்பம்..அதனால் எனக்கு எந்த இழப்பும்கிடையாது.என் மனதில் நியாயம் என்று நினைத்ததை பதிவிட்டேன்.அவ்வளவுதான்
பொதுவில் எழுதி வெளி இடுவதற்கு பொதுவில் விமர்சனங்கள் வரும், தவறு அல்ல.
திரைப்படம் படம் ரிலிஸ் பண்ணியாச்சுன்னு வைத்துக் கொள்ளுங்கள். படத்துக்கு அவார்டு கிடைக்குதோ இல்லையோ பத்திரிக்கைகளும், பதிவுகளும் விமர்சனம் செய்வது இல்லையா ?
:)
//கோவி.கண்ணன் said...
பொதுவில் எழுதி வெளி இடுவதற்கு பொதுவில் விமர்சனங்கள் வரும், தவறு அல்ல.
திரைப்படம் படம் ரிலிஸ் பண்ணியாச்சுன்னு வைத்துக் கொள்ளுங்கள். படத்துக்கு அவார்டு கிடைக்குதோ இல்லையோ பத்திரிக்கைகளும், பதிவுகளும் விமர்சனம் செய்வது இல்லையா ?//
கோவி முதலில் ஒன்றை புரிந்துக் கொள்ளுங்கள்..திரைப்படம் என்பது வேறு..இது வேறு..திரைப்படம் முடிந்து வெளியிட்டபின்னரே விமரிசிக்கப்படுகிறது.அதுபோல இந்த போட்டி முடிந்ததும் ..அது விமரிசிக்கப்பட்டால் அது தவறில்லை
வருண்..தங்கள் பின்னூட்டத்தை நீக்கியதற்கு மன்னிக்கவும்
அன்பின் டிவிஆர்,
அச்சு ஊடகங்களில் நடத்தப்படும் சிறுகதை போட்டிகளில், தேர்வு பெற்ற, பரிசுக்குரிய சிறுகதைகளை மட்டுமே பிரசுரிப்பார்கள். அதனால் தேர்வு பெற்ற சிறுகதைகள் தொடர்பான பார்வைகளும், விமர்சனங்களும் போட்டி முடிவு அறிவிக்கப்பட்ட பிறகே எழும்.
ஆனால், 'உரையாடல்' அமைப்பு நடத்தும் சிறுகதைப் போட்டி அப்படியல்ல. வலைத்தளத்தில் பிரசுரமான சிறுகதைகளே போட்டியில் கலந்து கொள்கின்றன.
பிரசுரமான அனைத்தையும் குறித்து விமர்சனம் வைக்க அனைவருக்குமே சுதந்திரம் இருக்கிறது. அப்படியான விமர்சனங்கள் தேவையா இல்லையா என்பது அவரவர் தேர்வு.
எழுதப்பட்ட ஒரு பதிவை பகடி செய்து பதிவிடுவதும், எதிர்வினை புரிவதும், ஆதரிப்பதுமான சூழல் இணையத்தில் உண்டு.
ரவியின் விமர்சனம் அதுமாதிரியானதுதான். எப்படி அக்கறையுடன் நீங்கள் இந்தப் பதிவை எழுதினீர்களோ, அப்படியான அக்கறையுடன்தான் ரவியும் சிறுகதைப் போட்டி தொடர்பான விமர்சனப் பதிவுகளை எழுதுகிறார் என்று நினைக்கிறேன்.
இப்படியான விமர்சனப் பதிவும், மதிப்பெண் பட்டியலும் நடுவர் குழுவை பாதிக்கும் என்றால், நடைபெற்ற தேர்தலை முன்னிட்டு எழுதப்பட்ட பதிவுகள் அனைத்துமே தேர்தல் முடிவில் எதிரொலித்திருக்க வேண்டும்.
ஒரு நிகழ்வை முன்வைத்து கட்டற்ற நிலையில் உரையாடல் நடைபெறுவதே சூழலுக்கு தேவையானது என கருதுகிறேன்.
அதனால்தான் சிறுகதை தொடர்பான ரவியின் தனிப்பட்ட விமர்சனப் பதிவை வாழ்த்தி வரவேற்பது போலவே, இந்தப் பதிவையும் ஆதரிக்கிறேன்.
இது தனிப்பட்ட பைத்தியக்காரனின் கருத்து மட்டுமே. சிறுகதைப் போட்டியை நடத்தும் 'உரையாடல்' அமைப்பு சார்பாக எழுதப்பட்ட பின்னூட்டமல்ல.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
பாதகமில்லை டி வி ஆர். இது உங்கள் வலைதளம். உகந்ததல்லாததை எறிய உங்களுக்கு உரிமையுண்டு.
என்னுடைய கருத்தை என் தளத்தில் சொல்லியுள்ளேன் :)
Dont worry I did not get offended. :))
விமர்சிக்க கூடாது என்றால் மற்ற கதைகளை எல்லோரும் படிக்குமாறு விட்டதே தவறு.
விமர்சிப்பது அவர் உரிமை
விமர்சனம் தவறில்லை. மதிப்பெண் கொடுப்பது ஜட்ஜ்மெண்டில் இன்ஃப்ளூயன்ஸ் ஏற்படுத்தும் என்றே நானும் ரவியிடம் சொன்னேன்.
விமர்சனம் தவறில்லை. மதிப்பெண் கொடுப்பது ஜட்ஜ்மெண்டில் இன்ஃப்ளூயன்ஸ் ஏற்படுத்தும் என்றே நானும் ரவியிடம் சொன்னேன்.
