Friday, June 5, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (5-6-09)

1. மனிதனுக்கு மூன்று குணங்கள்தான் இயற்கை.முதலில் பசி..இரண்டாவது தன் குடும்பத்தை விருத்தி செய்வது..மூன்றாவது பக்கத்திலிருப்பதை அழிப்பது.இந்த மூன்றிற்கும் அடிப்படையான குணம் எல்லாவற்றையும் தனக்கென ஆக்கிக்கொள்வது.

2.பணம்..பெண்..இரண்டுமே போதையானது.அது நல்வழியில் வந்தால் நிற்கும்..கெட்ட வழியில் வந்தால் விட்டு விலகும்.

3.சென்னை ஐ.ஐ.டி.யில் பேராசிரியர்கள் 400 பேர்.இதில் பிராமணர்கள் 282(70%) மற்ற உயர் வகுப்பினர் 40(10%) பிற்படுத்தப்பட்டோர் 40 (10%) தாழ்த்தப்பட்டவர்கள் 3 (.75%), கிறித்துவர்கள் 15
எந்த முஸ்லீமும் இல்லை.மீதி ஜெயின் போன்ற சிறுபான்மையினர்.(ஏதோ பத்திரிகையில் படித்தது)

4.புலியாக இருந்தாலும்..சிறுத்தையாக இருந்தாலும்..கூண்டுக்குள்ளே இருந்தா சவுக்கு அதை தழுவத்தான் செய்யும்.

5.இறைவன் எங்கும் இருக்கிறான் என்கிறீர்கள்...பின் கோவில்கள் எதற்கு..என ஒரு துறவியிடம் கேட்கப்பட்டது.அதற்கு அவர் சொன்னார்..
'சமையல் என்பது விறகு அடுப்பிலும் சமைக்கலாம்..கெரஸின் அடுப்பிலும் சமைக்கலாம்.ஆனால்..அடுப்பும்..அரிசி,பருப்பு,காய்கறிகள் கொண்ட சமையல் பாத்திரம் மட்டுமே இருந்தால் சமையல் தயாராகிவிடுமா?
அதற்கு நெருப்பு வேண்டும்.அதாவது நெருப்பு என்ற ஈர்ப்பு இருந்தால் மட்டுமே சமைக்க முடியும்.அதுபோல ஆன்மீகத்தை அடைய பக்தர்களுக்கு ஒரு ஈர்ப்பு தேவைப்படுகிறது..அதற்குத் தான் கோவில்கள் ' என்றார்.
(இதற்கு சிங்கை கோவியானந்தா விடமிருந்து மறுப்பை எதிர்ப்பார்க்கிறேன்)

6.ஒரு ஜோக்...

என் பையன் படிப்பு கெட்டுடும்னு நான் டீ.வி.யே வாங்கலே..
பரவாயில்லையே..ஆமாம் உன் பையன் எங்கே?
பக்கத்து வீட்ல டீ.வி., பார்க்க போயிருக்கிறான்.

14 comments:

அக்னி பார்வை said...

:))))))))))))))

கோவி.கண்ணன் said...

//(இதற்கு சிங்கை கோவியானந்தா விடமிருந்து மறுப்பை எதிர்ப்பார்க்கிறேன்)
//

கோவில்கள் 'கூடாது' என்றேன் ஏன் அதில் சைவ வைணவ சண்டை நடப்பதாலா ? இல்லை இல்லை கொள்ளையர்களின் கூடாரமாகிவிட்டது என்பதற்காக !
:)

*இயற்கை ராஜி* said...

:-)))

வால்பையன் said...

கோவில் மேட்டருக்கு!

இப்பெல்லாம் அடுப்பில்லாமயே சமைக்கலாம்! அதுக்காக கடவுள் இல்லைன்னு ஒத்துக்க போறிங்களா என்ன?

உவமை சொல்லியே கடவுளை வளர்க்குறிங்க!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//6.ஒரு ஜோக்...

என் பையன் படிப்பு கெட்டுடும்னு நான் டீ.வி.யே வாங்கலே..
பரவாயில்லையே..ஆமாம் உன் பையன் எங்கே?
பக்கத்து வீட்ல டீ.வி., பார்க்க போயிருக்கிறான். //

நேற்றைய மொக்கை; இன்றைய நகைச்சுவை; நாளைய தத்துவம்

ஓட்டுக்கள் போட்டாச்சு தல..,

கடைக்குட்டி said...

//.அதுபோல ஆன்மீகத்தை அடைய பக்தர்களுக்கு ஒரு ஈர்ப்பு தேவைப்படுகிறது..அதற்குத் தான் கோவில்கள் ' //

கேட்கவே வேடிக்கையாக இல்லை???

ஆன்மீகத்திற்க்கு எதற்கு ஈர்ப்பு??

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி

அக்னி பார்வை
சிவா
உடன்பிறப்பு

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கோவி.கண்ணன் said...
//(இதற்கு சிங்கை கோவியானந்தா விடமிருந்து மறுப்பை எதிர்ப்பார்க்கிறேன்)
//

கோவில்கள் 'கூடாது' என்றேன் ஏன் அதில் சைவ வைணவ சண்டை நடப்பதாலா ? இல்லை இல்லை கொள்ளையர்களின் கூடாரமாகிவிட்டது என்பதற்காக !
:)//

கோவியானந்தாவின் வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி இய‌ற்கை

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வால்பையன் said...
கோவில் மேட்டருக்கு!

இப்பெல்லாம் அடுப்பில்லாமயே சமைக்கலாம்! அதுக்காக கடவுள் இல்லைன்னு ஒத்துக்க போறிங்களா என்ன?

உவமை சொல்லியே கடவுளை வளர்க்குறிங்க!//

வால்...முதலில் ஒன்றை தெளிவு படுத்த விரும்புகிறேன்...முதலில் இது என் கருத்து அல்ல..
இப்போதெல்லாம்..சுண்டலின் சுவை வாலின் பின்னூட்டத்தால் அதிகரிப்பதாக ஒரு தகவல்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
//6.ஒரு ஜோக்...

என் பையன் படிப்பு கெட்டுடும்னு நான் டீ.வி.யே வாங்கலே..
பரவாயில்லையே..ஆமாம் உன் பையன் எங்கே?
பக்கத்து வீட்ல டீ.வி., பார்க்க போயிருக்கிறான். //

நேற்றைய மொக்கை; இன்றைய நகைச்சுவை; நாளைய தத்துவம்

ஓட்டுக்கள் போட்டாச்சு தல..,//

உங்கள் பதிவு படித்தேன்..என் மனக்குமுறலும் அதுதான்.நெகடிவ் வோட் படுங்கள்..பரவாயில்லை..ஆனால்..தேவையில்லாம...சாதாரண நகைச்சுவை பதிவுக்கெல்லாம் எனக்கு நெகடிவ் ஓட்டு விழுகிறது.ஆனால்..இதைப் பற்றி பெரிதும் கவலைப்படுவதில்லை..இத்னால்..படிவை படிக்கும் நண்பர்களும் குறையப் போவதில்லை.
நன்றி சுரேஷ்..ஆமாம்..அது என்ன திடீரென..பழனியிலிருந்து என்கிறீர்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கடைக்குட்டி said...
ஆன்மீகத்திற்க்கு எதற்கு ஈர்ப்பு??//

அதுதானே..

கவிக்கிழவன் said...

இலங்கையில் இருந்து யாதவன்
வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கவிக்கிழவன்