Tuesday, June 9, 2009

பதிவர்களுக்கு ஒரு பரிட்சை...

அது மதுவிலக்கு அமுலில் உள்ள நாடு.அந்நாட்டிற்கு விஜயம் செய்தனர் மூன்று தமிழர்கள்..

மது அருந்தினர்...அந்நாட்டு மன்னனுக்கு இவ்விஷயம் தெரிந்தது,,உடனே மூவரும் கைது செய்யப்பட்டு..அரசன் முன் நிறுத்தப் பட்டனர்.

ஒவ்வொருவருக்கும் நூறு கசையடி கொடுக்க மன்னன் உத்த்திரவிட்டான்..உத்தரவை காவலாளிகள்..நிறைவேற்ற ஆயத்தமாயினர்.அப்போது அங்கு வந்த ராணி அன்று தனது பிறந்த நாள் என்றும்..குற்றவாளிகளுக்கு.. கசையடி கொடுப்பதற்குமுன்..அவர்களின் ஏதேனும் ஒரு ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றும்..ஆணையை மாற்ற சொல்ல...அரசரும் ஒப்புக் கொண்டார்.

முதல் தமிழன்..தன் முதுகில் பாகிஸ்தானி ஒருவனை கட்டிவிட்டு...கசையடி கொடுங்கள் என்றான்...தண்டனை அப்படியே நிறைவேற்றப்பட்டது..முதுகில்தானே கசையடி பலமாக விழும்.இவன் ஓரளவு தப்பித்துக் கொண்டான்.

அடுத்தவன்..தன் முதுகில் ராஜபக்சேவை கட்ட வேண்டும் என்றான்.அரசியல் விஸிட்டாக ராஜபக்சே அங்கு இருந்தார்.அவன் முதுகில் ராஜபக்சே கட்டப்பட...தண்டனை நிறைவேறியது.கசையடியை ராஜபக்சே பெற்றுக் கொண்டார்.

மூன்றாவது தமிழன்..தன் முதுகில் ஒரு தமிழனும்...முன்னால் ஒரு தமிழனும் கட்டப்பட வேண்டும் என்றான்.அப்படியே தண்டனை நிறைவேறியது.

இக்கதையால் அறியும் நீதி என்ன?

18 comments:

மயாதி said...

மூன்றாவது தமிழன் யாரு மாண்பு மிகு தமிழ் இனத் தலைவ(ர்) லி கருணாநிதி தானே !

தீபக் வாசுதேவன் said...

இதை ஒரு கேள்வி பதில் போல் நீங்கள் வைத்திருக்கலாம். :)

நையாண்டி நைனா said...

/*இக்கதையால் அறியும் நீதி என்ன? */
ஹி...ஹி...ஹி....
இனி ஐயா T.V.R.K பதிவுக்கு போகவே கூடாதுங்குறது தான்.
ஹி...ஹி...ஹி....

பயப்புடாதீங்க நீதியை என்னிக்கும் தமிழன் கேட்க மாட்டான்.

கோவி.கண்ணன் said...

//இக்கதையால் அறியும் நீதி என்ன?//

"நீதி" மட்டும் தப்பிவிட்டது, அதையும் கட்டிவைத்து உறித்திருக்கலாம்.
:)

கோவி.கண்ணன் said...

ஒரு சின்ன திருத்தம் நீதி இல்லை நிதி !
:)

ILA (a) இளா said...

ஏன் இப்படி? நம்மள நம்மளே தாழ்த்திக்கனுமா?

Kanchana Radhakrishnan said...
This comment has been removed by the author.
T.V.ராதாகிருஷ்ணன் said...

//மயாதி said...
மூன்றாவது தமிழன் யாரு மாண்பு மிகு தமிழ் இனத் தலைவ(ர்) லி கருணாநிதி தானே !//

T.V.ராதாகிருஷ்ணன் said...

//தீபக் வாசுதேவன் said...
இதை ஒரு கேள்வி பதில் போல் நீங்கள் வைத்திருக்கலாம். :)//

கலாம்
வருகைக்கு நன்றி தீபக் வாசுதேவன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நையாண்டி நைனா said...
/*இக்கதையால் அறியும் நீதி என்ன? */
ஹி...ஹி...ஹி....
இனி ஐயா T.V.R.K பதிவுக்கு போகவே கூடாதுங்குறது தான்.//
வரல்லேனா..அவ்வளவு ஈஸியா உங்களை விட்டுடுவேனா நைனா..

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கோவி.கண்ணன் said...
ஒரு சின்ன திருத்தம் நீதி இல்லை நிதி !//

:-))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ILA said...
ஏன் இப்படி? நம்மள நம்மளே தாழ்த்திக்கனுமா?//


தமிழ்நாட்டில் இதுதானே நடந்துக் கொண்டிருக்கிறது இளா..

கடைக்குட்டி said...

//இதை ஒரு கேள்வி பதில் போல் நீங்கள் வைத்திருக்கலாம். :)//

ரிப்பிட்டேய்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கடைக்குட்டி said...
//இதை ஒரு கேள்வி பதில் போல் நீங்கள் வைத்திருக்கலாம். :)//

ரிப்பிட்டேய்..//

ஆமாம்...ஏன் செய்யவில்லை?ம்ம்ம்...

வருகைக்கு நன்றி கடைக்குட்டி

நசரேயன் said...

பதில் தெரியலை .. இதுதான் சரியான விடையா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

இளாவின் பின்னூட்டத்துக்கு..என் பதிலைப் பாருங்கள்..ஓரளவு விடை கண்டுபிடித்து விடலாம்..நசரேயன்

மங்களூர் சிவா said...

:)))))))))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

// மங்களூர் சிவா said...
:)))))))))))//

வருகைக்கு நன்றி சிவா