டே... டக்கு, வசந்து, இங்கே வாங்கடா... இங்கே காரசாரமா.... நடக்குது....
ஒரு பதிவு போட்டுள்ளேன், பார்க்கவும்...!!!!!!!!!!!!
கோவியார் கருத்து தான் என் கருத்தும். சினிமா எடுத்தாச்சு ரிலீஸ் பண்னியாச்சு. அரசாங்கம் அவார்டு கொடுக்கு வரை ஆனாந்த விகடன் சும்மா இருக்குமா? குமுதம் தான் குப்புற படுத்து தூங்கிகிட்டு இருக்குமா?
அவ்வ்வ்வ்வ்வ்வ் அபி அப்பா. ஆனந்த விகடன் குமுதம் ரேஞ்சுக்கு...அவ்வ்வ்வ்வ்...அம்பது...
//
பைத்தியக்காரன் said...
அன்பின் டிவிஆர்,
அச்சு ஊடகங்களில் நடத்தப்படும் சிறுகதை போட்டிகளில், தேர்வு பெற்ற, பரிசுக்குரிய சிறுகதைகளை மட்டுமே பிரசுரிப்பார்கள். அதனால் தேர்வு பெற்ற சிறுகதைகள் தொடர்பான பார்வைகளும், விமர்சனங்களும் போட்டி முடிவு அறிவிக்கப்பட்ட பிறகே எழும்.
ஆனால், 'உரையாடல்' அமைப்பு நடத்தும் சிறுகதைப் போட்டி அப்படியல்ல. வலைத்தளத்தில் பிரசுரமான சிறுகதைகளே போட்டியில் கலந்து கொள்கின்றன.
பிரசுரமான அனைத்தையும் குறித்து விமர்சனம் வைக்க அனைவருக்குமே சுதந்திரம் இருக்கிறது. அப்படியான விமர்சனங்கள் தேவையா இல்லையா என்பது அவரவர் தேர்வு.
எழுதப்பட்ட ஒரு பதிவை பகடி செய்து பதிவிடுவதும், எதிர்வினை புரிவதும், ஆதரிப்பதுமான சூழல் இணையத்தில் உண்டு.
ரவியின் விமர்சனம் அதுமாதிரியானதுதான். எப்படி அக்கறையுடன் நீங்கள் இந்தப் பதிவை எழுதினீர்களோ, அப்படியான அக்கறையுடன்தான் ரவியும் சிறுகதைப் போட்டி தொடர்பான விமர்சனப் பதிவுகளை எழுதுகிறார் என்று நினைக்கிறேன்.
இப்படியான விமர்சனப் பதிவும், மதிப்பெண் பட்டியலும் நடுவர் குழுவை பாதிக்கும் என்றால், நடைபெற்ற தேர்தலை முன்னிட்டு எழுதப்பட்ட பதிவுகள் அனைத்துமே தேர்தல் முடிவில் எதிரொலித்திருக்க வேண்டும்.
ஒரு நிகழ்வை முன்வைத்து கட்டற்ற நிலையில் உரையாடல் நடைபெறுவதே சூழலுக்கு தேவையானது என கருதுகிறேன்.
அதனால்தான் சிறுகதை தொடர்பான ரவியின் தனிப்பட்ட விமர்சனப் பதிவை வாழ்த்தி வரவேற்பது போலவே, இந்தப் பதிவையும் ஆதரிக்கிறேன்.
இது தனிப்பட்ட பைத்தியக்காரனின் கருத்து மட்டுமே. சிறுகதைப் போட்டியை நடத்தும் 'உரையாடல்' அமைப்பு சார்பாக எழுதப்பட்ட பின்னூட்டமல்ல.
தோழமையுடன்
பைத்தியக்காரன்//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவராமன்
//வருண் said...
பாதகமில்லை டி வி ஆர். இது உங்கள் வலைதளம். உகந்ததல்லாததை எறிய உங்களுக்கு உரிமையுண்டு.
என்னுடைய கருத்தை என் தளத்தில் சொல்லியுள்ளேன் :)
Dont worry I did not get offended. :))//
நன்றி வருண்
//லக்கிலுக் said...
விமர்சனம் தவறில்லை. மதிப்பெண் கொடுப்பது ஜட்ஜ்மெண்டில் இன்ஃப்ளூயன்ஸ் ஏற்படுத்தும் என்றே நானும் ரவியிடம் சொன்னேன்//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி லக்கி
//நான் ஆதவன்☀ said...
விமர்சிப்பது அவர் உரிமை//
நான் மறுக்கவில்லை
சிவராமன் மறுபடி எழுதுங்கறாரு. இந்த கம்பேனி வலைப்பதிவில் சொன்னால் தான் எழுதுவேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//செந்தழல் ரவி said...
ஒரு பதிவு போட்டுள்ளேன், பார்க்கவும்...!!!!!!!!!!!!//
பார்த்தேன் ரவி
வருகைக்கு நன்றி
நையாண்டி (;-)))
அபி அப்பா
//செந்தழல் ரவி said...
சிவராமன் மறுபடி எழுதுங்கறாரு. இந்த கம்பேனி வலைப்பதிவில் சொன்னால் தான் எழுதுவேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
ரவி...என் கருத்தை நான் சொன்னேன்..பிறகு உங்கள் விருப்பம்.இது தனிப்பட்டவர்களீன் விருப்பம்..ஆனால் இதே வேளையில் வேறுசிலரும் இதே கருத்து கொண்டதால்தான்..வாசகர்பரிந்துரையில் உள்ளது
Post a Comment