Thursday, October 7, 2010

முறித்துக்கொள்ளவா நட்பு..

நாம் ஒரு பதிவிடும்போதே அதை பலர் படிக்க வேண்டும் என விரும்புகிறோம்.சக பதிவர்கள் நூற்றுக்கணக்கில் வந்து படிக்கையில் மனம் குதூகலிக்கிறது.
அடுத்ததாக மனம் பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறது.
நாம் மற்றவர்கள் வலைப்பூவிற்கும் சென்று..அவர்கள் இடுகையைப் படித்து..பின்னூட்டம் இட்டால்..அந்த பதிவரும் நம் வலைப்பூ பக்கம் வந்து..நம் இடுகையையும் படித்து பின்னூட்டம் இடுவர்.
சுருங்கச் சொன்னால்..ஒத்தையடி பாதை அல்ல இது..நீ என்ன செய்கிறாயோ..அது உனக்குத் திருப்பிக் கிடைக்கிறது.
இந்த கூற்றை யாரும் மறுக்க முடியாது..அப்படி மறுப்பவர்கள் உண்மை பேசுபவர்களாக இருக்க முடியாது.
அடுத்தாக..இடுகையும் படிக்கின்றனர்,பின்னூட்டமும் வருகிறது..இனி வாசகர் பரிந்துரையில் இடுகை வர ஏங்குகிறோம்.யாரேனும் ஏழு பேர் கொண்ட குழுவை அமைத்தால்..தமிழ்மண வாசகர் பரிந்துரை நிச்சயம்.நிலைமை இப்படியிருப்பதால் தான் பிறந்த நாள் வாழ்த்துகள்,கட்சி சம்பந்த பட்ட இடுகைகள்,சினிமா இடுகைகள் (திரைமணத்தில் இப்போது) பரிந்துரையில் பரிந்துரைக்கப் படுகின்றன.
இந்நிலையில்..நமக்கு வரும் பின்னூட்டங்கள் நம் எதிர்பார்ப்புக்கு இருக்க வேண்டும்..நம் எண்ணத்தையே பிரதிபலிக்க வேண்டும் என எண்ணுவது தவறாகிறது.
எந்த ஒரு கருத்துக்கும் மாற்று கருத்துக் கொண்டவர்கள் இருப்பர்.
நம் இடுகையை பாராட்டுவதை மகிழ்ச்சியுடன் ஏற்பது போல மாற்று கருத்துகளையும் மகிழ்வுடன் ஏற்க மனம் மறுக்கிறது.
சமயங்களில் மாற்று கருத்து இடுவோரும்..வரம்பு மீறி தனி மனித தாக்குதலில் ஈடுபட ஆரம்பித்து விடுகின்றனர்.பிரச்னை இங்குதான் ஆரம்பிக்கிறது. இப்போது இடுகைகள் போதாது என buzz,facebookஆகியவற்றி


லும் உடனுக்குடன் சூடாக பின்னூட்டங்கள்,சாட் பண்ணுதல் மூலம் கிடைத்து விடுகிறது.
முகம் அறியாமலேயே..நட்பு வட்டம் பெருகுகிறது.மனித நேயம் வளர்கிறது என்றெல்லாம் இருந்தாலும்..சமீப காலங்களில் சில சமயங்களில் வரம்புகள் மீறப்படுகின்றன.
சமீபத்தில் இப்படி தேவையில்லாமல் ஒரு சர்ச்சை உருவாகி..நான் இப்படித்தான் விமரிசிப்பேன்..வேண்டுமானால் நட்பை முறித்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் பொருள் படும் படி எழுத ஆரம்பித்து விட்டனர்.உங்களுக்கு நட்பு கொள்வதற்கும்,வேண்டாம் எனில் முறித்துக் கொள்ளச் சொல்லவும் சுதந்திரம் இருக்கிறது..அந்த தனி மனித சுதந்திரத்தை..இல்லை என்று சொல்லவில்லை..ஆனால் அதே நேரத்தில் உங்கள் மீது உள்ள தவறையும் உணருங்கள்.
நினைத்தபோது நட்பு கொள்ளுதலும் நினைத்த போது முறித்துக் கொள்வதும் தான் நட்பிற்கு அடையாளமா?
யாருக்காகவோ..அன்புடன்..பிரதிபலன் ஏதும் எதிர்பாராமல் பழகிய நாம் ஏன் நட்பை முறித்துக் கொள்ள வேண்டும்..அந்த சொல்லை நாம் சொல்லலாமா?
மனம் வருந்துகிறது..

