Thursday, October 21, 2010

இந்தியாவில் வசிக்க முடியாத நிலை வருமா?

சமீபத்தில் ஒரு கட்டுரை வாசித்தேன்.. பாதிப்பே இந்த இடுகை
முன்பெல்லாம் குறைவான சம்பளம் வாங்கினாலும்..ஓரளவிற்கு உணவு,உடை,இருப்பிட வசதியுடன் ஒரு குடும்பம் நடத்த முடிந்தது.

அதிலும் குறிப்பாக சென்னை..பெருநகர்களிலேயே விலைவாசிகளில் ஓரளவு கட்டுப்பாடுடன் இருந்தது.ஆனால் இன்றைய நிலை யில் பெரும் மாற்றம்.எவ்வளவு சம்பளம் வாங்கினாலும்..கைக்கும்,வாய்க்குமே சரியாய் உள்ளது.சமீப காலங்களில் சராசரி விலைவாசி சென்னையில் 146 விழுக்காடு உயர்ந்துள்ளது.ஒரு படுக்கை அறை உள்ள 550 சதுர அடி அடுக்குமாடி குடியிருப்பின் வாடகை 5000க்கு குறைவில்லை.வீடு வாங்குவது என்பது..பலருக்கு பகல் கனவாகவே ஆகிவிட்டது.

ஒரு படத்தில் தங்கவேலு பாடுவார்..'கையில வாங்கினேன் பையிலே போடலை காசு போன இடம் தெரியல' என்று..இன்று கிட்டத்தட்ட மாத சம்பளம் வாங்குவோர் அனைவர் நிலையும் அதுதான்.

எல்லாவற்றிற்கும் விலைவாசி உயர்வைக் காரணமாய் சொன்னாலும்..முக்கியமாக மக்களின் லைஃப் ஸ்டைல் மாறிவிட்டதே காரணம்.

காலை டிஃபனாக இட்லி, தோசை சாப்பிட்ட நிலை மாறி, பல வீடுகளில் ஓட்ஸ் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது.விலையும் சற்று அதிகம்..அதே நேரத்தில் வயிறும் நிறையாது.அப்படியே இட்லி, தோசை என்றாலும்..யாருக்கும் அரிசி, பருப்பை நனைத்து மாவாட்டுவதற்கெல்லாம் நேரமில்லை.தயாராக கடைகளில் ஈரமாவே கிடைக்கிறது.

மாலை பள்ளி சென்று திரும்பும் குழந்தைகள்..பேக்கரியில்..சமோசாவோ, பர்கரோ வாங்கி தின்றுவிட்டு டியூஷன் கிளாஸிற்கு விரைகிறார்கள்.வீட்டில் அவர்களுக்கு டிஃபன் செய்து கொடுக்க ஆள் இல்லை.

வாரம் ஒரு முறையேனும்..குடும்பத்துடன் ஓட்டலுக்குச் செல்ல வேண்டியுள்ளது.சினிமா போனால் கேட்கவே வேண்டாம்..நான்கு நபர் கொண்ட குடும்பத்திற்கு அதற்கான செலவு 1000 ரூபாய் ஆகிவிடுகிறது

இதெற்கெல்லாம்..காசு அதிகம் செலவிடுவதைத் தவிர்த்து..பல நேரங்களில் மருத்துவரிடம் செல்ல வேண்டியுள்ளது.

பலருக்கு உடல் எடையை குறைக்க வீட்டு வேலை,உணவுக் கட்டுப்பாடு ஆகியவை இல்லாததால் ஜிம் செல்ல வேண்டியுள்ளது.அதற்கு மாதம் பணச்செலவு.

தேவையோ, தேவை இல்லையோ அனைவரிடமும் செல்ஃபோன்.

என் நண்பர் ஒருவர் மாதம் 40000 சம்பாதிக்கிறார்.அவரும் கஷ்டம் என்கிறார்.கேட்டால்..சம்பளத்தில் பி.எஃப்., வீடு வாங்கிய கடன் (இருபது லட்சத்தில் சிறு ஃப்ளாட் வாங்கிவிட்டு..மாதத் தவணை வங்கிக்கு 15000 கட்டுகிறார்),வருமான வரி எல்லாம் போய் 18000 தான் கையில் கிடைக்கிறது.மளிகை,பால்,பயணச் செலவு,பிள்ளைகள் பள்ளிக்கான செலவு..என கணக்குச் சொல்கிறார்.இந்திய அரசு பட்ஜெட் போல மாதாமாதம் டெஃபிசிட்.அதை சரிக்கட்ட சொசைட்டி லோன் போட்டால்..அந்த பிடித்தம் வெறு..என புலம்புகிறார்.

