Sunday, June 21, 2009

சாதூர்ய பேச்சு

ஒரு மனிதனின் வெற்றி..அவன் படித்த படிப்பினால் மட்டும் அமைவதில்லை.ஓரளவு பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
கதையாய் இருந்தாலும்..சாவித்திரியின் சாதூர்யம் தான் அவளது கணவனது வாழ்வை காப்பாற்றியது.
பலமுறை அரசரின் மரணதண்டனையிலிருந்து தெனாலிராமனின் வாக்கு சாதூர்யம் காப்பாற்றியிருக்கிறது.
பீர்பாலின் சாதூர்ய பேச்சு கதைகளையும் நாம் அறிவோம்.ஹேமனாத பாகவதரை மதுரையிலிருந்து துரத்தி அடித்தது சிவனின்(?)சாதூர்யம்.
நம் ஊர்களில்..குப்பை பொருள்களையும்..சாதூர்யமாகப் பேசி நம் தலையில் கட்டிவிடும் விற்பனை பிரதிநிதிகளை நாம் அறிவோம்.
நம்மை பற்றி நம் பெற்றோர்கள் கவலைப்படும்போது சொல்லக்கூடிய வார்த்தை'கொஞ்சம் கூட சாமர்த்தியம் போறாது இவனுக்கு" என்பதுதான்.

இப்போது ஒரு சிறு கதை.

ஒரு கம்பனியில் செகரட்டரி வேலைக்கு பலர் நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தனர்.அவர்களிடம் கேட்கப்பட்ட ஒரே கேள்வி'பத்தடி ஆழம்..பத்தடி அகலம்கொண்ட குழியில் நீ வீழ்ந்து விட்டால் எப்ப்டி வெளியே வருவாய்?'என்பதுதான்.
கத்திக் கூப்படு போடுவேன் என்றான் ஒருவன்..
தத்தி தத்தி ஏறிடுவேன் என்றான் ஒருவன்.இவர்கள் யாருக்கும் வேலை கிடைக்கவில்லை.
கடைசியில் ஒருவன் கேட்டான்
'தாழ்ந்த மரக்கிளை ஏதாவது குழிக்கருகில் இருந்ததா?'.
'இல்லை'என்றனர் தேர்வுக் குழுவினர்.
'நான் விழுந்தது..பகலிலா..அல்லது இரவிலா'
'ஏதற்குக் கேட்கிறாய்?'-தேர்வுக்குழுவினர்.
இவன் சொன்னான்'பகலில் குழியில் விழ நான் குருடன் இல்லை..அஜாக்கிரதையானவனும் அல்ல.அடுத்தவர் மரத்திலிருந்து திருட்டுப் பழம் பறித்துத் தின்னும் மோசமானவனும் இல்லை.அதனால் கிளை முறிந்து குழியில் விழ வாய்ப்பில்லை.'
அவன் பதில் திருப்தி ஏற்படுத்தியது குழுவினர்க்கு.
அவனது வாக்கு சாதூர்யம் வேலை வாங்கிக் கொடுத்தது.

சாதுர்யப் பேச்சு காரிய சாதனையைக் கொடுக்கும்

12 comments:

goma said...

உண்மையிலும் உண்மை,
எனக்கு அது பத்தாது.பேனாவின் அழுத்தம் திருத்தம் பேச்சில் வராது.நியாயம் கூட என் சாதுர்யம் இன்மையால் அடிபட்டு போகும்.நான்
கற்றுக் கொள்ள வேண்டிய கலையில் இதுவும் ஒன்று.வாத்தியார் தேடிக் கொண்டிருக்கிறேன்

*இயற்கை ராஜி* said...

unmai...pechal ethaiyum saathikkalaam

வருண் said...

Yes, it depends on what kind job he has been interviewed for. For a sales repjob, it is an interesting answer but for a job which needs hard work and dedication, it might sound like this guy just knows how to talk. They might look for someone who talks less and work more there :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

எனக்கும் எந்த வாத்தியாரும் தெரியாது..தெரிந்தால் சிபாரிசு செய்வேன்.வருகைக்கு நன்றி கோமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி இய‌ற்கை

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வருண் said...
Yes, it depends on what kind job he has been interviewed for. For a sales repjob, it is an interesting answer but for a job which needs hard work and dedication, it might sound like this guy just knows how to talk. They might look for someone who talks less and work more there :)//

பேச்சு சாதுர்யத்தைப் பற்றிய கதை இது.எல்லா இடத்திலும் இது பலிக்காது.சில நேரத்தில் அதிகப்பிரசங்கி என்ற பட்டத்தை வாங்கித் தந்து விடும்.வருகைக்கு நன்றி வருண்.

அக்னி பார்வை said...

சின்ன சிறுகதை சூப்பர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அக்னி

நையாண்டி நைனா said...

any "UL KUTHU" on current politics....
hahahaha summaa thaan ketten.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நையாண்டி நைனா said...
any "UL KUTHU" on current politics....
hahahaha summaa thaan ketten.//

:-))))

நசரேயன் said...

உண்மை

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
உண்மை//


நன்றி நசரேயன்