32 comments:

உடன்பிறப்பு said...

கூடா நட்பை முறித்துக் கொள்வதில் தவறு ஏதும் இல்லையே

T.V.ராதாகிருஷ்ணன் said...

//உடன்பிறப்பு said...
கூடா நட்பை முறித்துக் கொள்வதில் தவறு ஏதும் இல்லையே//

நட்பை முறித்துக் கொள்ள வேண்டிய காரணம் ஏன் எழுந்தது..வரம்பு மீறிய ஒரு சொல்..
அவர் அதை தவிர்த்திருக்கலாமே..அந்த சொல்...உங்களை கூடா நட்பு என்று சொல்லும் அளவு எடுத்துச் சென்றுவிட்டதே ..
அதைத்தான் வலியுறுத்தியுள்ளேன்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

எல்லோரும் சொல்ல நினைக்கின்ற கருத்துக்கள் அருமையாக பகிர்ந்துள்ளீர்கள் டிவிஆர் சார்.

சில நிகழ்வுகளை காணும்போது வருத்தம்தான் மேலிடுகிறது. எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். நல்ல பகிர்வு..

ILA (a) இளா said...

வார்த்தைகள் தடிக்கும்போது நட்பாவது வெங்காயமாவது.

நாமக்கல் சிபி said...

இப்படி எழுதினீங்கன்னா நம்ம நட்பை முறித்துக் கொள்வது உறுதி!

நாமக்கல் சிபி said...

இப்படி எழுதினீங்கன்னா நம்ம நட்பை முறித்துக் கொள்வது உறுதி!

நசரேயன் said...

ஐயா நீங்க இளாவுக்கு சொன்ன மாதிரி இருக்கு

Avargal Unmaigal said...

நான் வலைத்தளத்துக்கு புதியவன்.நம் தமிழர்கள் குழாயடி சண்டையில்தான் பெயர் பெற்றவர்கள் என் நினைத்திருந்தேன். அதை தகர்த்தெரிந்து உலக அளவில் வலைத்தலத்திலும் எங்களாலும் அதைப் பண்ண முடியும் என்று முதலில் நிருபித்தவர்கள் நம் தமிழர்களே. தமிழர்கள் புத்திசாலிகள் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் புத்தியை எப்படி நல்ல வழியாக பயன் படுத்துவது என்பது மட்டும் தெரியவில்லை. பண்பு & அன்பு முக்கியம் இது இல்லாமல் வேறு ஏதும் இருந்தும் புண்ணியமில்லை, டி.வி ராதா கிருஷ்ணன் உங்கள் நட்பு பற்றிய இந்த பதிவு அருமை....இதை எத்தனை பேர் படித்து புரிந்து நடந்து கொள்வார்கள் என்பது கேள்விக்குறியே? எந்திரனைப் பற்றியும். நயந்தாராவையும் பற்றி பேசிக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் நட்பு பற்றிய எழுதிய உங்களுக்கு என் வாழ்த்துக்கள் என்றென்றும். வாழ்க வளமுடன்

a said...

//
ஐயா நீங்க இளாவுக்கு சொன்ன மாதிரி இருக்கு
//
Thala : yen??? nallathane poyikkittu irukku....

vasu balaji said...

எதுன்னு புரியல. ஆனா நீங்க சொன்னது சரி:)

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம்...
நல்ல பகிர்வு .
வாழ்த்துக்கள் .

