1967ல்வந்த படங்கள்
கந்த கருணை
நெஞ்சிருக்கும்வரை
பேசும் தெய்வம்
தங்கை
பாலாடை
திருவருட்ச்செல்வர்
இரு மலர்கள்
ஊட்டி வரை உறவு
நாலு படங்கள் நூறு நாட்கள் ஓடின.
கந்தன் கருணை..இதில் வீரபாகு என்ற உப பாத்திரம்..ஆனாலும்..சிவாஜியின் நடிப்பே படத்தை ஆக்கிரமித்து இருக்கும்.
இந்த வருடம்...தீபாவளிக்கு வந்த படங்கள்..இரு மலர்கள், ஊட்டி வரை உறவு..இரண்டும் வெற்றி..
இருமலர்கள் படத்தில்...வாலியின்..மாதவிப் பொன் மயிலாள்..பாட்டுக்கு..விஸ்வநாதனின் இசையும்..டி.எம்.எஸ்.குரலும்.,பத்மினியின் நடனமும்..நடிகர் திலகத்தின் நடிப்பும்..மனதை விட்டு நீங்காதவை.
திருவருட்ச்செல்வர்..ஏ.பி.என்.,படம்...அப்பர் நடிப்பு அருமை.
மற்றபடி ஸ்ரீதரின்..நெஞ்சிருக்கும்வரை..வெளியான போது சரியாக ஓடாவிடினும்..பின்னர் செகண்ட் ரன்னில் ஓடிற்று.இதில் சிவாஜி..மற்றும் அனைத்து கலைஞர்களும் ஒப்பனை இன்றி நடித்திருப்பர்.
பாலாஜி..சிவாஜியை வைத்து தயாரித்த முதல் படம் தங்கை..படம் சுமாராக ஓடியது..திருலோகசந்தர் இயக்கம்.பின்னர் இவர்கள் காம்பினேஷன் பின்னர் நல்ல படங்களைக் கொடுத்தன.பாலாஜி சிவாஜியை வைத்து 17 படங்கள் எடுத்தார்..பெரும்பான்மை திருலோகசந்தர் இயக்கமே.
பேசும்தெய்வம்..கே.எஸ்.ஜி., படம்.நல்ல படம்..ஆனால் எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை.
பாலாடை நீண்ட நாட்கள் தயாரிப்பில்..இருந்த் படம்..தோல்வி.
1968 படங்கள் அடுத்த பதிவில்.
5 comments:
நல்ல பதிவு.... இன்னும் கொஞ்சம் விளக்கமா எழுதி இருக்கலாம்..
//
கந்தன் கருணை..இதில் வீரபாகு என்ற உப பாத்திரம்..ஆனாலும்..சிவாஜியின் நடிப்பே படத்தை ஆக்கிரமித்து இருக்கும். //
அவரால் மட்டுமே முடியும்.
இத்த்னைக்கும் அந்த பாத்திரத்தை இரண்டே காட்சிகளில் முடித்திருக்க முடியும்
தமிழ்மணம், தமிழீஷ்களில் ஓட்டுப் போட்டாச்சு
சிவாஜியைப் பற்றியும்...அவர் நடித்த படங்கள் பற்றியும்..சிறு குறிப்புகள் தான் இப்பதிவுகள்.விளக்கமாக கூற வேண்டுமாயின் தனி புத்தகம் போட வேண்டும்.வருகைக்கு நன்றி
கவிதை காதலன்
வருகைக்கும்...ஓட்டளித்தமைக்கும் நன்றி SUREஷ்
Post a Comment