Friday, June 12, 2009

வாலிப கவிஞர் வாலியின் காதல் கவிதை...

வாலி...திரைப்பட பாடலாசிரியர்..கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக அசைக்க முடியா சக்தியாய் இருக்கிறார்.அன்று..கண்ணதாசனையும் சந்தித்தவர்..இன்றைய இளம் பாடலாசிரியர்களுக்கும் சிம்ம சொப்பனமாய் இருப்பவர்.

அவர்..ஆரம்பகால ..காதல் கடிதம் எப்படி இருந்தது தெரியுமா?

பேசும் தெய்வம் படத்தில் வந்த அந்த பாடல்...

நான் அனுப்புவது கடிதம் அல்ல
உள்ளம்
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல
எண்ணம்
உன் உள்ளமதை கொள்ளைக் கொள்ள

நிலவுக்கு வான் எழுதும் கடிதம்
நீருக்கு மீன் எழுதும் கடிதம்
மலருக்கு தேன் எழுதும் கடிதம்
மங்கைக்கு நான் எழுதும் கடிதம்

எழுதி அனுப்புவது கடிதம் அல்ல
உள்ளம்
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல
எண்ணம்
உன் உள்ளமதை கொள்ளைக் கொள்ள

எத்தனையோ நினைத்திருக்கும் நெஞ்சம்
ஏட்டளவில் சொன்னதெல்லாம் கொஞ்சம்
என் மனமோ உன்னிடத்தில் தஞ்சம்
உன் மனமோ நான் துயிலும் மஞ்சம்


என்னவொரு...எளிமையான அருமையான காதல் கடிதம்...

அவரின் துரதிருஷ்டம்..அந்நாளில் இவரின் பல பாடல்கள்..கண்ணதாசன் எழுதியவை என மக்கள் நினைத்ததுதான்..அப்படி ஒரு பாடல்
இருமலர்கள் படத்தில் வரும்..'மாதவி பொன்மயிலாள்"

பட்டுக்கோட்டையாரும்...இவர் எழுத்தில் ஒளிந்துக் கொண்டிருந்தார் என நிரூபிக்கும் பாடல்..;நான் ஆணையிட்டால்.

அதில் வரும் வரிகள்

ஒரு தவறு செய்தால்-அதை
தெரிந்து செய்தால்-அவன்
தேவன் என்றாலும் விடமாட்டேன்-உடல்
உழைக்க செய்வேன் அதில்
பிழைக்கச் செய்வேன் அவர்
உரிமைப் பொருள்களைத்
தொடமாட்டேன்.

வாலி...ஏற்ற பெயர்.அவர் எதிராளியின் பலம் கூட அவரைப் பார்த்தால்..பாதி அவருக்கே போய்விடும்..இது நிதர்சனமான உணமை

17 comments:

அகநாழிகை said...

வாலி நல்ல பாடல்களை தந்துள்ளவர்தான் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதேசமயம், பல மோசமான பாடல்களை தந்து அவப்பெயரை ஏற்படுத்திக் கொண்டார். ஒருவர் எவ்வளவு நல்லது செய்தாலும் அதைப்பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. வெள்ளை சட்டை போட்டாலும் அதிலிருக்கும் சிறு புள்ளியைக் காட்டி என்ன கறையாய் இருக்கிறதே என்பார்கள்.

வாலியின் நல்ல சில பாடல்களை நினைவு கூர்ந்து பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

‘அகநாழிகை‘ பொன்.வாசுதேவன்

மகுடம் மோகன் said...

நண்பரே, "நான் அனுப்புவது கடிதம் அல்ல" என்ற பாடல் பேசும் தெய்வம் படத்தில் இடம் பெற்றது,

எம்ஜிஆரின் பல வெற்றி படங்களுக்கு வாலியின் பாடல்கள் பெரும்துணையாக இருந்துள்ளன,

அன்புடன்,மகுடம் மோகன்.

