Thursday, October 14, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (15-10-10)

சூப்பர் பக் நோய் பற்றி நாம் அனைவருமறிவோம்.இது குறித்து பல் வேறு நாடுகள் ஆராய்ச்சி செய்து வருகின்றன.இந்நிலையில் ஐரோப்பிய விஞ்ஞானிகள் டூத் பேஸ்டில் பயன்படுத்தும் ரசாயணத்தில் கூட இந்நோய் பரவலாம் என்கிறார்கள்.மற்ரும் பயன்படுத்தும் சோப், அழகு சாதனப் பொருள்கள் இவற்றாலும் நோய் பெருகலாமாம்.
(அதுக்குத்தான் அந்த நாள்ல பெரியவங்க..ஆலும் வேலும் பல்லுக்குறுத் என்றும்..முகத்திற்கு மஞ்சளும், சிகைக்காய் பொடியும் போதும்னு சொல்றாங்க..என சைடுல சிந்து பாடறார் ஒரு மத்தியத்தர குடும்பத் தலைவர்)

2)ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை வென்றதற்காக அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும்..குறிப்பாக சச்சீனுக்கும் பாராட்டு தெரிவிக்கும் அதே நேரத்தில்..காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்களை வாங்கிக் குவித்து..இந்தியாவை இரண்டாம் இடத்திற்குக் கொண்டு வந்த வீரர்களுக்கும் பாராட்டுதல்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்வோம்.
(இந்தியா இரண்டாம் இடம் என்று கேள்விப்பட்டதால்..ஒரு வேளை நாமும் இரண்டாம் இடத்தில் இருந்தால் போதும் என ஹாக்கி வீரர்கள் எண்ணிவிட்டனர் போலும்)

3)இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி தெற்கு மும்பையில் ஆண்டிலியா என்ற பெயரில் மிகப் பெரிய ஆடம்பர மாளிகைக்குக் குடிபெயருகிறார்.இது 27 அடுக்கு மாளிகையாம்.அந்தப் பகுதியில் எந்தப் பக்கமிருந்து பார்த்தாலும் இந்த மாளிகை தெரியும்படி கட்டப் பட்டுள்ளதாம்.
(ஆமாம்..சுனாமியால் வீடு இழந்தோர்க்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு விட்டனவா)

4)69 நாட்கள் மண்ணுக்குள் புதையுண்ட கனிமச்சுரங்கத்தில் சிக்கிக் கொண்ட 33 தொழிலாளர்களை சிலி நாட்டு அரசு பத்திரமாக மீட்டது..நாட்டு மக்களுக்கு அந்த நாடு அளித்த இந்த சிறப்பு பாராட்டத்தக்கது
(25 ஆண்டுகளுக்கு முன் விஷவாயு கசிவால்..பல்லாயிரம் பேர் மாள..லட்சக்கணக்கானோர் பாதிப்புக்கு உள்ளாக சம்பந்தப்பட்ட நபர் நாட்டைவிட்டுச் செல்லவும்..இழப்பீடு குறித்து கவலையும் படாத அரசு ஞாபகம் வந்துத் தொலைக்கிறதே..ஏன்)

5)இரண்டு வாரங்களில் 'எந்திரன்" படம் இந்தியா முழுதும் 225 கோடி வசூல் செய்து..இந்தியாவின் மிகப் பெரிய வசூல் படம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளதாம்..
(எல்லாம் அந்த ஐங்கரன் அருள்தான் என்கிறார் கலாநிதி மாறன்)
6)மீன்கொத்திப் பறவை போன்று உலகத்தில் வாழ வேண்டும்..அது நீருக்குள் இருக்கும் வரை அதன் சிறகுகளில் நீர் ஒட்டிக் கொண்டிருக்கும்.வெளியில் வந்து சிறகுகளைக் குலுக்கியதும் ஒட்டிக் கொண்டிருந்த நீர் அகன்று போய் விடும்.அது போல உலக ஆசைகளை விட்டுவிட பழகிக் கொள்ள வேண்டும். - ஒரு பொன் மொழி
(நீரிலிருந்து வந்த பின்தான் இப்படி நடக்கிறது..அதுபோல உலகை விட்டுப் போகையில் உலக ஆசையைத் துறக்கலாம்..என்கிறார் ஒரு ஏட்டிக்குப் போட்டி)

7) இந்த வாரம் நான் படித்த இடுகைகளில் எனக்குப் பிடித்த இடுகை இது..http://www.luckylookonline.com/2010/10/blog-post_12.htmlதமிழா தமிழாவின் மகுட இடுகை இதுவே.வாழ்த்துகள் யுவகிருஷ்ணா

8)விவேக சிந்தாமணியில் கண்களைக் கெண்டை மீனுக்கு உதாரணம் காட்டும் இந்த பாடலைப் பாருங்கள்

"தண்டுலாவிய தாமரைப் பொய்கையில்
மொண்டு நீரை முகத்தருகேந்தினாள்
'கெண்டை கெண்டை' என்று அக்கரை யேறினாள்
கெண்டை காண்கிலள் நின்று தயங்கினாள்"


ஒரு அருமையான பாடல்

10 comments:

Vidhya Chandrasekaran said...

பகிர்வுகள் அனைத்துமே நன்று.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி வித்யா

எஸ்.கே said...

தொகுப்பு சூப்பர்!

மாதேவி said...

தகவல்கள் அறிந்து கொண்டோம்.

நவராத்திரி "தேங்காய்..மாங்காய்.. பட்டாணி.. சுண்டல் " அருமை.:)

Unknown said...

இன்றைக்கு சுவாரஸ்யம் அதிகம் ...

Unknown said...

இன்றைக்கு சுவாரஸ்யம் அதிகம் ...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மாதேவி said...
தகவல்கள் அறிந்து கொண்டோம்.

நவராத்திரி "தேங்காய்..மாங்காய்.. பட்டாணி.. சுண்டல் " அருமை.:)//

நன்றி மாதேவி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
இன்றைக்கு சுவாரஸ்யம் அதிகம் ...//


நன்றி செந்தில்

Radhakrishnan said...

அனைத்தும் சிறப்பு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி V.Radhakrishnan