சகாதேவன் said...

நாம் கதை,கட்டுரை,அல்லது கவிதை எழுதி பத்திரிகைக்கு அனுப்பினால் அதை பரிசீலித்து, திருத்தி, எடிட் செய்துதான் பிரசுரிக்கிறார்கள். நல்லா இல்லை என்றால் ரிஜெக்ட் பண்ணிவிடுவார்கள்.

சினிமாவுக்கு சென்ஸார் போர்ட் இருக்கிறது. வலையில் நாம் எழுதுவது அப்படியே வந்து விடுகிறதே. அதுதான்.

சகாதேவன்

கோவி.கண்ணன் said...

//அன்புடன்..பிரதிபலன் ஏதும் எதிர்பாராமல் பழகிய நாம் ஏன் நட்பை முறித்துக் கொள்ள வேண்டும்..அந்த சொல்லை நாம் சொல்லலாமா? //

விரும்பி சேருகிறவர்கள் என்றைக்கும் பிரிய மாட்டார்கள். (ரஜினி சொல்வது போல் இது) தன்னால சேர்ந்த கூட்டம் என்பவை எப்போது வேண்டுமானாலும் களையும். அப்போது அதை நட்பு என்று நினைக்கும் மாயை விலகும் அவ்வளவு தான்.

பவள சங்கரி said...

அருமையாக மனிதாபிமானத்துடன் எழுதப்பட்ட அற்புதமான இடுகை அய்யா. நானும் தாங்கள் சொல்வதை வழி மொழிகிறேன்.தவறு செய்வது மனித இயல்புதானுங்களே. அதை நல்ல மனதுடன் சுட்டிக்காட்டும் போது ஏற்றுக் கொள்வதுதானே மனிதம்..... நன்றி அய்யா.

மங்குனி அமைச்சர் said...

good one sir

ஜோதிஜி said...

இதை எத்தனை பேர் படித்து புரிந்து நடந்து கொள்வார்கள் என்பது கேள்விக்குறியே? எந்திரனைப் பற்றியும். நயந்தாராவையும் பற்றி பேசிக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் நட்பு பற்றிய எழுதிய உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

Thamira said...

புரிதலில் உருவாகும் நட்புக்கு பிரச்சினை இருக்காது சார். மற்றவை உடைந்தாலும் வருத்தம் தேவையில்லைதான்.

நர்சிம் said...

//கோவி.கண்ணன் said...

//அன்புடன்..பிரதிபலன் ஏதும் எதிர்பாராமல் பழகிய நாம் ஏன் நட்பை முறித்துக் கொள்ள வேண்டும்..அந்த சொல்லை நாம் சொல்லலாமா? //

விரும்பி சேருகிறவர்கள் என்றைக்கும் பிரிய மாட்டார்கள். (ரஜினி சொல்வது போல் இது) தன்னால சேர்ந்த கூட்டம் என்பவை எப்போது வேண்டுமானாலும் களையும். அப்போது அதை நட்பு என்று நினைக்கும் மாயை விலகும் அவ்வளவு தான்.
/

அஃதே.

மணிகண்டன் said...

:)- நான் இந்த எல்லைக்கோட்டை பின்னூட்டத்துல பலமுறை கடந்திருந்தும் என்னையை யாரும் மதிச்சி நட்பை பிரிச்சிக்க மாட்டேங்கறாங்க. எல்லாரும் ஜோக்கரா எடுத்துக்கிட்டு விட்டுடறாங்க.

பட், உங்க பதிவுல கூட உங்க மனம் புண்படற மாதிரி ஒரு கமெண்ட் போட்டுட்டு, அதுக்கு பிறகு புரிஞ்சிகிட்டு கிறுக்குத்தனமா எழுதறதை அவாய்ட் பண்ணி இருக்கேன் ! சோ மீ த குட் பாய்.

கலகலப்ரியா said...

||கோவி.கண்ணன் said...

