Monday, June 15, 2009

ஐடி நிறுவனங்கள் மீண்டும் எழுச்சி பெறும்..

அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியால்...நம் நாட்டு பல ஐ.டி., நிறுவனங்களுக்கு கிடைத்துக் கொண்டிருந்த அமெரிக்க நிறுவனங்களின் அவுட் சோர்ஸிங்க் வேலைகள்....குறைந்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில்..ஒபாமா வேறு..அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு வேலை குடுக்குமேயாயின்..அவற்றிற்கு வரி உண்டு என்று கூறிவிட்டது..இது எரியும் நெருப்பில் எண்ணெய் விட்டது போல ஆகிவிட்டது.

மைய அமைச்சர் ராசா..சமீபத்தில்..பிரதமரை சந்தித்து..ஐ.டி. நிறுவனஙளுக்கான சலுகைகள் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப் பட வேண்டும்..எனக் கேட்டுள்ளார்.அவர்..நிதி அமைச்சர் பிரணாபையும் சந்தித்து..இது குறித்து..மத்திய பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் எனக் கேட்க உள்ளார்.

நமது ஐ.டி., துறை..இதுவரை..பெரும்பாலும்..அமெரிக்க..ஐரோப்பிய நாடுகளையே சார்ந்து இருந்தது...ஆனால் சமீபகாலமாக..ஜப்பான் பக்கம்...நமது இந்திய கம்பெனிகள் பார்வை விழ ஆரம்பித்துள்ளது.ஏற்கனவே..ஜப்பானில்..விப்ரோ, இன்ஃபோஸிஸ் ஆகியவை கால் ஊன்றிவிட்டன அங்கு.ஏற்கனவே..சீனாவைச் சேர்ந்த நிறுவனங்கள் அங்கு குறைந்த கட்டணத்தில் வேலை செய்கின்றன.நம்மிடமும் குறைவாக..இல்லையாயினும் அந்த அளவாவது எதிர்ப்பார்க்கப்படும்.

அதற்கு நம் நிறுவனங்கள் தயாராய் உள்ள நிலையில்...ஐ.டி., நிறுவனங்களின்..வளர்ச்சியை தடுக்கமுடியாது..அவை மீண்டும் எழுச்சி பெறும்.

இத் துறையில் வேலையில் உள்ளோர்..இத் துறை கல்வி பயிலுவோர்..ஆகியோர் மனத் தளர்ச்சி அடைய வேண்டாம்.

8 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நல்ல செய்தி நண்பரே..,

புரியாமல்தான் கேட்கிறேன். நம்நாட்டு நிறுவனங்களை நம்பி இங்கு வேலை செய்யவே முடியாதா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சுரேஷ்..
நீங்கள் சொல்வது இன்னும் 50 ஆண்டுகளில் நடக்க சாத்தியக் கூறுகள் உள்ளன.
அப்போது இன்று வளர்ந்த நாடுகளுக்கு..நாம் வேலை கொடுப்போம்.

காரணம் ஆயிரம்™ said...

இத்தனை பேர் ஐடி-க்கு வந்தால் என்னங்க செய்வது??

derived படிப்புகளான bioinformatics, genetic engineering முதலானவற்றை தெரிவு செய்தால் ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் கிடைப்பர்கள்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி காரணம் ஆயிரம்

Vishnu - விஷ்ணு said...

//அதற்கு நம் நிறுவனங்கள் தயாராய் உள்ள நிலையில்...ஐ.டி., நிறுவனங்களின்..வளர்ச்சியை தடுக்கமுடியாது..அவை மீண்டும் எழுச்சி பெறும்.//

நல்ல செய்தி தான்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி விஷ்ணு.

மங்களூர் சிவா said...

நல்ல செய்திதான். உண்மையாக வேண்டுவோம்.

ஜப்பான்லயே பொருளாதார நிலமை ரொம்ப மோசமால்ல இருக்கு :((

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சிவா