கடந்த பத்து நாட்களாக தீபாவளி போனஸ் கேட்டு..வேலை நிறுத்தம் செய்து, வெற்றி பெற்றனர் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள்..அந்த வெற்றி அந்நிறுவன யூனியன் தலவர் சச்சிதாநந்தனையேச் சேரும் என்றும்..ஊழியர்கள் படும் துன்பங்களை அவர் உணர்ந்து..அவர்கள் நலன் மீது கொண்டுள்ள அன்பையும் பாராட்டி ஊழியர்கள் ஒரு கூட்டம் நடத்தி அன்பளிப்பாக ஒரு பணமுடிப்பும் கொடுத்தார்கள்.
வீட்டிற்குத் திரும்பிய சச்சிதாநந்தன் ..தன் கழுத்தில் கிடந்த மாலையையும்..பணமுடிப்பையையும் மனைவியிடம் கொடுத்தார்.
மனைவி..'என்னங்க ஒரு விஷயம்' என்றாள்.
'என்ன' என அவளை ஏறிட்டார்.
'நம்ம வீட்ல வேலை செய்யறாளே சிவகாமி..அவ தீபாவளிக்கு ஏதாவது பணம் கேட்கறாங்க"
'அடி செருப்பால..அவள் செய்யற வேலைக்கு பணமா..பெரிய கம்பெனில வேல செய்யறா..போனஸ் கேட்குதாக்கும்..பைசா கொடுக்க முடியாது.வேணும்னா வேலையிலிருந்து நின்னுக்கிடட்டும்.நாம வேற ஆள தேடிக்கலாம்' என்றார்.
9 comments:
நச்.
ஊருக்குத்தாண்டி உபதேசம்!!!
உண்மை
அத்த்து! நம்ம தளபதியே ம்ம்ம் போடாம ‘உண்மை’ன்னு ஒரு வார்த்தை போட வெச்சதுன்னா கதையப் பத்தி வேற ஒன்னும் சொல்ல வேணாம்:))
இப்படித்தான் நிறைய பேர் பசுத்தோல் போர்த்தியபடி அலைகிறார்கள்
சார் , எனக்கு தெரிந்து அனைவரும் தன் வீட்டில் வேலைசெயபவர்களை சந்தோசமாகத்தான் வைத்துள்ளார்கள், இப்படி இருப்பது ரொம்ப ரேர் அல்லது இருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன் .
அருமை!
...இதுதான் உண்மையான தொழிலாளர் நலம் விரும்புதல்.
:((
வருகை புரிந்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி
Post a Comment