Thursday, June 11, 2009

சிவாஜி ஒரு சகாப்தம் - 14

1968ல் வந்த படங்கள்

திருமால் பெருமை
ஹரிசந்திரா
கலாட்டா கல்யாணம்
என் தம்பி
தில்லானா மோகனாம்பாள்
எங்க ஊர் ராஜா
லட்சுமி கல்யாணம்
உயர்ந்த மனிதன்

கலாட்டா கல்யாணம்...சிவாஜி..ஜெயலலிதா நடித்து வந்த ஒரு நகைச்சுவை படம்..சி.வி.ராஜேந்திரன் சிவாஜியை வைத்து இயக்கிய முதல் படம்.100 நாள் படம்

என் தம்பி...பாலாஜியின் சொந்த படம்..சிவாஜி, சரோஜாதேவி..100 நாள் படம்

தில்லானா மோகனாம்பாள்...கொத்தமங்கலம் சுப்பு விகடனில் கலைமணி என்ற பெயரில் வந்த தொடர்கதை.சிவாஜி நாதஸ்வர வித்வான். சேதுராமன் சிவாஜிக்கு நாதஸ்வரம் பிண்ணனியில் வாசித்தார்.ஆனால்..உண்மையில் சிவாஜியே வாசிப்பது போல் நடிகர் திலகம் அருமையாக ..அற்புதமாக நடித்தார்..பத்மினி...மோகனாம்பாள் என்ற நடன மங்கை யாக ஈடுகொடுத்தார்.பாலையாவின் நடிப்பும் அருமையாக அமைந்தது.கே.வி.மகாதேவன் இசையில் அனைத்து பாட்டும் அருமை.ஜில் ஜில் ரமாமணியாக மனோரமா..நடித்து..பொம்பளை சிவாஜி என பெயரெடுத்தார்.திரைக்கதை,வசனம்,இயக்கம்..ஏ.பி.நாகராஜன்.மகத்தான வெற்றி படம்.

உயர்ந்த மனிதன்..சிவாஜியின் 125 ம் படம்..16 ஆண்டுகளில் இந்த சாதனை.

125 படம் எடுத்த ஏ.வி.ஏம்., இயக்கிய கிருஷ்ணன்-பஞ்சு ஆகியவர்களே..நடிகர் திலகத்தின் முதல்படமான பராசக்தியிலும் பங்கு கொண்டவர்கள் என்பது தனிச் சிறப்பு.சிவாஜி,வாணிஸ்ரீ, சௌகார் ஜானகி ஆகியோர் நடித்தனர். 100 நாள் படம்.

மற்றபடி..திருமால் பெருமையில்..சிவாஜி நடிப்பு அருமையாய் இருந்தும்...படம் எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை.

ஹரிசந்திரா தோல்வி படம்.

எங்க ஊர் ராஜா...பி.மாதவன் இயக்கம்..படம் சுமாரான வெற்றி.

லட்சுமி கல்யாணம்..கண்ணதாசன் படம்..பாட்டுகள் அனைத்தும் அருமை.ராமன் எத்தனை ராமனடி..இன்னமும் காதில் ஒலிக்கிறது.சிவாஜிக்கு ஜோடி இல்லை இப்படத்தில்.

1969 படங்கள் அடுத்த பதிவில்.

5 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஹரிச் சந்திரா ஹீரோயின் சரியில்ல தல..

ஒரு சீன்ல அம்மா மாதிரி இருக்கு

ஒரு சீன்ல பாட்டி மாதிரி இருக்கு

ஒரு சீன்ல வேலைக்காரி மாதிரி இருக்கு, ஒரு சீன்ல பிச்சக்காரி மாதிரி இருக்கு. என்ன வேசம்போட்டாலும் ராணிவேஷம் போடற ஆட்கள் ராணீமாதிரியே இருக்கணும்.

ஆனா இல்லியே..,

இந்த அம்மா வந்ததாலதான் த்லைவருக்கு இவ்ளோ கஷ்டம்ன்னு மக்கள் ஃபீல் பண்ணியிருப்பாங்களோ....

வெட்டிப்பயல் said...

ஜில் ஜில் ரமாமணியாக மனோரமா..நடித்து..ஆம்பளை சிவாஜி என பெயரெடுத்தார்

பொம்பளை சிவாஜி?

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஜி.வரலட்சுமி கதாநாயகி...நீங்கள் சொல்வது உண்மை சுரேஷ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வெட்டிப்பயல் said...
ஜில் ஜில் ரமாமணியாக மனோரமா..நடித்து..ஆம்பளை சிவாஜி என பெயரெடுத்தார்

பொம்பளை சிவாஜி?//

வருகைக்கும்..தவறை சுட்டிக்காட்டியமைக்கும் நன்றி வால்.மாற்றி விட்டேன் பதிவில்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
ஹரிச் சந்திரா ஹீரோயின் சரியில்ல தல..

ஒரு சீன்ல அம்மா மாதிரி இருக்கு

ஒரு சீன்ல பாட்டி மாதிரி இருக்கு//

ஹரிசந்திரா நீண்டகாலம் தயாரிப்பில் இருந்த படம்..அதனால்..வரலட்சுமி..குமரியாகவும்..அம்மாவாகவும் தெரிவார்.