Monday, June 29, 2009

வேலைக்குப்போன அதிபுத்திசாலி அண்ணாசாமி (நகைச்சுவை)

அதிபுத்திசாலி அண்ணாசாமி நீண்டநாட்கள் வேலைகிடைக்காது இருந்தார்.அவர் அதிர்ஷ்டம்..சென்ஸஸ் எடுக்கும் அலுவலகத்தில் வேலை கிடைத்தது.

அவரிடம் ஒரு கொஸினர் கொடுத்து...அதில் உள்ள கேள்விகளைக் கேட்டு..மக்கள் தொகை கணக்கிடும் வேலை தரப்பட்டது.

முதல் வீட்டிற்கு சென்றார்..முதல் வீட்டில் இருந்த பெண்மணியிடம் முதல் கேள்வியைக் கேட்டார்.

கேள்வி- உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?

பதில்- இல்லை

அடுத்து இருந்த கேள்வியைக் கேட்டார்

கேள்வி-எத்தனை குழந்தைகள்

அந்த பெண்மணி பளார் என கன்னத்தில் அறைய..அடுத்த வீட்டிற்கு வந்தார்..இம்முறை கேள்வியை மாற்றிக் கேட்க முடிவெடுத்தார்..இரண்டாம் கேள்வியை முதல் கேள்வியாகக் கேட்டார்.

உங்களுக்கு குழந்தைகள் இருக்கா

அந்த வீட்டு பெண்மணி சொன்னார்...இருக்கு...இரண்டு குழந்தைகள்.

அண்ணாசாமி அடுத்தக் கேள்வியைக் கேட்டார்..

கல்யாணம் ஆயிடுச்சா?

இங்கேயும் 'பளார்" அடி

சரி..இம்முறை மிகவும் ஜாக்கிரதையாக இருக்க எண்ணி..இரண்டு கேள்வியையும் ஒன்றாக கேட்பதாக எண்ணி..

அடுத்ததாக வந்த வீட்டு பெண்ணிடம் கேட்டார்...உங்களுக்கு கல்யாணம் ஆயிட்டு குழந்தை பிறந்ததா? குழந்தை பிறந்ததும் கல்யாணம் ஆச்சா?

இம்முறை இரண்டு கன்னத்திலும் 'பளார்'

ம்..ஹூம்..இந்த வேலை சரிவராது என..வேலையை ராஜிநாமா செய்தார்.

12 comments:

Nathanjagk said...

அந்த மாதிரி அபத்த ​கேள்விகளாத்தான் இருக்கு சில இணைய ​கேள்விப் பகுப்புகள். ​எப்படி அறையறதுன்னுதான் புரியலே!!

தினேஷ் said...

பளார். ...

மணிகண்டன் said...

அண்ணாசாமி எங்க ஊருல வந்து சென்செக்ஸ் எடுக்க வேண்டியவரு !

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
ஜெகநாதன்
சூரியன்
மணிகண்டன்

அக்னி பார்வை said...

அண்ணாசாமி வாழ்க

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அக்னி பார்வை said...
அண்ணாசாமி வாழ்க//
அக்னி வாழ்க

*இயற்கை ராஜி* said...

ha..ha.ha.a..

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி இய‌ற்கை

நையாண்டி நைனா said...

சார்... கீப் தி கம்பனி சீக்ரத்ஸ்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நையாண்டி நைனா said...
சார்... கீப் தி கம்பனி சீக்ரத்ஸ்...//

நன்றி நைனா

மங்களூர் சிவா said...

:))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

// மங்களூர் சிவா said...
:))))//

நன்றி சிவா