இன்று பெரும்பாலோர் நிலை இதுதான்..இந்நிலை இப்படியே தொடருமானால்..நம் நாடும்..அமெரிக்க நாட்டைப் போல ஒரு காலத்தில் மிகப் பெரிய பொருளாதாரச் சீர்க்குலைவை சந்திக்க வேண்டியிருக்கும் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

இதையெல்லாம் நாட்டுமக்கள் நினைத்தால் ஓரளவு தடுக்கலாம்..

ஒரு செலவை செய்யும் முன் அது அவசியம் தானா என ஒரு தடவைக்கு மேல் சிந்தியுங்கள்.

பிறருக்காக வாழாதீர்கள்..நமக்காக வாழுங்கள்..

வரக்கூடிய வருவாய் எவ்வளவு என்பதைவிட வரும் வருவாய்க்குள் செலவுகளைக் கட்டுப் படுத்துங்கள்.

'ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகா றகலாக் கடை'

ஒருவனுக்கு வரக்கூடிய வருவாய் குறைவாய் இருந்தாலும் பரவாயில்லை..செலவுகள் எல்லைக்குள் இருக்குமேயாயின்.

இதை அலட்சியம் செய்து வாழ்வானேயாயின்..அவனது வாழ்க்கை நெருப்பின் முன் உள்ள வைக்கோல் போலக் கருகிவிடும்.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்..
 

27 comments:

bandhu said...

நல்ல கருத்துக்கள். நீங்கள் சொன்னது போல, செலவுகளில் பல நாமே ஏற்படுத்திக்கொள்வது தான்.

தமிழ் உதயம் said...

என் நண்பர் ஒருவர் மாதம் 40000 சம்பாதிக்கிறார்.அவரும் கஷ்டம் என்கிறார்.கேட்டால்..///

நம் தலையில் நாமே விரும்பி மண் அள்ளி போட்டு கொள்கிறோம். வேறென்ன சொல்ல முடியும்.

sriram said...

ரா கி ஐயா..
இதெல்லாம் அமெரிக்க வாழ்க்கை முறையை கண்மூடித்தனமா பின்பற்றினதால வருவது. அவங்களோடது Spending Economy நம்மோடது Saving Economy. மேலும் ஒரு அமெரிக்கனுக்கு வேலை போச்சுன்னா Social Security பணம் தரும், 65 வயசாசுன்னா மருத்துவச் செலவ அரசாங்கம் பாத்துக்கும், வீடில்லேன்னா அரசாங்க shelter இருக்கு.. நமக்கு என்ன இருக்கு??

வேலை போச்சுன்னா என்ன ஆகும்னு யாரும் நெனைக்கறதாகவே தெரியல. நான் அடிக்கடி நினைப்பதுண்டு - சென்னையில் 15-20 ஆயிரம் ரூபாய்கள் சம்பாதிப்போர் எப்படி குடும்பம் நடத்தறாங்கன்னு.. இது எங்க போயி முடியுமோ தெரியல..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

vasu balaji said...

வாஸ்தவம் சார். அலைபாயுற மனசு. ஆட்டய போட வியாபாரி. அம்போன்னு நிக்கிற மனுசன்னு ஒரு மார்க்கமாத்தான் போகுது.

அன்பரசன் said...

மிக அருமையான பகிர்வு சார்...

எஸ்.கே said...

உண்மை. சிறப்பான கட்டுரை!

Radhakrishnan said...

மிகவும் அழகிய கட்டுரை. நமக்காக நாம் வாழ வேண்டும். பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னரே என் அண்ணன் சொன்ன பாடம் ஒன்று உண்டு, சென்னையில் இருக்கும் அவர் இனியும் சைக்கிளில்தான் செல்கிறார். அவர்தான் எங்கள் வீட்டிலேயே பெரிய பணக்காரர் என சொல்லிக்கொள்வார்கள். சிக்கனம் வேண்டும் இக்கணம்.

நசரேயன் said...

நல்ல கருத்து

T.V.ராதாகிருஷ்ணன் said...

//bandhu said...
நல்ல கருத்துக்கள். நீங்கள் சொன்னது போல, செலவுகளில் பல நாமே ஏற்படுத்திக்கொள்வது தான்.//

வருகைக்கு நன்றி bandhu

T.V.ராதாகிருஷ்ணன் said...

