Thursday, October 28, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(29-10-10)

பெரும் கடன் சுமை, படத்தை வாங்க எந்த வினியோகஸ்தர்களும் முன் வராத நிலை..தரமற்ற கதை போன்றவற்றால் ஷூட்டிங், போஸ்ட் புரடக்க்ஷன்ஸ் எல்லாம் முடிந்தும் 70 தமிழ்ப் படங்கள்
வெளிவராமல் பெட்டியில் முடங்கிக் கிடக்கின்றனவாம்

2)காதல் வசப்படுபவர்கள்..இதயத்தைப் பறி கொடுத்தோம் என்கிறார்கள்.ஆனால் அது தவறு..உண்மையில் காதல் என்பது முழுக்க முழுக்க மூளை சம்பந்தப் பட்ட சமாச்சாரம்.காதல் கொள்பவர்கள் மூளையின் 12 பகுதிகள் சுழற்சியாக சுற்றி வந்து கோகைன் போதைப்பொருளினால் கிடைக்கும் கிளர்ச்சியை உண்டாக்கிறதாம்.

3)வேண்டாம் என்றால்..சேமிப்பு கணக்கு துவங்குங்கக் என வங்கிகளின் தொந்தரவு இனி இருக்காதாம்.இனி வங்கிக் கணக்கு ஆரம்பிக்க வேண்டுமாயின் நிறுவனச் சான்றிதழ் மட்டும் போதாது.கூடுதலாக..பாஸ்போர்ட்,தொலை பேசி கட்டண ரசீது,வாக்காளர் அடையாள அட்டை ரசீது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று அவசியம் வேண்டுமாம்

4)உலகில் ஐந்தில் ஒரு பங்கு உயிரினங்கள் பல்வேறு காரணங்களால் அழிந்து வருகின்றனவாம்.அதற்கான காரணங்கள் மேலதிகமான வேட்டை அல்லது அவை வாழ்வதற்கான வாழ்விடங்கள் இல்லாமல் போனதே என இயற்கைப் பராமரிப்பிற்கான சர்வதேச ஒன்றியம் (I.Y.C.N) தெரிவித்துள்ளது.

5)இறந்த பிரபலங்கள் ஈட்டிய வருமானத்தில் உலக அளவில் முதல் இடத்தை மைக்கேல் ஜாக்சன் பிடித்துள்ளார்.அவர் ஈட்டிய வருமானம் 1210 கோடி ரூபாயாம்.

6)இந்த வாரம் நான் படித்த இடுகைகளில் மனத்தை வாட்டிய இடுகை இது,இதை எல்லோரும் படிக்க வெண்டும் என்பதால் இந்த மாத தமிழா தமிழாவின் மகுட இடுகை இதுதான்.வாழ்த்துகள் ஈரோடு கதிர்.

7)கவிஞர் ஜெயபாலனின் கவிதை ஒன்று

யாழ் நகரில் என் பையன்
கொழும்பில் என் பெண்டாட்டி
வன்னியில் என் தந்தை
தள்ளாத வயதினிலே
தமிழ் நாட்டில் என் அம்மா
சுற்றம் ஃப்ராங்க்போர்ட்டில்
ஒரு சகோதரியோ ஃப்ரான்ஸ்
நாட்டில்
நானோ
வழி தவறி அலாஸ்கா
வந்துவிட்ட ஒட்டகம்போல்
ஓஸ்லோவில்!!

6 comments:

suneel krishnan said...

ஈழ துயரத்தின் வரிகள் இன்றைய நிதரிசனம் , சிதறி கிடக்கிறது குடும்பங்கள்:(

Prasanna said...

அருமை :)

vasu balaji said...

கடைசிக் கவிதை சுண்டலில் பச்சைமிளகாய். சுருக்கென உறைக்கிறது.

க ரா said...
This comment has been removed by the author.
மங்குனி அமைச்சர் said...

நல்ல கலவை சார்

Ganesan said...

ஈழ துயர் இது தான்.

சென்னை போரூரில் பல வீடுகள் ஈழ தமிழருக்கு வாடகைக்கு கொடுக்கப்படுகிறது, ஒரு மாதத்திற்கு, இதே மாதிரி பிரிந்து போன குடும்பம், இலங்கையிலிருந்து ஒருவர், மற்ற நாடுகளிலிருந்து ம்ற்ற குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடி, ஒரு மாதம் தங்கியிருந்து, பின்பு பிரிந்து செல்கின்றனர்.

என்ன கொடுமை..