Tuesday, June 23, 2009

முத்துகுமாரும்...வைகோ வும்

வைகோ சொன்னது ஜெயலலிதாவையா? என்ற என் பதிவுக்கு வந்த சில பின்னூட்டங்களுக்கு சங்கொலி அளித்த பதில் பின்னூட்டம்.பின்னூட்டம் என்பதால் பலர் படிக்க வாய்ப்பில்லை.அதனால் தனி பதிவாக்கியுள்ளேன்.

ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு :

"சேராத இடம் சேர்ந்ததால் "

மதிமுக ஆரம்பித்து முதல் இரண்டு தேர்தல்களை தனித்து சந்தித்துவிட்டோம் . எங்களை விரும்பியவர்கள் மற்றும் நாங்கள் தனியாக இருக்க விரும்பியவர்கள் , எங்களுக்கான அங்கீகாரத்தை வழங்க வில்லையே !

அதே போல் நாங்கள் எந்த கூட்டணியில் இருந்தாலும் எங்களது தமிழ் தமிழர் சார்ந்த கொள்கைகளை விட்டுக்கொடுத்ததில்லை .

சிறுத்தை அவர்களுக்கு :

முத்துக்குமார் விஷயத்தை நான் தெளிவு படுத்தாமல் இருந்தேன் . இப்போது கொஞ்சம் விலாவாரியாக எழுதுகிறேன்.

முத்துக்குமார் இறந்த அன்று :-

சாஸ்திரி பவனில் அவர் தன்னை எரித்துக்கொண்டு கீழ்பாக்கம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.

பத்திரிக்கையாளர் உட்பட எவரையும் ஏன் அவரது உறவினரையும் கூட போலீஸ் முதுகுமரை பார்க்க அனுமதிக்கவில்லை.

தீக்குளித்தார் என்று தெரியும் யார் அவர் என்று தெரியாது .

பத்திரிகையாளர் என்று தெரியும் எந்த பத்திரிக்கை என்ற விவரம் எல்லாம் அப்பொழுது தெரியாது .
போலீஸ் யாரையும் அனுமதிக்கவில்லை .

பத்திரிக்கையாளர்களுக்கு அவர் எரிந்த பொழுது எடுத்த தீ யாய் எரியும் உடலை சக பத்திரிக்கையாளர்கள் சிலர் செல் போனிலிருந்து கொடுத்து கொண்டிருந்தனர்.

பல பேர் பல ஆதங்கத்தில் பெசிகொண்டிருந்தனர் . பெரியார் திக தோழர்கள் இருந்தனர்.

வைகோ முதலில் வந்தாரா அல்லது வெள்ளையன் முதலில் வந்தாரா என்று சரியாக தெரியவில்லை .

ஆனால் வைகோ போலீஸ் இடம் வாதாடினார் .

கட்டாயம் அவரை பார்க்கவேண்டும் என்றார்.

போலீஸ் அனுமதி இல்லை என்றது.

உங்களின் அனுமதியோடு உள்ளே செல்ல விரும்பிகிறேன் .

உங்களின் தடையை மீறி உள்ளே செல்ல வைத்துவிடாதீர்கள் என்றார்.

பின் ஒருவாறு உங்களோடு இரண்டு பேர் மட்டும் உள்ளே செல்லுங்கள் என்று போலீஸ் அனுமதி கொடுத்தது.

வைகோ உடன் இரண்டு பேர் உள்ளே சென்றார்கள் .

வைகோ உள்ளே சென்றிருந்த நேரத்தில் நெடுமாறனும் திருமாவும் வந்துவிட்டார்கள் .

வைகோ வெளியே வந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் . "முத்துக்குமார் " என்று அவரின் பெயரை சொன்னார் சொந்த ஊர் விவரத்தை சொன்னார் . முக்கியமாக முத்துகுமாரின் கடிதத்தை பத்திரிக்கையாளருக்கு கொடுத்தார் . (அப்பொழுது பதினாறு நகல்கள் எடுத்து கொடுக்கப்பட்டது, சாஸ்திரி பவனிலேயே அவர் கடிதங்களை விநியோகிதிருந்தார் அனால் அவை எதுவும் பத்திரிக்கையாளரின் கைகளுக்கு வரவில்லை பெரிது படுத்தப்படவில்லை ).

இப்பொழுது டாக்டர் ராமதாஸ் வந்து விட்டார் . உடன் அவரது புதல்வி யும் வந்தார்கள் .

நெடுமாறன் வைகோ ராமதாஸ் திருமா,காசி அனந்தன் மற்றும் வெள்ளையன் அதன் பின் சேர்ந்து எடுத்த முடிவுகள் தான் , அவரது உடலை பாரவைக்கு வைத்தது பின் நடந்தது எல்லாமும் .
முத்துக்குமார் விடயத்தை பெரிதாக்காமல் அமுக்கிவிட எவ்வளவோ பேர் முயற்சித்தார்கள் . அது மேற்கண்ட அரசியல் நடவடிக்கையினால் தடுத்து நிறுத்தப்பட்டது என்பது உண்மை .
மாணவர்கள் பல பேர் அதீத கோபத்தில் பல வார்த்தைகளை பேசினார்கள் . தலைவர்களை ஏசினார்கள் . ஆனால் மேற்கண்ட வைகோவின் நடவடிக்கை இல்லாமல் போயிருந்தால் முத்துகுமாரின் கதையையே வேறு மாதிரி திரிதிருப்பார்கள் .

அரசியல்வாதிகள் அப்பொழுது இல்லை என்றால் முத்துகுமாரின் கதை வேறு மாதிரி எழுதப்படிருக்கலாம் .

ஏனென்றால் முத்துகுமாரின் உடல் இருக்கும் பக்கம் கூட யாருக்கும் அனுமதி இல்லை அப்பொழுது.

நான் மேற்சொன்ன அதனையும் சத்திய உண்மை . என்னோடு இருந்த ஈழ போராட்ட தோழர்கள் பலருக்கும் இது நன்றாய் தெரியும் .
இப்பொழுது அரசியல் லாபத்திற்காகவும் அல்லது அவர் அவர் மன விருப்பத்தின் படியும் எது வேண்டுமானாலும் பேசலாம் . ஆனால் உண்மை ஒன்றுதான்.

//
தமிழினம் சார்ந்த பிரச்சனைகளை அரசியலாக்கி வாக்கு சேகரிப்பது இந்த அரசியல் கும்பல்களின் குலத்தோழில் !
//
அரசியல் வாதிகள் எடுத்தால்தானே எந்த பிரச்சினையும் வெளியில் தெரிகிறது . அல்லது எந்த போராட்டத்தின் நோக்கமும் அரசாங்க பதவியில் உள்ள ஏதேனும் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்த அரசியல் வாதியை நோக்கித்தானே. பொத்தம் பொதுவாய் அரசியலை அரசியல் வாதிகளை விமர்சனம் செய்வது நல்ல நோக்கு அல்ல. அரசியல் மீதுள்ள நம்பிக்கையை கெடுக்கும் .

விடை இல்லa வழிமுறைகளை சிந்திக்க தோன்றும் .

இந்த பதிவை எழுத இடம் கொடுத்த ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி .
-தோழர்
www.mdmkonline.com

2 comments:

சரவணகுமரன் said...

//அரசியல் வாதிகள் எடுத்தால்தானே எந்த பிரச்சினையும் வெளியில் தெரிகிறது .//

உண்மைதான். இல்லாவிட்டால், அதிகாரத்தின் இரும்பு கோட்டையை தாண்டி யாருக்கு என்ன தெரியும்?

ஆனால், செய்த காரியத்திற்கு அறுவடையை பெரிய விதமாக அவர்களுக்கு செய்து கொள்ளும் போது தான், மக்களுக்கு கோபம் வருகிறது. இதை யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சரவணா