Monday, November 1, 2010

இட்லி வடை

உப்பிட்டவனை உள்ளளவும் நினை என்பார்கள்..
ஆனால் இக்காலத்தில் உப்பை அதிகம் சேர்க்கக் கூடாது என மருத்துவர்கள் கூறினாலும்..
நமக்கு ஆதரவாய் இருந்தவர்கள்..பசியாற சோறிட்டவர்களை மறக்கக் கூடாது எனலாம்.இந்த குறும்படம் அதைச் சொல்கிறது.
அதே சமயம் மாணவ சமுதாயம் பொறுப்பற்றவர்கள் என ஆங்காங்கே சில அதி மேதாவிகள் கூறுவதுண்டு.ஆனால் இள ரத்தம் சில சமயங்களில் பயமறிவதில்லை என்பது உண்மை

ஆனால் மாணவர்கள் பொறுப்புள்ளவர்கள் என்பதை எவ்வளவு அழகாக உணர்வுபூர்வமாகக் கூறுகிறார்கள்.
இதைப் பார்த்ததும் உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளத் தூண்டியது மனம்.



என்னைக் கவர்ந்த இந்த குறும்படம்..உங்களையும் கவரலாம்..
இதன் தயாரிப்பில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்

11 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

எங்க யாதவா காலேஜ்
மெஸ் அழகரண்ணனை ஞாபகப்படுத்தியது குறும்படம் .

Unknown said...

நல்ல குறும்படம்..

ஈரோடு கதிர் said...

:)

Anisha Yunus said...

அருமையான படம். அருமையான கதை கரு. காலேஜ் நாட்களில் மெஸ்ஸில் லேட்டாய் வரும் எனக்காக சாப்பாட்டை சேகரித்து வைத்து, அப்படியும் வராமல் தூங்கும் போது ரூமுக்கே கொண்டு வ‌ந்து என்னை கவனித்து கொண்ட தோழி நினைவுக்கு வருகிறாள். இன்று அவளில்லை இந்த உலகில்...ஆனாலும் நீங்காமல் என் நினைவில் :(

vasu balaji said...

arumai sir

R. Gopi said...

நன்றாக இருந்தது. பகிர்வுக்கு நன்றி

Chitra said...

நெகிழ்ச்சி.... ஒரு நல்ல குறும்படத்தை பகிர்ந்தமைக்கு நன்றிங்க.

நசரேயன் said...

நான் ௬ட இப்படி ஒண்ணு எடுக்கலாமுன்னு யோசிக்கிறேன்

Asiya Omar said...

பகிர்வு அருமை,எனக்கும் எங்க மெஸ் பார்வதி அக்காவும்,பாட்டியும் நினைவுக்கு வர்றாங்க,சும்மாவா 4 வருடம் அவங்க கையால சாப்பிட்டு இருக்கேனே.மலரும் நினைவுகள்.

தேசாந்திரி-பழமை விரும்பி said...

மீண்டும் கல்லூரி மெஸ் உள்ளே சென்று வந்ததைப் போல ஒரு உணர்வு !
பகிர்வுக்கு நன்றி !

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி