Friday, June 26, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (26-6-09)

1.பொருளாதார நெருக்கடியில் அமெரிக்கா சிக்கியுள்ள நிலையில்..கடந்த இரண்டு ஆண்டுகளில்..அந்த நாட்டைச் சேர்ந்த 143 நிறுவனங்களை இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் வாங்கிப் போட்டுள்ளனவாம்.இதனால் பல்லாயிரக் கணக்கான அமெரிக்கர்களுக்கு வேலை பறிபோவது தடுக்கப் பட்டுள்ளதாம்.இந்திய தொழில்துறை கூட்டமைப்பு.எப்.ஐ.சி.சி.ஐ.,மற்றும் எர்னஸ் அண்ட் யங்க் ஆகிய அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இத் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

2.விஜய் கட்சி ஆரம்பிப்பது இருக்கட்டும்.அவரது தந்தை இயக்கும் ஒரு படத்துக்கு புது முகங்கள் தேவை என விளம்பரம் கொடுத்து..நேர்முகத் தேர்வு திண்டுக்கல் ஸ்டார் ஓட்டல் ஒன்றில் நடந்ததாம்.அதில் கலந்துக் கொண்டோர்...இஞ்சினீயர்கள்,கம்ப்யூட்டர் பர்சனல்ஸ்,எம்.பில்.படித்தவர்கள் ஆகியோர்.

3.போகிறப் போக்கில் சுப்ரமணிய சாமியை தோற்கடித்து விடுவார் போலிருக்கிறது..காமெடி வேலைகளில் தங்கபாலு. ஏற்கனவே தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்திருக்கிறது..இனியும் தனித்து ஆட்சி செய்யும் தகுதியும் அதற்கு உண்டு..என்று பேச ஆரம்பித்துள்ளார்.

4.இரண்டு கோடி ரூபாய் வரதட்சணை பணம் தந்தும் போதாமல் வரதட்சணையாக பல கோடி ரூபாய் பங்களாவை எழுதித் தரும்படி கேட்ட கோடீஸ்வர தந்தை,மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவரும் மாவட்ட நீதிபதிகள்.ஹைதராபாத்தைச் சார்ந்த நரசிம்ம ராவ்..மெஹபூப் நகரில் மாவட்ட கூடுதல் நீதிபதி.இவர் மகன் கிரண்குமார் அனந்தப்பூர் மாவட்ட சிவில் நீதிபதி.இவருக்கு 2005ல் திருமணம்னடந்தது.இரண்டு கோடி வரதட்சணை வாங்கியும்...மேலும் கேட்டு மகன்..தந்தை..தாய் ஆகியோர் மருமகள் சசிகலாவைக் கொடுமைப்படுத்தியுள்ளனர்.பின் போலீஸில் சசிகலா புகார்தர..அவர்கள் நீதிபதிகள் என்பதால்..புகாரை வாங்க மறுத்துள்ளனர்.பின்னர் ஹைகோர்ட் பதிவாளர் அனுமதி பெற்று..புகாரை எடுத்தனர்.தந்தை,தாய்,மகன் மூவரும் கைது செய்யப்பட்டனர்.

5. ஒரு ஜோக்
அவன் பகுத்தறிவாதின்னு எப்படி சொல்ற
பிரமோஷன் கிடைச்ச உடன் குலதெய்வ கோவிலுக்கு ரகசியமா போயிட்டு வந்தானே

13 comments:

அக்னி பார்வை said...

அமெரிக்காவை இந்தியா காப்பாத்துதா?

ஜானி வாக்கர் said...

//இரண்டு கோடி வரதட்சணை வாங்கியும்...மேலும் கேட்டு மகன்..தந்தை..தாய் ஆகியோர் மருமகள் சசிகலாவைக் கொடுமைப்படுத்தியுள்ளனர்.//

என்னதா பதவி இருந்தாலும் அனைவரும் சராசரினு சொல்லுறங்க போல இந்த மாதிரி கேடு கேட்ட நீதிபதிகள். இவனுங்கள எல்லாம் குற்றம் நிரூபிக்கப்ட்டவுடன் காலம் தாழ்தாமல் தண்டிக்கணும்.

மின்னுது மின்னல் said...

நச்..!


:)

SUBBU said...

//அதில் கலந்துக் கொண்டோர்...இஞ்சினீயர்கள்,கம்ப்யூட்டர் பர்சனல்ஸ்,எம்.பில்.படித்தவர்கள் ஆகியோர்.//

:(((((((((((
:(((((((((((

//இனியும் தனித்து ஆட்சி செய்யும் தகுதியும் அதற்கு உண்டு..என்று பேச ஆரம்பித்துள்ளார்//

:))))))))))))
:))))))))))))

நையாண்டி நைனா said...

சார்... இதுலே சொல்லி இருக்குற எல்லா மேட்டருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு... அதனாலே ஒரே பின்னூட்டம் தான்.

படிச்சவனும் வெள்ளை தோலும் புத்திசாலி இல்லை... படிக்காதவனும் கருப்பனும் முட்டாளும் இல்லை.

T.V.Radhakrishnan said...

// அக்னி பார்வை said...
அமெரிக்காவை இந்தியா காப்பாத்துதா?//

:-)))

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி
ஜானி வாக்கர்
மின்னுது மின்னல்
SUBBU
நைனா

இய‌ற்கை said...

:-()

மங்களூர் சிவா said...

/
ஜானி வாக்கர் said...

//இரண்டு கோடி வரதட்சணை வாங்கியும்...மேலும் கேட்டு மகன்..தந்தை..தாய் ஆகியோர் மருமகள் சசிகலாவைக் கொடுமைப்படுத்தியுள்ளனர்.//

என்னதா பதவி இருந்தாலும் அனைவரும் சராசரினு சொல்லுறங்க போல இந்த மாதிரி கேடு கேட்ட நீதிபதிகள். இவனுங்கள எல்லாம் குற்றம் நிரூபிக்கப்ட்டவுடன் காலம் தாழ்தாமல் தண்டிக்கணும்.
/
கண்டிப்பாக.

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி
இய‌ற்கை
சிவா

ananth said...

திரு தங்கபாலுவின் தன்னம்பிக்கையோ வேறு எதுவோ அவரை இப்படி சொல்ல வைத்திருக்கிறது. இருப்பினும் பல வருட காலமாக ஏதாவதொரு திராவிட கட்சியின் முதுகில் ஏறி (அரசியல்) பயணம் செய்வதையே அதன் மத்திய தலைமை கொள்கையாக கொண்டிருக்கிறது. நகைச்சுவைதான். இரு கழகங்களும் தனித்தே நிற்போம்/ஆட்சி அமைப்போம் என்றாலும் நகைசுவைதான்.

குடுகுடுப்பை said...

3.போகிறப் போக்கில் சுப்ரமணிய சாமியை தோற்கடித்து விடுவார் போலிருக்கிறது..காமெடி வேலைகளில் தங்கபாலு. ஏற்கனவே தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்திருக்கிறது..இனியும் தனித்து ஆட்சி செய்யும் தகுதியும் அதற்கு உண்டு..என்று பேச ஆரம்பித்துள்ளார்.//

இதையும் ஒரு செய்தியாக போடுவதும் நீங்களும் அதற்கும் கமெண்டு போட நானும் இருக்கிறேன்.

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி
ananth
குடுகுடுப்பை