//அன்புடன்..பிரதிபலன் ஏதும் எதிர்பாராமல் பழகிய நாம் ஏன் நட்பை முறித்துக் கொள்ள வேண்டும்..அந்த சொல்லை நாம் சொல்லலாமா? //

விரும்பி சேருகிறவர்கள் என்றைக்கும் பிரிய மாட்டார்கள். (ரஜினி சொல்வது போல் இது) தன்னால சேர்ந்த கூட்டம் என்பவை எப்போது வேண்டுமானாலும் களையும். அப்போது அதை நட்பு என்று நினைக்கும் மாயை விலகும் அவ்வளவு தான்.||

well said... :)

Radhakrishnan said...

நல்ல அருமையான பதிவு ஐயா.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//விரும்பி சேருகிறவர்கள் என்றைக்கும் பிரிய மாட்டார்கள். (ரஜினி சொல்வது போல் இது) தன்னால சேர்ந்த கூட்டம் என்பவை எப்போது வேண்டுமானாலும் களையும். அப்போது அதை நட்பு என்று நினைக்கும் மாயை விலகும் அவ்வளவு தான்.//
அப்படிப்பட்ட மாயை விலகுகையில் விலகட்டும்..அப்போது அதை கட்டிப் பிடிக்க நம்மால் முடியாது..தேவையும் இல்லை.. ஆனால் முறித்துக்கொள்கிறேன் என்பதை சொல்லியிருக்க வேண்டாம் என்பதே என் தாழ்மையான கருத்து..

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்தோர், தனது கருத்துகளை தெரிவித்தோர் ஆகிய அனைவருக்கும் நன்றி

ஹேமா said...

எதிர்பார்ப்போடு இருக்கும் நட்பு வேண்டவே வேண்டாம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஹேமா said...
எதிர்பார்ப்போடு இருக்கும் நட்பு வேண்டவே வேண்டாம்//

நன்றி ஹேமா

MANO நாஞ்சில் மனோ said...

உங்க மன பாரத்தை எங்களிடம் இறக்கி வச்சிட்டு, நீங்க தப்பிச்சிட்டீங்களே நண்பா....

செல்வா said...

/வரம்பு மீறி தனி மனித தாக்குதலில் ஈடுபட ஆரம்பித்து விடுகின்றனர்.பிரச்னை இங்குதான் ஆரம்பிக்கிறது. //

இதுதாங்க மனதினை பாதிக்கும் விசயமாக இருக்கிறது .. ஒருவரின் கருத்துக்கு எதிர்மறையான கருத்துக்களை தெரிவிப்பதால் சிலர் தனிமனித தாக்குதல்களில் ஈடுபடுவது வருந்தத்தக்கது .. அருமையான கட்டுரை .!! நட்பு என்பது எப்பொழுது பாராட்ட மட்டுமே என்ற நிலை மாறினால் கூட போதுமானது .. இது போன்ற நட்பு முறிவுகள் நடக்காமல் தடுத்து விடலாம் ..! வலைப்பூ என்பது எண்ணற்ற நண்பர்களை நமக்கு கொடுக்கும் வரம் .. அதனை எனது கருத்துக்களே பெரியது என்ற எண்ணத்தால் சாபமாக்கிகொள்ளக்கூடாது ..

செல்வா said...

கழுகு தளத்துல பார்த்துட்டு வந்தேங்க ..!! www.kazhuhu.blogspot.com

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நாஞ்சில் மனோ said...
உங்க மன பாரத்தை எங்களிடம் இறக்கி வச்சிட்டு, நீங்க தப்பிச்சிட்டீங்களே நண்பா....//

:)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும், தகவலுக்கும் நன்றி செல்வக்குமார்

உண்மைத்தமிழன் said...

இப்ப என்ன நடந்து போச்சுன்னு இந்த அழுவாச்சி காவியம்..? ஒண்ணும் பிரியலே..!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
இப்ப என்ன நடந்து போச்சுன்னு இந்த அழுவாச்சி காவியம்..? ஒண்ணும் பிரியலே..!//

:))