Tuesday, October 12, 2010

நகைச்சுவை தமிழ்த் திரைப்படங்கள் - 3 சபாபதி..

தமிழ்த் திரைப்படங்களில் முதல் முழு நீள நகைச்சுவைப் படம் 'சபாபதி' எனலாம்.

பம்மல் சம்பந்த முதலியார் அவர்களின் புகழ் பெற்ற இந்த நாடகத்தை திரைப்படமாக எடுக்கலாம் என ஏ.டி.கிருஷ்ணசாமி கூற அவருடன் சேர்ந்து ஏ.வி.மெய்யப்பன் அவர்கள் இயக்கி, தயாரித்த படம் இது.

1941ல் வெளிவந்த இப்படத்தில் டி.ஆர்.ராமசந்திரன், காளி என்.ரத்தினம் ஆகியோர் நடித்திருந்தனர்.அந்நாளில் காளி என்.ரத்தினமும், சி.டி.ராஜகாந்தம் இருவரும் இணைந்த காமெடி..என்.எஸ்.கே., மதுரம் ஆகியோர்க்கு இணையாக பேசப் பட்டது.

ஆர்.பத்மா என்னும் 'லக்ஸ்' சோப்பின் அன்றைய பிரபல மாடலாகத் திகழ்ந்தவர் கதாநாயகியாக நடித்தார்.

நாயகன் பெயரும்,வேலைக்காரன் பெயரும் 'சபாபதி' என ஒன்றாய் இருப்பதை வைத்து நல்ல காமெடி செய்திருப்பர்.தமிழ் வாத்தியாராக சாரங்கபாணி நடித்திருப்பார்.இந்தப் படம் இன்றும் தொலைக்காட்சி சேனல்களில் ஒலி/ஒளி பரப்பானால் அதைப் பார்க்கும் மக்கள் அன்று அதிகம் இருப்பர்.இப்படக் காமெடி வசனங்கள் இன்றும் மாறி..மாறி வேறு படங்களில் வந்த வண்ணம் உள்ளன.

இப்படத்திற்குப் பின் படு முட்டாளானவர்களை 'சபாபதி" என்பர்.

இப்படம் மொத்தம் 40000 ரூபாயில் எடுத்து முடிக்கப் பட்ட படமாகும்.கதாநாயகன் சம்பளம் மாதம் 35 ரூபாய் ஆகும்.

21 comments:

Chitra said...

ஆர்.பத்மா என்னும் 'லக்ஸ்' சோப்பின் அன்றைய பிரபல மாடலாகத் திகழ்ந்தவர் கதாநாயகியாக நடித்தார்.


........ சில விஷயங்கள் இன்னும் மாறவே இல்லை, போல. இன்றும் அசின், ஐஸ்வர்யா என்று - சினிமா நட்சத்திரங்களின் அழகு சோப்பு - லக்ஸ்.

Chitra said...

படத்தின் நகைச்சுவை பற்றிய குறிப்புகள், படத்தை பார்க்க தூண்டுகிறது.

R. Gopi said...

இந்தப் படம் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இன்னும் பார்ததில்லை. பார்க்க வேண்டும்.

ராமலக்ஷ்மி said...

பல தடவை பார்த்திருக்கிறேன். எப்போது ஒளிபரப்பானாலும் பார்க்கத் தூண்டும் படமென்பது சரியே:)!

sathishsangkavi.blogspot.com said...

இந்த மாதிரி படங்கள் எல்லாம் நிறைய அறிமுகப்படுத்துங்க... படிக்க படிக்க பார்க்கத் தோன்றுகிறது...

பவள சங்கரி said...

பல அரிய தகவல்கள். பகிர்வுக்கு நன்றிங்க......

vasu balaji said...

சூப்பர் படம் சார்:)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

முன்னாடி ஒருதடவ தூர்தர்சன்ல இந்தப்படம் போட்டாங்க (அப்போ சன்டிவிலாம் இல்ல). அப்போ இந்தப்படத்த ரசித்துப் பார்த்தது நன்றாக நினைவிருக்கிறது! நல்ல அருமையான காமெடிப்படம். நினைவுபடுத்தியதற்கு மிக்க நன்றி சார்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Chitra said...
படத்தின் நகைச்சுவை பற்றிய குறிப்புகள், படத்தை பார்க்க தூண்டுகிறது//
வருகைக்கு நன்றி சித்ரா

T.V.ராதாகிருஷ்ணன் said...

// Chitra said...
சில விஷயங்கள் இன்னும் மாறவே இல்லை, போல. இன்றும் அசின், ஐஸ்வர்யா என்று - சினிமா நட்சத்திரங்களின் அழகு சோப்பு - லக்ஸ்.//

:)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Gopi Ramamoorthy said...
இந்தப் படம் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இன்னும் பார்ததில்லை. பார்க்க வேண்டும்.//

வருகைக்கு நன்றி கோபி..
அவசியம் பாருங்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ராமலக்ஷ்மி said...
பல தடவை பார்த்திருக்கிறேன். எப்போது ஒளிபரப்பானாலும் பார்க்கத் தூண்டும் படமென்பது சரியே:)!//

மிக்க நன்றி ராமலக்ஷ்மி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//சங்கவி said...
இந்த மாதிரி படங்கள் எல்லாம் நிறைய அறிமுகப்படுத்துங்க... படிக்க படிக்க பார்க்கத் தோன்றுகிறது...//

வருகைக்கு நன்றி சங்கவி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நித்திலம்-சிப்பிக்குள் முத்து
பல அரிய தகவல்கள். பகிர்வுக்கு நன்றிங்க......//

வருகைக்கு நன்றி நித்திலம்-சிப்பிக்குள் முத்து

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
சூப்பர் படம் சார்:)//

நன்றி Bala

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
முன்னாடி ஒருதடவ தூர்தர்சன்ல இந்தப்படம் போட்டாங்க (அப்போ சன்டிவிலாம் இல்ல). அப்போ இந்தப்படத்த ரசித்துப் பார்த்தது நன்றாக நினைவிருக்கிறது! நல்ல அருமையான காமெடிப்படம். நினைவுபடுத்தியதற்கு மிக்க நன்றி சார்!//
வருகைக்கு நன்றி ராம்சாமி

"உழவன்" "Uzhavan" said...

//இப்படத்திற்குப் பின் படு முட்டாளானவர்களை 'சபாபதி" என்பர்.//
 
ஒ.. இப்படி ஒரு பேரு இருக்கா.. நல்ல தகவல்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//உழவன்" "Uzhavan" said...
//இப்படத்திற்குப் பின் படு முட்டாளானவர்களை 'சபாபதி" என்பர்.//

ஒ.. இப்படி ஒரு பேரு இருக்கா.. நல்ல தகவல்கள் //

வருகைக்கு நன்றி உழவன்

எஸ்.கே said...

செம படங்க அது ! பழைய படங்களை பார்க்காத என் தம்பிங்க கூட இதை விரும்பி பார்ப்பாங்க!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//எஸ்.கே said...
செம படங்க அது ! பழைய படங்களை பார்க்காத என் தம்பிங்க கூட இதை விரும்பி பார்ப்பாங்க!//

மிக்க நன்றி எஸ்.கே

selva said...

உண்மையிலேயே மிக மிக அருமையான திரைப்படம்,சிலதடவை தொலைக்காட்சிகளில் பார்த்துள்ளேன்,மீண்டும் இந்த திரைப்படத்தை எப்போது காண்பது என்று ஏக்கமாக உள்ளது...