Tuesday, November 2, 2010

தீபாவளி பதிவர்கள் சந்திப்பு..

தீபாவளியை முன்னிட்டு பதிவர் சந்திப்பு சென்னையில் ஒரு சத்திரத்தில் நடந்தது..அதில் கலந்துக் கொள்ளுமாறு புரூனோ அனைவருக்கும் எஸ்.எம்.எஸ்., பண்ணியிருந்தார்..தவிர்த்து அனைவரையும் அலைபேசியில் 'வந்துடுங்க..வந்துடுங்க.." என்று அழைத்தார்.
முதலில் மண்டபத்திற்கு வந்த டோண்டு யாரும் இல்லாததால் தனக்குத் தெரிந்த பதிவர்களை அலைபேசியில் அழைத்து..6 மணிக்கு பதிவர் சந்திப்பு என்றீர்கள்..இதுவரை யாரும் வரவில்லையே..எங்க வீட்டு அம்மா பார்த்தசாரதி கோவிலுக்கு போற வழியில் கார்ல என்னை இறக்கிவிட்டுட்டுப் போயிட்டாங்க என புலம்பத் தொடங்கிவிட்டார்.

அலைபேசி அடித்ததும்..நான் இணை இயக்குநரா இருக்கிற பட ஹீரோயின் அழைக்கறாங்கன்னு நினைச்சு ஆவலா போனை எடுத்தா புரூனோ..'சரி வரேன்..னு சொல்லிட்டு மணிஜீயை அழைச்சுண்டு கிளம்பினா ..வழியில ஒரு கட்டிங் போட்டாத்தான் மணிஜி வருவேன்னு சொல்லிட்டார்..சரின்னு அவரோட கிண்டிவரை போய் கட்டிங் போட்டுட்டு..பக்கத்தில ராமலிங்க விலாஸ் னு ஒரு ஓட்டல்..அங்கே ஃபிஷ் ஃப்ரையை..அளவா உப்பு, காரம் போட்டு தயார் பண்ணுவாங்க..ரொம்ப சூபராயிருக்கும்..அதையும் சாப்பிட்டு பதிவர் சந்திப்புக்குக் கிளம்பினோம்.என்றார் கேபிள்..

இந்தத் தீபாவளியாவது தோழியுடன் கொண்டாடலாம்னு பார்த்தேன்..'ம்..ம்..ம்' என சலித்துக் கொண்டார் கார்க்கி

நான் லோகல்தான்..எக்ஸ்பிரஸோ..மைலோ இல்லை..அதனால என்னாலே லேட்டாய்தான் போகமுடியும் என மெதுவாகக் கிளம்பி வந்தார் ஜாக்கி..

பணத்தைத் தேடித்தான் மக்கள் ஓடறாங்க..சந்திப்பிலே கலந்துக்க பணம் கிடைக்கும்னா..திருட்டு ரயில்/பஸ் ஏறியாவது வந்துவாங்க கூட்டம் என்றார் செந்தில்.

என் வாழ்க்கை திருப்திகரமா போயிட்டு இருக்கு..அதுக்காக நான் யாரையும் போய் பார்க்கணும்ங்கறதில்லே..ஃபெட்னாக்கு போன போது கூட இதை நான் ஒருத்தர்கிட்ட சொன்னேன்..என்றார் அப்துல்லா

நடுவே டோண்டு..'ஆமாம் இந்த சத்திரத்துக்கு எவ்வளவு வாடகை..யார் யார் தராங்க?' 'என வினவினார்..கையில் ஒரு நோட்டு புத்தகத்தைத் திறந்துவைத்துக் கொண்டு.

வண்டியை தாம்பரத்தில விட்டுட்டு..மின்சார ரயில் பிடிச்சு மாம்பலத்திலே இறங்கினா..'ரங்கநாதன் தெரு'வை தாண்டரதுக்குள்ள தாவு தீர்ந்துப் போச்சு என்று ஆதியிலிருந்து சொல்ல ஆரம்பிச்சார் ஆதி.

'இதைத்தான்..'குறுந்தொகை'யில ஒரு பாட்டில சொல்லியிருக்காங்க.வரப்புல ஒரு சமயம் என் நண்பனோட நடந்து வரப்போ..'ந்னு நர்சிம் ஆரம்பிக்க..அவர் இடுகையை படிக்கும் ஞாபகத்தில் அனைத்து பதிவரும்..'அருமை..அருமை..'என்றனர்.

'என் வலைய தமிழ் மக்களே!'என ஆஜரானார் உண்மைத் தமிழன்..நான் சாதாரணமா பதிவர் சந்திப்புக்கு வருவதில்லை..இன்றும் அப்படியே' என்றவரிடம்..பின்ன ஏன் இங்கு வந்தீங்க என மணீஜீ விசாரிக்க..'போடா'ன்னு ஒரு படம் பார்த்தேன்..என்னைச்சேர்த்து 12 பேர் தான் தியேட்டர்ல.பதிவர் சந்திப்புக்கு அதைவிட கொஞ்சமாவது அதிகமாக வருவாங்க்ன்னு தெரியும்..அதனால அந்த பட விமரிசனத்தை இங்கே சொல்லிடலாம்னு..வந்தேன்' என்றார்.

