Monday, June 22, 2009

வைகோ சொன்னது ஜெயலலிதாவையா?

சேலத்தில் செயல் வீரர்கள் கூட்டத்தில் வைகோ பேசும்போது..ம.தி.மு.க.வை அழிக்க வேண்டும் என கலைஞர் ஈடுபட்டு வருகிறார் என்றார்.சேலத்திலும் அதற்கான ஒத்திகை பார்க்கப்பட்டது.ஆனால் அது நடக்கவில்லை..என்றார்.

(சேலத்தில் இவர் வேட்பாளர் வெற்றிக்கு காரணம்..எதிர்த்து போட்டியிட்டவரின்..அராஜகப் போக்கும்...கள்ளுக்கடை விவகாரமும்..ஆணவமும் தான் காரணம்.மேலும் தான் தலைவர் என்ற கர்வம் வேறு)

எங்களை அழிக்க நினைத்த கருணாநிதி தோற்றுப்போனார்.ஆனால் அ.தி.மு.க., ஒரு போதும் எங்களை அழிக்க நினைக்கவில்லை.தேர்தலில் என்னை தோற்கடிக்க 50 கோடி தேவைப்பட்டது என்றார்.(ஜெ..இதற்கும் குறைவாகத்தான் கொடுத்திருப்பார் போல இருக்கிறது)

நாங்கள் தோல்வி அடைந்ததற்காக வருந்தவில்லை...ஆனால் புலிகள் தோற்றுவிட்டார்களே என வருந்துகிறோம்.(இங்கு நாங்கள் என யாரைச் சொல்கிறார்..ஜெ உடன் ஆன கூட்டணீ தோற்றதை என்றால்...ஜெ.. தேர்தலில் தோற்றதைவிட..புலிகள் தோற்றதற்கு கவலைப்பட்டாரா?)

12 comments:

இரா. வசந்த குமார். said...

/*(சேலத்தில் இவர் வேட்பாளர் வெற்றிக்கு காரணம்..எதிர்த்து போட்டியிட்ட பேரன் என சொல்லிக் கொள்பவர்..தன் தாத்தாவைப் பற்றி கூறியவையும்..அகங்காரமுமே)*/

நீங்கள் சொல்பவர் ஈரோட்டில் போட்டியிட்டார் என்று நினைக்கிறேன்.

T.V.Radhakrishnan said...

தங்கபாலு பற்றி எழுத நினைத்து...இளங்கோவன் பற்றி எழுதி விட்டேன்.இருவர் மீதும் சம அளவில் கோபம் இருப்பதால்.தவறை சுட்டிக்காட்டியமைக்கும்...வருகைக்கும் நன்றி.பதிவில் திருத்தி விட்டேன்.

அத்திரி said...

//ஜெ.. தேர்தலில் தோற்றதைவிட..புலிகள் தோற்றதற்கு கவலைப்பட்டாரா?//

ஏன் இப்படி??? வைகோ பாவம்ங்க

உடன்பிறப்பு said...

வைகோ மீதும் கோபம் போல் தெரிகிறதே அய்யாவுக்கு

அக்னி பார்வை said...

vazakkmaana vazha vzha kozha kozha..

romba kashttam

T.V.Radhakrishnan said...

//அத்திரி said...
//ஜெ.. தேர்தலில் தோற்றதைவிட..புலிகள் தோற்றதற்கு கவலைப்பட்டாரா?//

ஏன் இப்படி??? வைகோ பாவம்ங்க//

நானும் அதைத்தான் கேட்கிறேன்..ஏன் இப்படி வைகோ?

T.V.Radhakrishnan said...

//உடன்பிறப்பு said...
வைகோ மீதும் கோபம் போல் தெரிகிறதே அய்யாவுக்கு//

சேராத இடம் சேர்ந்ததால்

T.V.Radhakrishnan said...

//அக்னி பார்வை said...
vazakkmaana vazha vzha kozha kozha..

romba kashttam//

:-)))

siruthai said...