//தமிழ் உதயம் said...
என் நண்பர் ஒருவர் மாதம் 40000 சம்பாதிக்கிறார்.அவரும் கஷ்டம் என்கிறார்.கேட்டால்..///

நம் தலையில் நாமே விரும்பி மண் அள்ளி போட்டு கொள்கிறோம். வேறென்ன சொல்ல முடியும்.//

:)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஸ்ரீராம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
வாஸ்தவம் சார். அலைபாயுற மனசு. ஆட்டய போட வியாபாரி. அம்போன்னு நிக்கிற மனுசன்னு ஒரு மார்க்கமாத்தான் போகுது.//

நன்றி Bala

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அன்பரசன் said...
மிக அருமையான பகிர்வு சார்...//

நன்றி அன்பரசன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//எஸ்.கே said...
உண்மை. சிறப்பான கட்டுரை!//

நன்றி எஸ்.கே

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Radhakrishnan said...
மிகவும் அழகிய கட்டுரை. நமக்காக நாம் வாழ வேண்டும். பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னரே என் அண்ணன் சொன்ன பாடம் ஒன்று உண்டு, சென்னையில் இருக்கும் அவர் இனியும் சைக்கிளில்தான் செல்கிறார். அவர்தான் எங்கள் வீட்டிலேயே பெரிய பணக்காரர் என சொல்லிக்கொள்வார்கள். சிக்கனம் வேண்டும் இக்கணம்.//

வருகைக்கு நன்றி V Radhakrishnan

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
நல்ல கருத்து//

நன்றி நசரேயன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

அன்னு said...
//வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்..//
100% உண்மையை சொல்லியிருக்கீங்க சார். ஏத்த மாதிரி குறளும். உண்மையிலேயே மக்களின் வாங்கும் திறன் வளர்ந்து விட்டதாலும், செலவு செய்யும் திறன் அதை விட வேகமாக வளர்ந்து விட்டதாலுமே இந்த நிலை. என்ன சொல்ல? நல்லதொரு பதிவு.//

நன்றி annu

பவள சங்கரி said...

நல்ல பயனுள்ள பகிர்வுங்க......நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
நல்ல பயனுள்ள பகிர்வுங்க......நன்றி.//

நன்றி நித்திலம்-சிப்பிக்குள் முத்து

Unknown said...

//இந்நிலை இப்படியே தொடருமானால்..நம் நாடும்..அமெரிக்க நாட்டைப் போல ஒரு காலத்தில் மிகப் பெரிய பொருளாதாரச் சீர்க்குலைவை சந்திக்க வேண்டியிருக்கும் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.//

கட்டாயம் நடக்கும். அமெரிக்க சுகங்களுக்குப் பழகிவிட்ட நாம், அமெரிக்கத் துக்கங்களுக்கும் பழகிக்கொள்ளவேண்டியதுதான்!

உங்கள் கவலையை நானும் பகிர்ந்து கொள்கிறேன் :(

மங்களூர் சிவா said...

வள்ளுவர் என்னமா சொல்லியிருக்கார்

'ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகா றகலாக் கடை'

எவன் கேக்குறான்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//
தஞ்சாவூரான் said...

கட்டாயம் நடக்கும். அமெரிக்க சுகங்களுக்குப் பழகிவிட்ட நாம், அமெரிக்கத் துக்கங்களுக்கும் பழகிக்கொள்ளவேண்டியதுதான்!

உங்கள் கவலையை நானும் பகிர்ந்து கொள்கிறேன் :( //

நன்றி தஞ்சாவூரான்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மங்களூர் சிவா said...
வள்ளுவர் என்னமா சொல்லியிருக்கார்

'ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகா றகலாக் கடை'

எவன் கேக்குறான்.//

எவன் கேக்குறான் :))

மாதேவி said...

விலைவாசி :( இங்கும் :(

முனைவர் இரா.குணசீலன் said...

தேவையான சிந்தனை...
தமிழ்மணம் இறுதித்தேர்வுக்குத் தகுதியான இடுகை!!

வாழ்த்துக்கள்!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
மாதேவி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//முனைவர்.இரா.குணசீலன் said...
தேவையான சிந்தனை...
தமிழ்மணம் இறுதித்தேர்வுக்குத் தகுதியான இடுகை!!

வாழ்த்துக்கள்!!//

நன்றி முனைவர்.இரா.குணசீலன்