'அண்ணே..அதை முதல்லேயே நான் சொல்லிட்டேன்' என்று குரல் கொடுத்தார் ஜெட்லீ..

நான் ஷூட்டிங்ல பிசியா இருக்கறதாலே அப்படத்தை இன்னும் பார்க்கலை ன்னு கேபிள் வருத்தப்பட்டார்.தன் மொபைல்ல வந்தவங்களை பட்ம் பிடித்தார் காவேரி கணேஷ்.

லக்கியும்,அதிஷாவும்..கூட்டம் டீக்கடைக்கு கிளம்பும் நேரம் வந்து சேர்ந்தனர்.இவர்களுக்காக டீக்கடையில் காத்திருந்த ஜ்யோவ்ராமை சுற்றி மேலும் சிலர் நின்று அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
கூட்டமாக வந்தாலும்..குரூப்..குரூப்பாக டீ ஆர்டர் செய்ய..நாப்பது டீ போட்டோம்..முப்பதுக்குத்தான் காசு வந்ததுன்னு டீக்கடைக்காரர் புலம்பினார்.

ஆமாம்..தீபாவளி பதிவர் சந்திப்புன்னாங்க..தீபாவளிப் பற்றியும் பேசலை..வேற எந்த விஷயங்களையும் எப்போதும் போல பேசலையே என அவரவர் நினைத்துக் கொண்டு பிரிந்தனர்

28 comments:

தேசாந்திரி-பழமை விரும்பி said...

நன்று !

எல் கே said...

அருமை. தீபாவளி வாழ்த்துக்கள்

Bruno said...

:) :)

vasu balaji said...

:)). நானில்லையா சார்

நசரேயன் said...

//
வானம்பாடிகள் said...
:)). நானில்லையா சார்//

அண்ணே நீங்க இல்லாத இடம் எது?

சிவராம்குமார் said...

முடிஞ்சு போச்சா!

Chitra said...

ஹா,ஹா,ஹா.... அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!

Prasanna said...

:) hehe

எம்.எம்.அப்துல்லா said...

// என் வாழ்க்கை திருப்திகரமா போயிட்டு இருக்கு..அதுக்காக நான் யாரையும் போய் பார்க்கணும்ங்கறதில்லே..ஃபெட்னாக்கு போன போது கூட இதை நான் ஒருத்தர்கிட்ட சொன்னேன்..என்றார் அப்துல்லா

//

எங்கன்ணா திருப்தி?? பாக்கதான் பளபளப்பா இருக்கு. தினமும் ஆபிஸில் ரிவிட்டு :)))

தீபாவளி வாழ்த்துகள்

(இப்பயாவது நம்புறீங்களா?? நான் உங்க இடுகைகளை விடாமபடிக்கிறேன், பின்னூட்டம்தான் போடுறதிலைன்னு)

Starjan (ஸ்டார்ஜன்) said...

:))

cheena (சீனா) said...

தீபாவளி - பதிவர்கள் சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற்றது குறித்து மகிழ்ச்சி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஹா.ஹா.. கலக்கல்...

தேவன் மாயம் said...

எங்களுக்கெல்லாம் அழைப்பில்லையா? தீபாவளி வாழ்த்துக்கள்

Ganesan said...

சார்,

அருமை, அப்படியே பதிவர் சந்திப்புல என்ன நடக்குமோ , அதை அழகான புனைவு ஆக்கியுள்ளீர்கள்..

டோண்டூ, ஜாக்கி,நர்சிம், ஆதி,
டீக்கடைகாரர் புனைவு அருமை..

தீபாவளி வாழ்த்துக்கள்

Paleo God said...

ஆமாம்..தீபாவளி பதிவர் சந்திப்புன்னாங்க..தீபாவளிப் பற்றியும் பேசலை..வேற எந்த விஷயங்களையும் எப்போதும் போல பேசலையே என அவரவர் நினைத்துக் கொண்டு பிரிந்தனர்//

ஹா ஹா எத்தினி கூட்டத்தப் பார்த்திருப்போம். :))

ராமலிங்க விலாஸ் ஃபிஷ் ஃப்ரை செம காம்பினேஷனா இருக்கே சார்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Happy Deepavali

துளசி கோபால் said...

:-))))))))))


தீபாவளிக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

a said...

பொங்கலை முன்னிட்ட பதிவர் சந்திப்பிற்கான முன்னோட்ட மா ஏதும் பேசலியா???

ஈரோடு கதிர் said...

:)

மாதேவி said...

:))

இனிய தீபாவளி வாழ்த்துகள்!

நர்சிம் said...

கலக்கல்..

தீபாவளி வாழ்த்துகள்

Unknown said...

நல்ல குசும்பு .. ஆனா ஒவ்வொரு பதிவு சந்திப்பும் இப்படித்தான் நடக்கிறது ...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி

nellai அண்ணாச்சி said...

அன்பு தீபாவளி வாழ்த்துகள்

DREAMER said...

Virtual சந்திப்பு அருமை...

-
DREAMER

கார்க்கிபவா said...

:))))

கார்க்கிபவா said...

:))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி
கார்க்கி ,Dreamer
nellai அண்ணாச்சி