அண்ணே! தமிழினம் சார்ந்த பிரச்சனைகளை அரசியலாக்கி வாக்கு சேகரிப்பது இந்த அரசியல் கும்பல்களின் குலத்தோழில் !அதை விடுத்து சுயமாக நாமே போராட கற்று கொள்ளவேண்டும் அதையே தான் மறைந்த மாவீரன் முத்துகுமார் சொன்னது என்னுடைய பிரேதத்தை ஊர் ஊராக எடுத்து சென்று பிரச்சாரம் செய்யுங்கள் ஆனால் அதை யாரும் அரசியலாக்கி அறுவடை செய்யாமல் பார்த்து கொள்ளுங்கள் என்று! அது தொடர்பான பதிவு:http://siruthai.wordpress.com/2009/06/21/இந்திய-அரசியல்-தமிழக-இந்/

T.V.Radhakrishnan said...

//siruthai said...
அண்ணே! தமிழினம் சார்ந்த பிரச்சனைகளை அரசியலாக்கி வாக்கு சேகரிப்பது இந்த அரசியல் கும்பல்களின் குலத்தோழில் !அதை விடுத்து சுயமாக நாமே போராட கற்று கொள்ளவேண்டும் அதையே தான் மறைந்த மாவீரன் முத்துகுமார் சொன்னது என்னுடைய பிரேதத்தை ஊர் ஊராக எடுத்து சென்று பிரச்சாரம் செய்யுங்கள் ஆனால் அதை யாரும் அரசியலாக்கி அறுவடை செய்யாமல் பார்த்து கொள்ளுங்கள் என்று! அது தொடர்பான பதிவு:http://siruthai.wordpress.com/2009/06/21/இந்திய-அரசியல்-தமிழக-இந்///

உங்கள் பதிவை படிக்கிறேன்.வருகைக்கு நன்றி சிறுத்தை

சங்கொலி said...

ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு :

"சேராத இடம் சேர்ந்ததால் "

மதிமுக ஆரம்பித்து முதல் இரண்டு தேர்தல்களை தனித்து சந்தித்துவிட்டோம் . எங்களை விரும்பியவர்கள் மற்றும் நாங்கள் தனியாக இருக்க விரும்பியவர்கள் , எங்களுக்கான அங்கீகாரத்தை வழங்க வில்லையே !

அதே போல் நாங்கள் எந்த கூட்டணியில் இருந்தாலும் எங்களது தமிழ் தமிழர் சார்ந்த கொள்கைகளை விட்டுக்கொடுத்ததில்லை .

சிறுத்தை அவர்களுக்கு :

முத்துக்குமார் விஷயத்தை நான் தெளிவு படுத்தாமல் இருந்தேன் . இப்போது கொஞ்சம் விலாவாரியாக எழுதுகிறேன்.

முத்துக்குமார் இறந்த அன்று :-

சாஸ்திரி பவனில் அவர் தன்னை எரித்துக்கொண்டு கீழ்பாக்கம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.

பத்திரிக்கையாளர் உட்பட எவரையும் ஏன் அவரது உறவினரையும் கூட போலீஸ் முதுகுமரை பார்க்க அனுமதிக்கவில்லை.

தீக்குளித்தார் என்று தெரியும் யார் அவர் என்று தெரியாது .

பத்திரிகையாளர் என்று தெரியும் எந்த பத்திரிக்கை என்ற விவரம் எல்லாம் அப்பொழுது தெரியாது .
போலீஸ் யாரையும் அனுமதிக்கவில்லை .

பத்திரிக்கையாளர்களுக்கு அவர் எரிந்த பொழுது எடுத்த தீ யாய் எரியும் உடலை சக பத்திரிக்கையாளர்கள் சிலர் செல் போனிலிருந்து கொடுத்து கொண்டிருந்தனர்.

பல பேர் பல ஆதங்கத்தில் பெசிகொண்டிருந்தனர் . பெரியார் திக தோழர்கள் இருந்தனர்.

வைகோ முதலில் வந்தாரா அல்லது வெள்ளையன் முதலில் வந்தாரா என்று சரியாக தெரியவில்லை .

ஆனால் வைகோ போலீஸ் இடம் வாதாடினார் .

கட்டாயம் அவரை பார்க்கவேண்டும் என்றார்.

போலீஸ் அனுமதி இல்லை என்றது.

உங்களின் அனுமதியோடு உள்ளே செல்ல விரும்பிகிறேன் .

உங்களின் தடையை மீறி உள்ளே செல்ல வைத்துவிடாதீர்கள் என்றார்.

பின் ஒருவாறு உங்களோடு இரண்டு பேர் மட்டும் உள்ளே செல்லுங்கள் என்று போலீஸ் அனுமதி கொடுத்தது.

வைகோ உடன் இரண்டு பேர் உள்ளே சென்றார்கள் .

வைகோ உள்ளே சென்றிருந்த நேரத்தில் நெடுமாறனும் திருமாவும் வந்துவிட்டார்கள் .

வைகோ வெளியே வந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் . "முத்துக்குமார் " என்று அவரின் பெயரை சொன்னார் சொந்த ஊர் விவரத்தை சொன்னார் . முக்கியமாக முத்துகுமாரின் கடிதத்தை பத்திரிக்கையாளருக்கு கொடுத்தார் . (அப்பொழுது பதினாறு நகல்கள் எடுத்து கொடுக்கப்பட்டது, சாஸ்திரி பவனிலேயே அவர் கடிதங்களை விநியோகிதிருந்தார் அனால் அவை எதுவும் பத்திரிக்கையாளரின் கைகளுக்கு வரவில்லை பெரிது படுத்தப்படவில்லை ).

இப்பொழுது டாக்டர் ராமதாஸ் வந்து விட்டார் . உடன் அவரது புதல்வி யும் வந்தார்கள் .

நெடுமாறன் வைகோ ராமதாஸ் திருமா,காசி அனந்தன் மற்றும் வெள்ளையன் அதன் பின் சேர்ந்து எடுத்த முடிவுகள் தான் , அவரது உடலை பாரவைக்கு வைத்தது பின் நடந்தது எல்லாமும் .
முத்துக்குமார் விடயத்தை பெரிதாக்காமல் அமுக்கிவிட எவ்வளவோ பேர் முயற்சித்தார்கள் . அது மேற்கண்ட அரசியல் நடவடிக்கையினால் தடுத்து நிறுத்தப்பட்டது என்பது உண்மை .
மாணவர்கள் பல பேர் அதீத கோபத்தில் பல வார்த்தைகளை பேசினார்கள் . தலைவர்களை ஏசினார்கள் . ஆனால் மேற்கண்ட வைகோவின் நடவடிக்கை இல்லாமல் போயிருந்தால் முத்துகுமாரின் கதையையே வேறு மாதிரி திரிதிருப்பார்கள் .

அரசியல்வாதிகள் அப்பொழுது இல்லை என்றால் முத்துகுமாரின் கதை வேறு மாதிரி எழுதப்படிருக்கலாம் .

ஏனென்றால் முத்துகுமாரின் உடல் இருக்கும் பக்கம் கூட யாருக்கும் அனுமதி இல்லை அப்பொழுது.

நான் மேற்சொன்ன அதனையும் சத்திய உண்மை . என்னோடு இருந்த ஈழ போராட்ட தோழர்கள் பலருக்கும் இது நன்றாய் தெரியும் .
இப்பொழுது அரசியல் லாபத்திற்காகவும் அல்லது அவர் அவர் மன விருப்பத்தின் படியும் எது வேண்டுமானாலும் பேசலாம் . ஆனால் உண்மை ஒன்றுதான்.

//
தமிழினம் சார்ந்த பிரச்சனைகளை அரசியலாக்கி வாக்கு சேகரிப்பது இந்த அரசியல் கும்பல்களின் குலத்தோழில் !
//
அரசியல் வாதிகள் எடுத்தால்தானே எந்த பிரச்சினையும் வெளியில் தெரிகிறது . அல்லது எந்த போராட்டத்தின் நோக்கமும் அரசாங்க பதவியில் உள்ள ஏதேனும் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்த அரசியல் வாதியை நோக்கித்தானே. பொத்தம் பொதுவாய் அரசியலை அரசியல் வாதிகளை விமர்சனம் செய்வது நல்ல நோக்கு அல்ல. அரசியல் மீதுள்ள நம்பிக்கையை கெடுக்கும் .

விடை இல்லa வழிமுறைகளை சிந்திக்க தோன்றும் .

இந்த பதிவை எழுத இடம் கொடுத்த ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி .
-தோழர்
www.mdmkonline.com

T.V.Radhakrishnan said...

சங்கொலி வருகைக்கு நன்றி.உங்கள் பின்னூட்டத்தை அனைவரும் படிக்க தனி பதிவாக்கியுள்ளேன்.