ஸ்ரீ.... said...

//அவரின் துரதிருஷ்டம்..அந்நாளில் இவரின் பல பாடல்கள்..கண்ணதாசன் எழுதியவை என மக்கள் நினைத்ததுதான்..//

உண்மையான வார்த்தைகள். இதே கஷ்டத்தைக் கண்ணதாசனும் அனுபவித்திருக்கிறார். அற்புதமான பதிவு.

ஸ்ரீ....

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி தமிழினி

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஆம்..வாசு.நீங்கள் சொல்வது உண்மைதான்..
வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//MAGUDAM MOHAN said...
நண்பரே, "நான் அனுப்புவது கடிதம் அல்ல" என்ற பாடல் பேசும் தெய்வம் படத்தில் இடம் பெற்றது,//

வருகைக்கும்...தவறை சுட்டிக்காட்டியமைக்கும் நன்றி
பதிவில் மாற்றிவிட்டேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி ஸ்ரீ....

சரவணகுமரன் said...

//கண்ணதாசன் எழுதியவை என மக்கள் நினைத்ததுதான்..//

ஆமாம் சார், இது வேற ஒரு பிரச்சினை...

இதையும் பாருங்க

http://www.saravanakumaran.com/2009/06/blog-post_12.html

கோவி.கண்ணன் said...

தமிழா...தமிழா..தமிழா... உன் தமிழுக்கு... பெயர் தான் அமிழ்தா ?

:)

இது வாலி எழுதிய பாடல்,

படம் ?
எஸ்ஜே சூர்யாவின் அஆ !

மயிலிரகே மயிலிரகே... பாடலில் இருக்கும் வரிகள் தான் அது.

வாலி எப்போதும் கலக்கல் தான். மற்ற கவிஞர்களை விட வாலியின் வரிகள் எனக்கு மிக மிக பிடிக்கும்.

கோவி.கண்ணன் said...

//மயிலிரகே மயிலிரகே...
//

தட்டச்சுப் பிழை

மயிலிறகே மயிலிறகே... ன்னு இருக்கனும்

கோவி.கண்ணன் said...

மேலே கொடுத்த இணைப்பில் வேறப் பாட்டைப் போட்டு ரீ மிக்ஸ் பண்ணி இருக்கிறார்கள்.

இது தான் சரியான சுட்டி

மணிகண்டன் said...

சூப்பர் பதிவு சார். வாலி என்னிக்குமே டாப் தான்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//சரவணகுமரன் said...
//கண்ணதாசன் எழுதியவை என மக்கள் நினைத்ததுதான்..//

ஆமாம் சார், இது வேற ஒரு பிரச்சினை...

இதையும் பாருங்க//

படித்தேன் சரவணன்..ஆமாம்..நம்ம பதிவு பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு.அப்பப்ப வாங்க

T.V.ராதாகிருஷ்ணன் said...

// கோவி.கண்ணன் said...
வாலி எப்போதும் கலக்கல் தான். மற்ற கவிஞர்களை விட வாலியின் வரிகள் எனக்கு மிக மிக பிடிக்கும்.//

ஆம்....எனக்கும் மிகவும் பிடிக்கும்.
வேறொரு பாடலில்..
மதுரையில் பிறந்த மீன் கொடியை' என ஆரம்பித்து..பெண்ணை வர்ணிப்பார் .
வாலி...வாலிதான்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மணிகண்டன் said...
சூப்பர் பதிவு சார். வாலி என்னிக்குமே டாப் தான்.//
உங்க ஊர்க்காரர் என்றால்..எந்த குறையும் சுட்டிக்காட்டாது பின்னூட்டம் இடுவதா மணி...இது சரியில்லை.
:-)))

நசரேயன் said...

வாலி ஒரு நல்ல கவிஞர், இதை நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, அவரின் வரிகள் சொல்லும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
இதை நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை//

:-))))